'B E' - Episode 1 'அந்த மூணு மாசம்':

என் பேரு நவநீதகிருஷ்ணன்.... 'வாட்டசாட்டமான உயரம், பார்த்த உடனே பிடிக்கிற  முகம்கூர்மையான மூக்கு, கட்டுமஸ்தான உடம்பு, தடித்த மார்பு' அப்படின்னு Tamil sex storiesல வர்நிக்கற மாதிரி எல்லாம் இருக்க மாட்டேன். எதோ ஒரு ஒல்லியான bodyல ஒரு சுமாரான மூஞ்சிய ஒட்ட வெச்சு mindல நிறுத்திக்கங்க.... 


Episode 1 - அந்த மூணு மாசம்:

12th exam result வந்துது, 1123 mark....

தமிழ் நாட்ல எதோ ஒரு பெரிய ஸ்கூல்ல ரெண்டு வருஷம் hostelல இருந்து முக்கி முக்கி மனப்பாடம் பண்ணி exam எழுதுன எல்லார் மாதிரியும், அப்ப எனக்கு தெரிஞ்ச மூணு UG course, BE, MBBS, B Com மட்டுமே.

result வந்ததுல இருந்து காலேஜ் சேர்ற வரைக்கும் இருக்கற மூணு மாசமும்  பரபரப்பா இருந்தது அப்பா தான்....Colleges, Courses பத்தி Newspaper, TV, Radioல வர்ற எல்லா newsஐயும் படிப்பார்.... திடீர்னு ஒரு நாள், 'PSG Techல BE Sandwich course ஒன்னு நல்லா இருக்கும்னு நேத்து ஒரு paperல போட்டிருந்தான்'ம்பார் , திடீர்னு ஒரு நாள் 'தாய் மூகாம்பிகை collegeல Mechatronics நல்லா இருக்குன்னு நேத்து தமிழன்  TVல சொன்னான்'ம்பார்.
USல இருக்கற மாமால இருந்து , தாராபுரம் bike standல பக்கத்துல bike park பண்ணவர் வரைக்கும் 'பையன் 1123 mark வாங்கிருக்கான், BEக்கு எந்த காலேஜ் நல்லா இருக்கும்?' ன்னு பாக்கற எல்லார் கிட்டயும் கேட்டு ஒரு லிஸ்ட் போட்டு வெச்சிருந்தார்,
.1) Anna University 2)PSG Tech 3) GCT 4)Thiyagaraja 5)CIT

அடுத்து, BEல என்ன course எடுக்கறது? அப்பா எனக்கு குடுத்தது மூணு option,

1 ECE  : இந்த பேர கேட்ட உடனே தமிழ் படங்கள்ல சொட்டையா குறுந்தாடி வெச்சிட்டு எந்நேரமும் soldering வெச்சிகிட்டு உக்கார்ந்திருக்கற scientist தான் ஞாபகம் வந்துது.... Rejected
2 Mech : விசாரிச்சதுல இந்த courseல பொண்ணுங்களே சேர மாட்டாங்கன்னு சொன்னாங்க... பொண்ணுஙக இல்லாத classல எவனாவது சேருவானா? - Rejected
3.CSE  : Selected (நா ஏன் CSE எடுத்தேன்ங்கறதுக்கு தனி ஸ்டோரி இங்க இருக்கு:கம்ப்யூட்டரும் என் வாழ்க்கையும்)

Counsellingல PSG Techல CSE கெடச்சுது.
காலேஜ் சேர வரைக்கும் இருக்கற gapல பல பேர சமாளிக்க வேண்டி வரும்.

சொந்தக்காரர் ஒருத்தர் வருவார், எந்த college சேர்ந்திருக்கன்னு  கேப்பார் PSGன்னு சொன்னம்னா 'என்னப்பா நந்தா காலேஜ்ல சீட் கெடைக்கலையா??'ன்னு கேப்பார்

ஊர்ல இருந்து எங்க பாட்டி வரும் 'என்னத்துக்கப்பா Coimbatore கட்டி பையன படிக்க வெச்சுகிட்டு , தாராபுரத்துலையே பிஷப் காலேஜ்ல சேத்தீட்டீனா , வண்டிலேயே போயிட்டு, மத்தியான சாப்பாடுக்கு ஊட்டுக்கே வந்துக்கலாம்ல'ங்கும்.


சில பெருசுக 
'நல்ல markன்னு பேசிக்கறாங்க , எவ்வளவு மார்க் எடுத்த??'
'1123ங்க தாத்தா'
ரெண்டாயிரதுக்கா? மூவாரதுக்காப்பா?? ன்னு கேக்கும் 

இந்த மாதிரி பதில சொல்லவே முடியாத கேள்விகள் எல்லாம் daily atleast ஒரு தடவையாவது கேக்க வேண்டி வரும்.ஒவ்வொருத்தருக்கும் அரை மணி நேரம் உக்காந்து exam, cut off, engineering எல்லாரத பத்தியும் சொல்லி குடுக்கணும்....


இப்படியே மூணு மாசம் ஓடுச்சு.... 

August 1 2006:

மொத நாள், collegeக்கு வெளிய, orientationக்கு wait பண்ணிட்டு இருந்தேன்....
அங்க நின்னதுல பாதி நல்ல figures.... ஒரு வேல நம்ம மூணு மாசமா எந்த பொன்னையும் பாக்காததுனால அழகா தெரியராளுகளா இல்ல நெஜமாவே நல்லா இருக்களுகளான்னு ஒரு doubt வந்துது. ஆனா நெஜமாவே நல்லா தான் இருந்தாங்க.....
உடனே ஸ்கூல் figuresக்கு போன் பண்ணி 'ஆடிக்கு ஒரு தடவ அம்மாவாசைக்கு ஒரு தடவ தலைக்கு குளிச்சு , பூ வெச்சு புது cotton சுடிதார iron பண்ணி போட்டா மட்டும் அழகா இருக்கற நீங்கெல்லா,figureன்னு நெனச்சுக்கிட்டு என்ன சீன போட்டீங்க? நீங்கெல்லாம் figures இல்லம்மா இங்க நிக்கறவங்க தான் figures'ன்னு சொல்லனும்னு தோனுச்சு....

பக்கத்துல ரெண்டு பசங்க பேசிட்டு இருந்தது காதுல கேட்டுது 'மச்சி Coimbatoreலையே இந்த collegeல தான் சூப்பர் figures இருக்கும்.அதுவும் நீ வேற Computer Science deparment, கலக்கு....'
அப்படியே என் மனசு Troposphere, Stratosphere தாண்டி Mesosphere பக்கம் பறந்துட்டு இருந்துச்சு....
எல்லாரும் உள்ள வாங்க' watchman கூப்பிட்டார்....
திருப்பாச்சி படத்துல intervel blockல 'டன் டன் டட டன் டன் டட டட்டான் டன் டன் டட டன் டன் டட டட்டான் ' music ஓட கேமரா மேல கால வெச்சு நடக்கற விஜய் மாதிரி, மனசுக்குள்ள music ஓட மொத அடிய collegeக்குள்ள எடுத்து வெச்சேன்.
                                                                                                                    -தொடரும்