அவள்

சோழிங்கநல்லூர் சிக்னல், லேசான மின்னல்,AC பஸ் ஜன்னல், செம அழகா ஒரு பொண்ணு. வேகமா போய் அதே பஸ்ல ஏறி அவ உக்காந்திருந்த கடைசி சீட் பக்கத்துல போய் நின்னேன்.
வழக்கமான IT பொண்ணுங்க மாதிரி தூரத்துல பாத்தா செம அழகா தெரிஞ்சிட்டு, கிட்டத்துல படு மொக்கையா இல்லாம, இவ Close upலயும் செம அழகா இருந்தா.
பக்கத்துல உக்காந்திருக்கற ரெண்டு பசங்க friends கிட்ட பேசிட்டு இருந்தா.மூணு வருஷம் ITல இருந்ததுக்கு அப்புறம், ஒரு அழகான பொண்ணு ரெண்டு மூணு பசங்க கிட்ட பேசிட்டு இருந்தா வைத்தெரிச்சல் எல்லாம் வர்றதே இல்ல....உடம்பு அதுவா பல hormones, enzymesஓட சேர்த்து  gelusilலும் secrete பண்ண ஆரம்பிச்சிருச்சு போல....

அவள பாத்துட்டே நின்னுட்டு இருந்தேன்....

9th standardல ஒரு தடவ எங்க வாத்தியார் கேட்டார், "உலகத்துலேயே அழகானது என்ன?'ன்னு.... நாங்களும் ஐஸ்வர்யா ராய்ல இருந்து அடுத்த வீடு அல்சேசன் நாய் வரைக்கும் ஏதேதோ சொன்னோம்.
அவர் சொன்னார் 'இந்தியா தாண்டா உலகத்துலேயே அழகு, குங்குமப்பூ பூக்கற kashmir valley,அழகா ஓடற rivers அதோட branches, தங்கம் வைரம் விளையற இடங்கள்,
-30 degree C பனிப்பாறைல இருந்து +45 degree C பாலைவனத்து வரைக்கும் உள்ள climates, சாப்பாடுக்கு கொஞ்சம் கஷ்டம்நாலும் அவ்ளோ அழகா இருக்கற North eastern states.....
அதோட , இன்னும் யாருமே எட்டி பாத்தராத மலை சிகரங்கள், யாருமே கால் வெக்காத காடுகள், அந்த காலத்து பழைய பாரம்பரியத்துல இருந்து நேத்து வந்த technology வரைக்கும் உள்ள infrastructure.... இன்னும் எவ்வளவோ இருக்கு
அந்த காலத்துல இருந்து இந்தியாவோட வளம் தெரிஞ்சவங்க எல்லாருமே அத ஆளனும்னு ஆசப்பட்டிருப்பாங்க...."

இப்ப இவள பாத்தா உடனேயும் அவர் சொன்னது தான் ஞாபகம் வந்துச்சு. குங்குமப்பூ பூத்த kashmir valley மாதிரி கன்னம்,வைரம் விளைஞ்ச வாய், நதி மாதிரி அவ கை, branches மாதிரி அவ விரல்,
சாப்பாடுக்கு கொஞ்சம் கஷ்டம் மாதிரி தெரிஞ்சாலும் அவ்ளோ அழகா இருக்கற அவ இடுப்பு, இன்னும் யாருமே எட்டி பாத்தராத மலை சிகரங்கள், காடுகள்,அவ சிரிச்சா -30 degree அவ மொறச்சா +45 degree,
நம்ம ஊரு பாரம்பரியமா,தலைல மல்லிகைப்பூ, கைல latestடா வந்த iPhone5...இன்னும் எவ்வளவோ அழகு....
அந்த பஸ்ல அவள பாத்தவங்க எல்லாருமே அவள ஆளனும்னு நினைச்சிருப்பாங்க....

