Team meeting

நம்ம மதிய சாப்பாடு முடிச்சிட்டு , மெதுவா உள்ள போவோம். போகும்போதே மீட்டிங் ஆரம்பிச்சு 5 நிமிஷம் ஆயிருக்கும்.
மேனேஜர்: என்னப்பா மீட்டிங்க்கு இப்படி லேட்டா வர்ற???
நான்:சாரி, எனக்கு மீட்டிங் இருக்குன்னே தெரியாது....
மேனேஜர்: காலைல மெயில் அனுப்பினேன், பாக்கல???

'ஏன்யா , நீ உக்காந்திட்டிருக்கற chair'a 90 டிகிரி  திருப்புனா உன் தொப்ப என் மேல இடிக்கற அளவுக்கு பக்கத்துல இருந்துக்கிட்டு, மீட்டிங் இருக்கறத வாய்ல சொல்லாம, மெயில்ல தான் அனுப்புவியா?? ' அப்படின்னு கேக்க தோணும்,
 ஆனா நம்ம கண்ணாடி ரூம்ல, குழு குழு ACல , ஜாக்கி ஜட்டி போட்டு, லூயிஸ் பிலிப் சட்டய டக் இன் பண்ணி உக்காந்திட்டிருக்கற ஒரு corporate employee, இப்படியெல்லாம் கேள்வி கேக்க கூடாதுன்னு ஒரு கோட்பாடு/சித்தாந்தம் இருக்குன்னு ஞாபகத்துக்கு வரும்.
'சாரி, அடுத்த தடவ டைம்க்கு வந்துடறேன்'னுட்டு உக்காரவேண்டியதுதான்.

ITல ஒரு டீம்ன்னு எடுத்துகிட்டா, இப்பதான் கம்பனிக்கு வந்த freshers சில பேர், கொடுக்கற வேலைய அமைதியா செய்யற சில பேர், வேலைய செஞ்சுட்டு over build up கொடுக்கற பல பேர் ,onsite இன்னும் கிடைக்கலயேன்னு கவலைல சில பேர், onsite போய்ட்டு வந்துட்டு 'நான்தான் நான்தான் 'ன்னு குதிக்கிற சில பேர்ன்னு ஒரு 10 - 15 பேர் இருப்பாங்க.

இதுவரைக்கும் Team/Project கடந்து வந்த பாதை என்ன?, இனிமே நம்ம போக போறது சிங்க பாதையா பூப்பாதையா சுரங்கப்பாதையான்னு seriousa discuss பண்றதுக்குதான் team meeting.

 Manager ஆரம்பிப்பார, 'Let us start with positive points, போன quartera விட இந்த quarter நல்ல customer satisfaction index வந்திருக்கு, incident count கொறஞ்சிருக்கு...' அப்டீன்னு பொதுவா ப்ராஜெக்ட் பத்தி பேசிட்டு, team membersக்கு வருவார்....

 மொதல்ல freshers கிட்ட கேப்பார் , "Howz environment here? everything ok?" அவங்களும் ஓகேன்னு சொல்லுவாங்க.... "You r lucky to be in this project ,work pressure இருக்காது, நல்ல technology, career growth நல்லா இருக்கும், 2 -3 yearsல onsite oppurtunity எல்லாருக்கும் இருக்கும்". இப்படி 3 வருஷத்துக்கு முன்னால நா சேரும்போது சொன்ன அதே டயலாக்க வரி மாறாம சொல்லுவார்....  'சார் இந்த "நல்ல learning curve "இருக்கும்'ங்கறத சொல்ல மறந்துடீங்கன்னு நமக்கு சொல்ல தோணும்.

Teamல சில பசங்க ego, appraisal, rating, onsite, இத எல்லார்த்தையும் விட்டுட்டு, எல்லாரோடையும் நல்லா பேசிட்டு, குடுத்த வேலைய மட்டும் பண்ணிட்டு போயிட்டு இருப்பானுக , அவங்கள பாத்து "உங்களுக்கு teamல visibilityயே இல்ல. Onsite managerக்கு உங்க பேர் கூட தெரில.... நீங்க teamமோட இன்னும் நல்லா mingle ஆகணும்"ன்னு சொல்லுவார் .

