அவள்

சோழிங்கநல்லூர் சிக்னல், லேசான மின்னல்,AC பஸ் ஜன்னல், செம அழகா ஒரு பொண்ணு. வேகமா போய் அதே பஸ்ல ஏறி அவ உக்காந்திருந்த கடைசி சீட் பக்கத்துல போய் நின்னேன்.
வழக்கமான IT பொண்ணுங்க மாதிரி தூரத்துல பாத்தா செம அழகா தெரிஞ்சிட்டு, கிட்டத்துல படு மொக்கையா இல்லாம, இவ Close upலயும் செம அழகா இருந்தா.
பக்கத்துல உக்காந்திருக்கற ரெண்டு பசங்க friends கிட்ட பேசிட்டு இருந்தா.மூணு வருஷம் ITல இருந்ததுக்கு அப்புறம், ஒரு அழகான பொண்ணு ரெண்டு மூணு பசங்க கிட்ட பேசிட்டு இருந்தா வைத்தெரிச்சல் எல்லாம் வர்றதே இல்ல....உடம்பு அதுவா பல hormones, enzymesஓட சேர்த்து  gelusilலும் secrete பண்ண ஆரம்பிச்சிருச்சு போல....

அவள பாத்துட்டே நின்னுட்டு இருந்தேன்....

9th standardல ஒரு தடவ எங்க வாத்தியார் கேட்டார், "உலகத்துலேயே அழகானது என்ன?'ன்னு.... நாங்களும் ஐஸ்வர்யா ராய்ல இருந்து அடுத்த வீடு அல்சேசன் நாய் வரைக்கும் ஏதேதோ சொன்னோம்.
அவர் சொன்னார் 'இந்தியா தாண்டா உலகத்துலேயே அழகு, குங்குமப்பூ பூக்கற kashmir valley,அழகா ஓடற rivers அதோட branches, தங்கம் வைரம் விளையற இடங்கள்,
-30 degree C பனிப்பாறைல இருந்து +45 degree C பாலைவனத்து வரைக்கும் உள்ள climates, சாப்பாடுக்கு கொஞ்சம் கஷ்டம்நாலும் அவ்ளோ அழகா இருக்கற North eastern states.....
அதோட , இன்னும் யாருமே எட்டி பாத்தராத மலை சிகரங்கள், யாருமே கால் வெக்காத காடுகள், அந்த காலத்து பழைய பாரம்பரியத்துல இருந்து நேத்து வந்த technology வரைக்கும் உள்ள infrastructure.... இன்னும் எவ்வளவோ இருக்கு
அந்த காலத்துல இருந்து இந்தியாவோட வளம் தெரிஞ்சவங்க எல்லாருமே அத ஆளனும்னு ஆசப்பட்டிருப்பாங்க...."

இப்ப இவள பாத்தா உடனேயும் அவர் சொன்னது தான் ஞாபகம் வந்துச்சு. குங்குமப்பூ பூத்த kashmir valley மாதிரி கன்னம்,வைரம் விளைஞ்ச வாய், நதி மாதிரி அவ கை, branches மாதிரி அவ விரல்,
சாப்பாடுக்கு கொஞ்சம் கஷ்டம் மாதிரி தெரிஞ்சாலும் அவ்ளோ அழகா இருக்கற அவ இடுப்பு, இன்னும் யாருமே எட்டி பாத்தராத மலை சிகரங்கள், காடுகள்,அவ சிரிச்சா -30 degree அவ மொறச்சா +45 degree,
நம்ம ஊரு பாரம்பரியமா,தலைல மல்லிகைப்பூ, கைல latestடா வந்த iPhone5...இன்னும் எவ்வளவோ அழகு....
அந்த பஸ்ல அவள பாத்தவங்க எல்லாருமே அவள ஆளனும்னு நினைச்சிருப்பாங்க....

ரொம்ப நேரம் அவள  நின்னு பாத்துட்டே வந்துட்டு இருந்தேன்....



ஆனா அவ வெளியுறவு கொள்கையும் இந்தியா மாதிரியேதான் இருந்துச்சு....பக்கத்துல உக்காந்திருந்த அவளோட friends ரெண்டு பேரும் அவள கடுப்பேத்திட்டே வந்திட்டு இருந்தாங்க.... அவ அவங்கள திட்டவும் முடியாம உக்காந்திட்டு இருந்தா....
அதுலயும் ஒருத்தன் அப்பப்ப எல்லை மீறி அவ தோல் மேல கை போட்டான்.... அந்த கையக்கூட 5 நிமிஷம் கழிச்சு தான் தட்டி விட்டா....
நானும் அவ பக்கத்துலையே, அவ கண் பார்வை கொஞ்சமாவது என மேல திரும்பாதான்னு இலங்கை தமிழர் மாதிரி நின்னுட்டு இருந்தேன்....
அவ என்ன கடைசி வரைக்கும் என்ன பாக்க கூட இல்ல.....

அன்னைக்கு fulla அவ ஞாபகமாவே இருந்துச்சு....
நைட் வீட்டுக்கு வந்து கதவ திறந்தேன்..... கிழிஞ்ச லுங்கிய கட்டிட்டு, ஒரு முன்டாஸ் பனியனோட, கால் மேல கால் போட்டு அவ ஆட்டிட்டு இருந்தா.....
ஆமா, தமிழ் சினிமால வர்ற மாதிரியே காலைல இருந்து,parking token போடறவன்ல இருந்து என் friends வரைக்கும்,பாக்கற எல்லாமே அவளாவே தெரிஞ்சாங்க....

night மணி மூணு ஆச்சு, ஊரே தூங்கற நேரம், கொலைகாரன், கொள்ளைக்காரன் கூட தூங்கியிருப்பான். ஆ ராசா , கனிமொழி , கல்மாடி, சோனியா கூட நிம்மதியா தூங்கியிருப்பாங்க, எனக்கு தூக்கமே வரல....