ரொம்ப நேரம் அவள  நின்னு பாத்துட்டே வந்துட்டு இருந்தேன்....ஆனா அவ வெளியுறவு கொள்கையும் இந்தியா மாதிரியேதான் இருந்துச்சு....பக்கத்துல உக்காந்திருந்த அவளோட friends ரெண்டு பேரும் அவள கடுப்பேத்திட்டே வந்திட்டு இருந்தாங்க.... அவ அவங்கள திட்டவும் முடியாம உக்காந்திட்டு இருந்தா....
அதுலயும் ஒருத்தன் அப்பப்ப எல்லை மீறி அவ தோல் மேல கை போட்டான்.... அந்த கையக்கூட 5 நிமிஷம் கழிச்சு தான் தட்டி விட்டா....
நானும் அவ பக்கத்துலையே, அவ கண் பார்வை கொஞ்சமாவது என மேல திரும்பாதான்னு இலங்கை தமிழர் மாதிரி நின்னுட்டு இருந்தேன்....
அவ என்ன கடைசி வரைக்கும் என்ன பாக்க கூட இல்ல.....

அன்னைக்கு fulla அவ ஞாபகமாவே இருந்துச்சு....
நைட் வீட்டுக்கு வந்து கதவ திறந்தேன்..... கிழிஞ்ச லுங்கிய கட்டிட்டு, ஒரு முன்டாஸ் பனியனோட, கால் மேல கால் போட்டு அவ ஆட்டிட்டு இருந்தா.....
ஆமா, தமிழ் சினிமால வர்ற மாதிரியே காலைல இருந்து,parking token போடறவன்ல இருந்து என் friends வரைக்கும்,பாக்கற எல்லாமே அவளாவே தெரிஞ்சாங்க....

night மணி மூணு ஆச்சு, ஊரே தூங்கற நேரம், கொலைகாரன், கொள்ளைக்காரன் கூட தூங்கியிருப்பான். ஆ ராசா , கனிமொழி , கல்மாடி, சோனியா கூட நிம்மதியா தூங்கியிருப்பாங்க, எனக்கு தூக்கமே வரல....

ஒரு வழியா விடிஞ்சுது , இருக்கறதுலையே நல்ல சட்டை எடுத்து போட்டுட்டு, இன்னைக்கு எப்டியாவது அவள பாக்க வெச்சரனும்னு கிளம்புனேன்.அவ எப்படியும் அதே நேரத்துல தான் ஆபீஸ் போவா, அதே பஸ்ல வருவான்னு ஒரு நம்பிக்கை....

நேத்து நின்ன அதே இடத்துல போய் நின்னேன்.Time ஆச்சு அதே bus வந்துது.... ஓடி போய் ஏறி ஒவ்வொரு சீட்டா பாத்துட்டே அவ உக்காந்திருந்த அந்த கடைசி சீட்டுக்கு போய் பாத்தேன்....
.
.
.
.
.
.
.
.

பாத்தா ,,, அங்க அவள  விட சூப்பரா வேற ஒரு figure....  நேத்து பாத்த அவளோட ஞாபகம் எல்லாம் மறந்து போச்சு....

அவ்வளவுதான் வாழ்க்கை.....

சிங்கம் 2


சூர்யா , தூத்துக்குடி துறைமுகத்துல நடக்கற சட்ட விரோத செயல்கள புடிக்கறத்துக்காக கொஞ்ச நாள் தூத்துக்குடில NCC masterரா இருந்து உளவு பாக்கறார்(அதான் as per Tamil cinema, binocular வெச்சு பாக்கறார்). அப்புறம் DSPயா charge எடுத்துக்கிட்டு criminalsa arrest பன்றார்.