"இன்னும் சில பேருக்கு ஒழுங்கா மெயில் கூட அனுப்ப தெரில,Presentation கெல்லாம் ppt create பண்ணி present பண்ண தெரில...technical work மட்டும் தெரிஞ்சு presentation ,mail etiquette தெரிலன்னா team lead position வர்றதே கஷ்டம் பாத்துக்கோங்க"ன்னு  நம்மள குத்திக்காட்டுற மாதிரியே சொல்லுவார்.

"ஆமா, power point presentation ,mail etiquette மட்டும் தெரிஞ்சு technical workகே தெரிலன்னா easyயா manager positionku வந்துரலாம்" அப்டீன்னு  நமக்கு சொல்ல தோணும்,   'corporate...! corporate...! இப்படியெல்லாம் பேச கூடாது'ன்னு control பண்ணிக்க வேண்டியது தான்.சில பேர் வேலையும் செஞ்சுட்டு , பில்ட் அப்பும் கொடுத்துட்டு,Dependancy create  பண்ணி வெச்சுக்கிட்டு இருப்பாங்க, அவங்க தான் heroes. அவங்களுக்குதான் 'Keep up the good work' எல்லாம்.

IT வேலைல முக்கியமான ஒன்னு Dependancy.
Dependancyனா என்ன?
நம்ம பாக்கற ஏதாவது ஒரு வேலய யாருக்கும் சொல்லி தர கூட்டாது.
நம்ம வேலையே காலைல ஒரு தடவ சாய்ந்தரம் ஒரு தடவ username password கொடுத்து ஒரு servera login பண்ணி run_daily.batch அப்டிங்கற ஒரு fileல double click பண்றதா தான் இருக்கும்.
ஆனா அத யாருக்கும் சொல்லி தர கூடாது. நம்ம ரெண்டு நாள் office வரலன்னா projecte ஸ்தம்பிச்சு போயரனும். Onsite manager, நம்ம personal numberக்கு கால் பண்ணனும். அப்பத்தான் visibility கிடைக்கும்.

சில பேர் onsite கிடைக்கலன்னு கடுப்புல இருக்கறது managerக்கு தெரியும். அவங்க கிட்ட "Next month உனக்கு VISA initiate பண்ணிரலாம்" அப்டின்னு வாக்குறுதி கொடுத்துருவார். 
manager சொன்ன ஒரு வார்த்தைய நம்பிட்டு , காலைல எழுந்திருச்ச உடனே மொத ஆளா போய் ஆபீஸ தெறந்து வெச்சு,
night வரைக்கும்  எல்லா வேலையும் இழுத்து போட்டு செஞ்சு
பத்தாயிரத்துக்கு friendsக்கு treat வெக்கறது;
ஐம்பதாயிரத்துக்கு shopping பண்றது,
வீட்ல சொல்லி ஜாதகத்த தரகர் கிட்ட கொடுத்து 'UK/US மாப்பிள்ளை'ங்கற tagஓட பொண்ணு பாக்க சொல்றது,
இப்படி எல்லாம் பண்ணிரவே கூடாது.... 'visa initiate பண்றேன்' அப்டின்னு manager வாக்குறுதி கொடுக்கறது , தர்மசேனா கொடுக்கற LBW decision மாதிரி, சும்மா சும்மா கேட்டுட்டே இருக்கானேன்னு கொடுத்துருவாரு....
அடுத்து decision review மாதிரி,  meeting போட்டு, lotல  select ஆகல , projectல budget இல்ல,onsiteல vacancy இல்ல, அது இதுன்னு சொல்லி சமாளிச்சிருவாங்க ...Onsite போறது, flightல கால் எடுத்து வெக்க வரைக்கும் உறுதி இல்ல.

அடுத்து ப்ராஜெக்டோட future plans, Automation அப்படி  இப்படின்னு ஏதாவது பேச ஆரம்பிப்பார். அப்படியே தூக்கம் சொக்கிடும்.
ஒரு 10 நிமிஷம் கழிச்சு "நவநீதகிருஷ்ணன்,அமைதியாவே உக்காந்திருக்கீங்க, do you have any queries/suggestions or shall we finish it off?ன்னு மேனேஜர் குரல் கேக்கும்.
'Nothing, we can finish'ன்னு சொல்லிட்டு வெளிய போனா, ஒரு fresher வந்து கேப்பான்,

"என்னண்ணா, ரெண்டு வருஷத்துல onsite அனுப்புவாங்களா?"