ஒரு வழியா விடிஞ்சுது , இருக்கறதுலையே நல்ல சட்டை எடுத்து போட்டுட்டு, இன்னைக்கு எப்டியாவது அவள பாக்க வெச்சரனும்னு கிளம்புனேன்.அவ எப்படியும் அதே நேரத்துல தான் ஆபீஸ் போவா, அதே பஸ்ல வருவான்னு ஒரு நம்பிக்கை....

நேத்து நின்ன அதே இடத்துல போய் நின்னேன்.Time ஆச்சு அதே bus வந்துது.... ஓடி போய் ஏறி ஒவ்வொரு சீட்டா பாத்துட்டே அவ உக்காந்திருந்த அந்த கடைசி சீட்டுக்கு போய் பாத்தேன்....
.
.
.
.
.
.
.
.

பாத்தா ,,, அங்க அவள  விட சூப்பரா வேற ஒரு figure....  நேத்து பாத்த அவளோட ஞாபகம் எல்லாம் மறந்து போச்சு....

அவ்வளவுதான் வாழ்க்கை.....

சிங்கம் 2


சூர்யா , தூத்துக்குடி துறைமுகத்துல நடக்கற சட்ட விரோத செயல்கள புடிக்கறத்துக்காக கொஞ்ச நாள் தூத்துக்குடில NCC masterரா இருந்து உளவு பாக்கறார்(அதான் as per Tamil cinema, binocular வெச்சு பாக்கறார்). அப்புறம் DSPயா charge எடுத்துக்கிட்டு criminalsa arrest பன்றார்.

சூர்யா படம் முழுக்க வெரப்பாவே திரியரார். Police officerரா இருக்கும் போது அப்படி இருந்தா பரவால்ல, NCC masterரா இருக்கும் போது கூட கம்முக்குட்டுக்குள்ள கத்திய சொருகுன மாதிரி வெரப்பாவே இருக்கார்.
திடீர்னு தூத்துக்குடி DSPயா charge எடுக்காறார், திடீர்னு Operation D commanderரா charge எடுக்காறார். ஏதோ laptop bagல இருந்து charger எடுக்கற மாதிரி பொசுக்கு பொசுக்குன்னு பெரிய பெரிய postsக்கு charge எடுத்துக்கறார்.

Heroines எல்லாம் படத்துக்கு படம் அழகாவாங்க.... இந்த படத்துல வர்ற அனுஷ்கா, ஹன்ஸிகா, அஞ்சலி மூணு பேரும் போன படத்த விட இந்த படத்துல இன்னும் அகலமாயிருக்காங்க....மிச்சபடி பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்ல....

படத்துல 'மயில்வாகம் மாதிரி powerfull வில்லன் missing. இந்த படத்துல மூணு வில்லன் இருக்காங்க. ஹன்சிகாக்கு Ipad password தெரிஞ்சு போச்சுங்கர காரணத்துக்காக, Ipad password change பண்ணாம, சொந்த பொண்ணுன்னு கூட பாக்காம ஹன்சிகாவாயே கொலை பண்றது ரொம்ப ஓவர்.

படத்துல நாலாவது வில்லன் DSP. அப்டியே சிங்கம் 1 songs CDய எடுத்து ரெண்டு பாட்ட slow பண்ணி, ரெண்டு பாட்ட fast forward பண்ணி போட்டுட்டார். BGMல அத கூட பண்ணல, அப்படியே சிங்கம் 1 BGMம edit பண்ணாம போட்டுருக்கார்.



கடைசி 20 நிமிஷம் International criminalல புடிக்கறதுக்காக சூர்யா South Africa போறார்.பாவம், அறிவாள் இல்லாம, Tata சுமோ இல்லாம, பனைமரம் இல்லாம, 1100 phone இல்லாம, 'Road roughஆ இருக்குன்னு driver சொன்னான், weather toughஆ இருக்குன்னு பைலட் சொன்னான்'
மாதிரி rhyminga டைலாக் வெக்க முடியாம கடைசி 20 நிமிஷம் ஹரி ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கார்.
எதுக்கு ஸார் நமக்கு வெளிநாடு எல்லாம், இருக்கவே இருக்கு Democratic Republic of காரைக்குடி, Peoples Republic of தூத்துக்குடி, அங்கயே வெச்சு வழக்கம்போல படத்த முடிக்க வேண்டியது தானே.....

அப்புறம்,First partக்கும் இதுக்கும் பெரிய சம்பந்தம் ஏதும் இல்ல. sequelங்கரதுக்காக தியாகு, நிழல்கள் ரவி, விவேக், நாசர் , ராதாரவி(with same old beautiful wig) வந்து போறாங்க.

'Over the குருவி' action sequences, ரொம்ப சுமாரான கடைசி 45 நிமிஷம், சுமாரான பாட்டு இன்னும் பல குறை இருந்தாலும், படத்தோட speed, நாலஞ்சு மாஸ் சீன்ஸ், அனுஷ்காவோட சிங்கம் dance இந்த குறைகளையெல்லாம் manage பண்ணிருது.

kuttychuvar.com Verdict: between OK and GOOD