சூர்யா படம் முழுக்க வெரப்பாவே திரியரார். Police officerரா இருக்கும் போது அப்படி இருந்தா பரவால்ல, NCC masterரா இருக்கும் போது கூட கம்முக்குட்டுக்குள்ள கத்திய சொருகுன மாதிரி வெரப்பாவே இருக்கார்.
திடீர்னு தூத்துக்குடி DSPயா charge எடுக்காறார், திடீர்னு Operation D commanderரா charge எடுக்காறார். ஏதோ laptop bagல இருந்து charger எடுக்கற மாதிரி பொசுக்கு பொசுக்குன்னு பெரிய பெரிய postsக்கு charge எடுத்துக்கறார்.

Heroines எல்லாம் படத்துக்கு படம் அழகாவாங்க.... இந்த படத்துல வர்ற அனுஷ்கா, ஹன்ஸிகா, அஞ்சலி மூணு பேரும் போன படத்த விட இந்த படத்துல இன்னும் அகலமாயிருக்காங்க....மிச்சபடி பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்ல....

படத்துல 'மயில்வாகம் மாதிரி powerfull வில்லன் missing. இந்த படத்துல மூணு வில்லன் இருக்காங்க. ஹன்சிகாக்கு Ipad password தெரிஞ்சு போச்சுங்கர காரணத்துக்காக, Ipad password change பண்ணாம, சொந்த பொண்ணுன்னு கூட பாக்காம ஹன்சிகாவாயே கொலை பண்றது ரொம்ப ஓவர்.

படத்துல நாலாவது வில்லன் DSP. அப்டியே சிங்கம் 1 songs CDய எடுத்து ரெண்டு பாட்ட slow பண்ணி, ரெண்டு பாட்ட fast forward பண்ணி போட்டுட்டார். BGMல அத கூட பண்ணல, அப்படியே சிங்கம் 1 BGMம edit பண்ணாம போட்டுருக்கார்.கடைசி 20 நிமிஷம் International criminalல புடிக்கறதுக்காக சூர்யா South Africa போறார்.பாவம், அறிவாள் இல்லாம, Tata சுமோ இல்லாம, பனைமரம் இல்லாம, 1100 phone இல்லாம, 'Road roughஆ இருக்குன்னு driver சொன்னான், weather toughஆ இருக்குன்னு பைலட் சொன்னான்'
மாதிரி rhyminga டைலாக் வெக்க முடியாம கடைசி 20 நிமிஷம் ஹரி ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கார்.
எதுக்கு ஸார் நமக்கு வெளிநாடு எல்லாம், இருக்கவே இருக்கு Democratic Republic of காரைக்குடி, Peoples Republic of தூத்துக்குடி, அங்கயே வெச்சு வழக்கம்போல படத்த முடிக்க வேண்டியது தானே.....

அப்புறம்,First partக்கும் இதுக்கும் பெரிய சம்பந்தம் ஏதும் இல்ல. sequelங்கரதுக்காக தியாகு, நிழல்கள் ரவி, விவேக், நாசர் , ராதாரவி(with same old beautiful wig) வந்து போறாங்க.

'Over the குருவி' action sequences, ரொம்ப சுமாரான கடைசி 45 நிமிஷம், சுமாரான பாட்டு இன்னும் பல குறை இருந்தாலும், படத்தோட speed, நாலஞ்சு மாஸ் சீன்ஸ், அனுஷ்காவோட சிங்கம் dance இந்த குறைகளையெல்லாம் manage பண்ணிருது.

kuttychuvar.com Verdict: between OK and GOOD


மும்பை இந்தியன்ஸ் - விமர்சனம்

இதுவரை:

ஆரம்பத்துல Teamக்கு பேர் வைக்கும்போதே , எதோ மிச்சவங்க  எல்லாரும் சவுத் சூடான்ல இருந்து  வந்த மாதிரி, இவங்க மட்டும் மும்பை 'இந்தியன்ஸ்'ன்னு பேர் வெச்சாங்க....
இதுவரைக்கும் 4 கேப்டன், 8 coach, 10 wicket keeper , 22 opening pair மாத்திட்டாங்க ஆனா அஞ்சு IPLல ஒரு வெங்கல கிண்ணம் கூட வாங்கல....

