கம்ப்யூட்டரும் என் வாழ்க்கையும்

2000, எனக்கு வயசு 12

நா 6th படிச்சிட்டு இருந்தப்ப தான் எங்க schoola ஒரே ஒரு கம்ப்யூட்டர் வாங்குனாங்க....வாரத்துல செவ்வாக்கிழமை ஒரு hour தான் கம்ப்யூட்டர் period. எப்படி அந்த வயசுல sunday போடற 'சக்திமான்'க்காக ஒரு வாரம் வெயிட் பண்ணுவமோ அதே மாதிரி அந்த கம்ப்யூட்டர் periodக்கு வெயிட் பண்ணுவோம்.

ஒரு மணி நேரம் period.அதுவும் computera switch on பண்ணிட்டு பக்கத்துக்கு  கடைல  போய் டீ  போண்டா சாப்பிட்டு வந்தம்னா ஒரு வழியா desktop screen வந்திருக்கும். அதுலயும் switch on ஆயிருச்சுன்னா sowbagya wet grinder மாதிரி சவுண்ட் வேற வரும்.

Dave கேம் போட்டு தருவாங்க.ஆளுக்கு ஒரு அவுட் தான்.. எல்லாருமே சீக்கிரம் அவுட் ஆயிருவோம். கடைசியா கம்ப்யூட்டர் சார் விளையாடுவார், அவர் ரெண்டு மூணு ரவுண்டு அவுட் ஆகாம  விளையாடுன உடனே,  இவர் தான் பில் கேட்ஸ்க்கு அடுத்து கம்ப்யூட்டர் அதிகமா தெரிஞ்சவர்ங்கர ரேஞ்சுக்கு பேசிக்குவோம்.

2002,  வயசு 14
ஒரு பையன் மட்டும் அவங்க மாமா கம்ப்யூட்டர் பத்தி தெரிஞ்சவர்ங்கறது நால classla வந்து Microsoft paintல வீடு வரைஞ்சு சீன போடுவான். அத வெச்சே பல பொண்ணுங்க அவன் கிட்ட பேசும். நம்மளும் நல்லா computer கதுக்கனும்கர ஆசை வந்திச்சு.

'AC இல்லன்ன computerக்கு வைரஸ் வந்திரும்;
keyboardல formatன்னு டைப் பண்ணா உள்ள இருக்கறது எல்லாமே அழிஞ்சிரும்;,அது இது'ன்னு ஏதேதோ சொல்லுவான். அவன் கம்ப்யூட்டர் பத்தி என்ன சொன்னாலும் நிலால பாட்டி வட சுட்டதா நம்ம பாட்டி நம்ம கிட்ட வட சுட்டப்ப எப்படி சந்தேகமே இல்லாம கேட்டமா அப்படியே கேப்போம்.

அப்படியே சில வருஷம் ஓடிருச்சு.2005,  வயசு 17:

11th 12th படிக்கும் போது கூட HTMLல்ல marquee tag போட்டு lettersa ஓட விடறது, கில்மா stills பாக்கறதுன்னு கம்ப்யூட்டர் மேல காதல் கொரையவே இல்ல.

12thல நல்ல மார்க்   எடுத்தேன் , எப்படியும் சொந்தக்காரங்கள்ல அட்வைஸ் பண்றதுக்குன்னே பெரிய ஆள் ஒருத்த இருப்பார்,எங்க ஊர்ல எல்லாம், ஒருத்தன் madrasல இருந்தாலே அவரு பெரிய ஆள் தான்(அவரு மளிகை கடை வெச்சிருந்தாலும் சரி, மாங்கா ஊறுகா செஞ்சு வித்துட்டு இருந்தாலும் சரி,).
என் விஷயத்துல legal advisor, madrasல இருக்கற மாமா தான்
அவர் சொன்னதுனால BE Computer Science சேத்து உட்டாங்க....'


2007,  வயசு 19:

First yearல ஒரு ரெண்டு பேர் computer வெச்சிருப்பான். Second semesterல ''Project பண்ணனும்,Semesterku படிக்கணும்னு' ஏதேதோ சொல்லி,computer வாங்கி தர சொல்லி கேக்க, வீட்லருந்து madras மாமாக்கு போன் பண்ணி வாங்கி கொடுக்கலாமான்னு கேக்க, அவரும் 'Computer இல்லாம Computer science எப்படி படிப்பான்??Onion இல்லாம Onion உத்தப்பம் எப்படி போட முடியும்??' ன்னு  ஏதேதோ சொல்ல ஒரு வழியா computer  வாங்கி குடுத்துட்டாங்க....

அப்புறம் என்ன, வழக்கமா நடக்கறதுதான். பரங்கிமலை ஜோதி தியேட்டர விட, கோயம்புத்தூர் GB Deluxe தியேட்டர விட, மதுரை தங்கரீகல் தியேட்டர விட, ஷ_லா, ரே_மா படங்கள அதிகமா பாத்தது ஒரு காலேஜ் studentஓட கம்ப்யூட்டர் screeனாதான் இருக்கும்.

அப்புறம்,  படம், பாட்டு, கேம்ஸ்,
புடிச்ச பொண்ணுகளோட orkut page, behindwoods.com, sify.com. இதெல்லாம் போக, lab examக்கு மூணு மணி நேரத்துக்கு முன்னாடி மட்டும் லைட்டா programming.

Final yearலையே கம்ப்யூட்டர் கொஞ்சம் போர் அடிக்க ஆரம்பிச்சிருச்சு....

2010,  வயசு 22:

BE முடிச்சாச்சு, வேற என்ன கழுத கெட்டா குட்டிச்சுவர், BE student கெட்டா T_C, C_S Inf____S மாதிரி எதோ ஒரு software company.
9 hours work பண்றது,dress, book வாங்குறது,EB, phone பில் கற்றது, வீட்டுக்கு காசு அனுப்பறது இப்படி எல்லாத்தையுமே computerல செஞ்சு கண்ணு, முதுகு, இடுப்பு போய் போண்டா கோழி ரேஞ்சுக்கு ஆயாச்சு.
நல்ல வேள, சாப்பிடறதுக்கும் , கக்கூஸ் போறதுக்கும் கம்ப்யூட்டர் use பண்ண முடியாது, இல்லன்னா 24 மணி நேரமும் அதோடே சுத்தற நெலம வந்திருக்கம்.


இன்று:
ஒரு வேள, Dave game, Madras மாமா இல்லன்னா , வாழ்க்கை நல்லா இருந்திருக்குமோன்னு  computer முன்னாடி உக்காந்து யோசிச்சிட்டு இருக்கேன் :(