இப்போ:

கேப்டன் :  VRS வாங்கி வீட்ல விட்டத்த பாத்து படுத்து rest எடுத்துட்டு இருந்த Ricky Pontinga கூட்டிட்டு வந்து ஒரு foriegn player slota தியாகம் பண்ணி கேப்டனா போட்ருக்காங்க.... இதுக்கு பின்னாடி என்ன logicன்னு சத்தியமா தெரில....
Batting : Nita Ambani TVல சேனல் மாத்தும்போது, ஏதாவது ஒரு sports channelல்ல ஏதாவது ஒரு நாட்டோட county matchல எவனாவது ஒரு six அடிக்கறத பாத்துட்டா  அடுத்த நாளே flight புடிச்சு போய் ரெண்டு கோடி குடுத்து contract sign பண்ணி அவன கூட்டிட்டு வந்து அடுத்த மேட்ச்சே opening ஆட விட்ருவாங்க.... அவன் நம்ம ஊர் condition செட் ஆகாம மொக்கையா விளையாட , மூணாவது matchல இருந்து தண்ணி bottle தூக்க போட்ருவாங்க....
Davy Jackobs, Richard Levy, Graham Napier, Ryan Mclaren, James Franklin, Ashraful ,Aiden Blizzard இப்படி பல 'Mumbai Bottlewalas'அ  உருவாக்கி விட்டிருக்காங்க....
இப்படி அஞ்சு IPLஆ சுமார் ஒரு 22 opening pair மாத்தி இப்ப கடைசியா Sachin Pontingக்கு வந்து நிக்கறாங்க....
Teamல middle order தான் கொஞ்சம் strong. ஒரே ஒரு classic cover drive தெரிஞ்சு வெச்சுக்கிட்டு அஞ்சு ஆறு வருஷமா இந்திய டீம்ல benchல ஓட்டிட்டு இருக்கிற Rohit Sharma(ஆனா IPLனா ஆக்ரோஷம் பொங்கிரும்),Dinesh Karthik, Ambati Rayudu, Pollardன்னு யாருக்காவது ரெண்டு பேருக்கு கிளிக் ஆனாக்கூட நல்ல ஸ்கோர் அடிச்சிருவாங்க....
Mumbai Indians கூட ஜெயிக்க ஒரு ஈசியான வழி, opening pair wicketa எடுக்கவே கூடாது.... ரெண்டு பேரையும் full innings நிக்க வெச்சா ,20 ஓவருக்கு எப்படியும் 132/0 ரன் எடுப்பாங்க, அத ஈசியா அடிச்சு ஜெயிச்சிரலாம். atleast ரெண்டு பேரையும் ஒரு 12,13 over நிக்க வெச்சா கூட போதும்.
அப்புறம் வழக்கமா Mumbai Indiansல cricketல இருந்து ஒதுக்கப்பட்டவர்கள், வாழ்விழந்தவர்கள், வாழாவெட்டிகளுக்குன்னு  ஒரு slot இருக்கும். இதுவரைக்கும் Jayasurya , Symonds, Franklin இருந்தாங்க, இந்த தடவ அந்த slotக்கு Ponting, Jacob Oramன்னு ரெண்டு பேர் இருக்காங்க....

Bowling:  Munaf Patel, Ojha, Dhawal Kulkarni - நாலு பேரும் அப்படியே typical Indian bowlers, திடீர்னு ஒரு பெரிய batsmana first பாலே bowled பண்ணுவாங்க, திடீர்னு ஒரு ballக்கு ஆறு ரன் அடிக்கனும்கரப்போ 11th basmana six அடிக்க விடுவாங்க....
Bajji - Teamல experience ஆன bowler. எல்லா bowlerசும் நல்லா போடும்போது  இவரும் நல்லா போட்டு ஒப்பேத்திருவாறு, எல்லார் பாலையும் opposite team அடி பின்னும்போது Bajji போட்டா அவர் பால பஜ்ஜி போட்ருவாங்க....
teamla ஒரே நம்பகமான bowler Malinga தான்.... கடந்த நாலு IPLலா Malingava வெச்சுதான் ஓட்நாங்க , இந்த தடவையும் அப்டிதான்.

Fielding: Munaf Patel, Ojhaன்னு காலால fielding பண்ற fielders இருந்தாலும், Rohit Sharma, Rayudu, Pollard மாதிரி நல்ல fielderசும் இருக்காங்க. Straight, Long on, Deep  Midwicketன்னு  சுமார் ஒரு ரெண்டரை acre of the grounda Pollard மட்டுமே cover பண்ணிருவாரு....

கோச்: Anil Kumble, John Wright, Robin Singh, Shuan Pollock.. etc., இப்படி  Batting Coach, Fast Bowling coach,Spin Bowling coach, Fielding coach, Fitness coach அது இதுன்னு sleeper coach, AC II Tier coach தவிர எல்லா coachஉம் வெச்சிருக்காங்க....
அப்படியே ஒரு software company மாதிரி 11 பேர் கொண்ட teama உக்காந்து manage பண்றதுக்கு 15, 20 பேர்.

இந்த தடவ cup ஜெயிக்குமா??
Openingல கொஞ்ச அடிச்சு ஆடுற ஆள எறக்கி விட்டு, எல்லா மேட்ச்சும் Pollarda 18.4 வது overல எறக்காம கொஞ்சம் முன்னாடியே எறக்கி விட்டு, கொஞ்ச matchக்கு teama set ஆக விட்டு, எல்லார்த்துக்கும் மேல,Finalல CSK தோத்தா, Mumbai Indians cup ஜெயிக்கறதுக்கு தம்முத்தூண்டு வாய்ப்பு இருக்கு....

மேனேஜருக்கு ஒரு பகிரங்க கடிதம்

மறுபடியும் March மாசம் வந்தாச்சு, Appraisal, Rating, Band, Bucket, Dependancy, One on one meeting  பொடலங்கா, புண்ணாக்குன்னு மொத்த officeம் ரத்த பூமி ஆயிருக்கும்.

எப்படியும் நம்ம expect பன்ற Ratingக விட  கம்மியா தான் வரும். அந்த வெறுப்புல அப்படியே போய் மேனேஜர் கிட்ட discussion பண்ணிட்டு ரூம விட்டு வெளிய வந்த கையோட ஒரு employee எழுதுற கடிதம்....

'Certification முடிச்சியா?, Competency முடிச்சியா?, Companyக்குasset create பண்ணியா? Cross fuctional training attend பண்ணியா?? Training conduct பண்ணியா?? fun eventsல dance ஆடுனியா? கொஞ்சி விளையாடும் எங்கள் குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்தாயான்னு' கட்டபொம்மன் rangeக்கு கேக்கறீங்களே ஒரு நாளைக்கு 9 hours projectக்கு  வேல பாத்தனே , அது உங்க கண்ணுக்கு தெரியலையா??

எங்கயோ இருந்து codeஅ  cut copy பண்ணி , நடுவுல நடுவுல மானே தேனே பொன்மானே போட்டு paste பண்ணியும் , MS Excel, MS Powerpointல கலர் கலரா படம் போட்டும் தான்  மொத்த projecte ஓடிட்டு இருக்குன்னு தெரிஞ்சும்,'projectக்காக innovativeஆ என்ன பண்ணிருக்கன்னு' வாய் கூசாம கேக்கறீங்களே, MS Excelலயும் Cut,copy pasteலயும் என்னய்யா innovation பண்ண முடியும்??

முக்கியமா வேல இருந்தப்போ, உடம்பு சரி இல்லாம லீவ் போட்டுட்டா attitude சரி இல்லன்னு குதிக்கரீங்களே ,Appraisal முடிஞ்சு எல்லாருக்கும் rating போட்டுட்டு அடுத்த ரெண்டு நாளைக்கு sick லீவ் போட்டுட்டு எஸ் ஆகுரீங்களே , அப்ப உங்க attitude, latitude, longitude பத்தி எல்லாம் ஒரு நிமிஷமாவது நெனச்சு பாத்தீங்களா??Ratingகும்  போட்டுட்டு , " இது என்னோட சொந்த decision மட்டும் இல்ல, This decision is taken on discussing with 'Higher Management' , Onsite counterpart and all stakeholders involved in the project and incorporated with the process of curve fitting of the company's territorial legislation of the integration of the independant quarterly performance of the company and the customer satisfaction......" அப்படி இப்படின்னு ஏதேதோ புரியாத terms சொல்லி  ஏன்யா மழுப்புறீங்க??

Communication skills இன்னும் improve பண்ணனும், Analytical abilityய sharpen  பண்ணனும், Team work இன்னும் flexiblea இருக்கணும், Interpersonal skills நல்லா காமிக்கணும்,Proactiveness காது வழியா வழியனும்ன்னு சொல்றீங்களே, இந்த வார்த்தைய எல்லாம் முன்ன பின்ன dictionaryல பாத்தது உண்டா??

அப்படியே கம்மியா வேல செஞ்சிருந்தாலும் நல்ல rating போட்டா தான் என்ன?? 1947க்கு முன்னாடி வெள்ளைக்காரன் ஏமாத்தி புடுங்கிட்டு போன காசுல 1 % காச software company திருப்பி அவங்க கிட்ட இருந்து ஏமாத்தி புடுங்கிட்டு இருக்காங்க, அப்படி புடுங்குன காசுல 1 % employeesக்கு சம்பளமா குடுக்கறாங்க , அந்த காசுல 1 % வருஷா வருஷம் incrementa தராங்க, அந்த இத்துனூண்டு காச குடுக்கறதுக்கு , Fixed depositல Lakshmi vilas bankல போட்டு வெச்சிருக்கற சொந்த காச குடுக்கற மாதிரி ஏன்யா feel பண்றீங்க??,

இத எல்லார்த்தையும் கூட பொறுத்துக்கலாம்,ஆனா Discussion முடிஞ்ச அப்புறம், "நா உன் personal frienda சொல்றேன்,
Lifeங்கறது ஒரு Slow cycling race, பாத்து நிதானமா தான் ஓட்டனும்,
Lifeங்கறது ஒரு கபடி போட்டி, அடுத்தவன் கால வார்நாதான் மேல வர முடியும்
Lifeங்கறது ஒரு Lifebuoy சோப்பு, ............................ " இப்படியெல்லாம் தயவு செஞ்சு கருத்து மட்டும் சொல்லாதீங்க ப்ளீஸ்.
 

'B E ' - Episode 3 'முதல் BEER'

First yearல ஒரு நாள் , நானும் இன்னும் ரெண்டு friendsum பேசிட்டு இருந்தோம்....

friend கேட்டான் 'மச்சி இன்னைக்கு நைட் beer குடிப்பமா??'

மொத தடவ இந்த வார்த்தைய கேக்கும்போது உள்ளுக்குள்ள 49 % பயம் வந்தாலும் 51 % சந்தோசமாவும் இருந்திச்சு
பேச்சுவார்த்தை முடிவுல, நா ஒத்துக்கிட்டேன், ஆனா இன்னொரு friend ஒத்துக்கல....
'மூணு பேரும் TASMAC போறோம், நாங்க ரெண்டு பெரும் அடிக்கறோம், நீ company மட்டும் குடு' ன்னு அவனையும் convince பண்ணி ready ஆனோம்...
ஆனா நாங்க மூணு பேருமே சின்ன வயசுல சரக்கு bottlea எடைக்கு  போட்டு குச்சி ஐஸ் வாங்கி தின்னத தவிர, சரக்கு, பார், டாஸ்மாக் பத்தி எதுவுமே தெரியாது....
So,இதப்பத்தி கொஞ்சமாவது தெரிஞ்ச ஒரு experienced professionala hire பண்றதுன்னு முடிவு பண்ணோம்.... Civil Departmentல என் friend Prem இருந்தான், அவன கூப்பிடறதா முடிவு பண்ணோம். அவனோட experience  என்னன்னா ,அவன்  இதுக்கு முன்னாடி மூணு தடவ  அவங்க அண்ணன் சரக்கு அடிக்கும்போது company குடுத்திருக்கான்..

நாலு பேரும் TASMACக்கு கெளம்புனோம்....நமக்கு தான் தெரியுமே, தமிழ்நாட்ல TASMACa தேடி எல்லாம் கண்டுபுடிக்க தேவ இல்ல, ஏதாவது ஒரு town busல ஏறி, எந்த பஸ் ஸ்டாப்ல எறங்கி lighta  ஒரு 6 degree திரும்பி பாத்தா கண்டிப்பா ஒரு TASMAC இருக்கும்....யாராவது பாத்துருவாங்களோன்னு பயந்து பம்பிகிட்டே 'மங்கையின் மோகம்'  படத்துக்கு morning show  போற மாதிரி உள்ள போனோம்..
அப்படியே ஒரு ஓரமா table புடிச்சு நாலு பேரும் உக்காந்தோம்....

மூணு பேர் தான் அடிக்க போறோம் , 1 பீர் சொல்லுவோம். friend சொன்னான் ,
ரெண்டு நிமிஷத்துல supplier வந்தார்

Supplier: என்ன வேணும்?
நாங்க: ஒரு பீர்...
Supplier: ஒரே பீரா?
(என்னடா ஒரு பீரான்னு கேவலமா கேக்கரறேன்னு யோசிச்சிட்டு, )
நாங்க: இல்லன்னா ரெண்டு பீர் குடுங்க....
Supplier(வேகவேகமா): Kingfisher strong இல்ல lehar தான் இருக்கு, 5000 cooling இல்ல, Bullet தான் கூலிங் இருக்கு , தரட்டுமா??
நாலு பேரும் ஒருத்தர் ஒருத்தர மூஞ்சிய பாத்தோம், அவர் என்ன கேக்கரார்னு நாலு பேருக்குமே புரியல....
நாங்க: 'ஆங்க் ஓகே நா, அதே தாங்க, அப்படியே mixingக்கு எனக்கு ஒரு அரை லிட்டர் coke, மச்சி உனக்கு??', பிரேம் கிட்ட கேட்டேன்,
Prem: எனக்கு தண்ணி போதும் மச்சி....1 water pocketன்னா....
பக்கத்து tableல்ல இருக்கரவன்லா திரும்பி பாத்து சிரிச்சாணுக....
அந்த supplier  நாலு போரையும் ஒரு நாலு நிமிஷம் பாத்தான்,
Supplier:First time சரக்கு அடிக்கறீங்களா??
நாங்க:ஆமான்னா
அவரே போய் பீர், sidedishலா எடுத்துட்டு வந்தார்..
"பீருக்கெல்லாம் mixing பண்ண கூடாது,பீர் கூலிங்கா இருந்தாதான் கசப்பு தெரியாது, bottleஓட அடிக்கறத விட டம்ளர்ல ஊத்தி அடிச்சா கொஞ்சம் கசக்காம இருக்கும்,  பீர் அடிக்கும்போது periodicalஆ தம் அடிச்சா இன்னும் நல்லா மப்பு ஏறும்" இந்த மாதிரி வாழ்க்கைக்கு தேவையான adviceல்லாம் குடுத்தார்.....அப்பவே நாங்க நாலு பேரும் அவரோட நல்ல friends ஆயிட்டோம்..

மூணு பேரும் cheers அடிச்சு,மொதல் sip வெச்சோம்...மூணு பேர்  கிட்டயும் ஒரே reaction,'என்னடா taste இவ்வளவு கேவலமா இருக்கு???' 'அப்ப தெரில,பிற்க்காலதுல இதே கேவலமான tasteக்காக தான் வீட்ல புக் வாங்கனும்னு பொய் சொல்லி காசு வாங்கப்போறோம், பல scholarshipa வீட்டுக்கு தெரியாம ஆட்டைய போட போறோம்,Advanced Java Programming கிளாஸ் எடுக்க வர்ற madam வரைக்கும் கடன் வாங்க போறோம்னு....மூணு பேரும் ஆளுக்கு ஒரு பீர் அடிச்சோம்....எவ்வளவு சொல்லியும் இன்னொருத்தன் அடிக்கவே இல்ல....sidedish மட்டும் தின்னான்....உலகத்துல எல்லா சரக்கடிக்கற கோஷ்டிலையும் sideல உக்காந்து sidedish மட்டும் திங்கரதுக்குனே atleast ஒருத்தன் இருப்பான்....

மூணு பேருக்கும் நல்லா மப்பு ஏறிடுச்சு....'டேய் நம்மல்லா கெத்து மச்சி , நம்மள அசைக்க முடியாது அது இதுன்னு' overa வாய் பேசிக்கிட்டு மங்காத்தா படம் morning show முடிச்சு வெளிய வர்ற மாதிரி TASMACa விட்டு வெளிய வந்தோம்....

நாலு பேரும் ,chess boardல bishop move ஆகர மாதிரி  crossஆவே நடந்து ஒரு வழியா ரூமுக்கு போனோம்....
நாங்க சரக்கு அடிக்க போன விஷயம் hostella சில பழங்களுக்கு தெரிஞ்சு போச்சு,
எங்கள பாத்த உடனே வந்து  ஆரம்ப கட்டத்துல சரக்கடிக்கறவன் கிட்ட தொன்று தொட்டு கேக்கற மொக்கை கேள்விய கேட்டானுக, ரெண்டு விரல காட்டி 'இது எவ்வளவுன்னு சொல்லு??'
அதுக்கு தொன்று தொட்டு வழக்கமா போடற 'இது விரல் மச்சி' ன்னு repeat மொக்கைய போட்டுட்டு படுத்து தூங்குனோம்....

                                                                                                      - தொடரும் 

அலெக்ஸ் பாண்டியன்

என்னடா பொங்கலுக்கு வந்த படத்துக்கு காலம்போன காலத்துல முப்பது நாள் லேட்டா review எழுதிருக்கானேன்னு பாக்காதீங்க, படமே முப்பது வருஷம் லேட்டா தான் வந்திருக்கு. அதுக்கு இது ஒன்னும் பெருசு இல்ல.

கதை: அதை இன்னும் தேடிட்டு இருக்கோம். அடுத்த பொங்கலுக்குள்ள எப்படியாவது கண்டுபுடிச்சு reviewல update பண்ண try பண்றேன்.

அனுஷ்கா வர்ற சில scenes, இத்துணுண்டு காமெடி, நிகிதா, சனுஷா வர்ற சில scenes, இப்படி பொருக்கி எடுத்து பாத்தா,மொத்த படத்துல ஒரு பதிமூணு நிமிஷம் பாக்கற மாதிரி இருக்கும்.

படத்துல வில்லனோட தம்பிக்கு மொட்டை அடிக்கற scene ஒன்னு இருக்கு,  மலைக்கோட்டை படத்துல வந்த 'நாய்' scene, சுறா படத்துல வந்த laptop கடத்தற scene, பில்லா  2 படத்துல வந்த contonment கடத்தற scene, இந்த மாதிரி தமிழ் சினிமால வரலாற்று முக்கியத்துவம் பெற்ற சீன்கள்ல இந்த scene கண்டிப்பா இருக்கும்....சும்மா timepassக்கு ஒரு தடவையாவது படம் பாக்கலாமா??:

நீங்க தனியா வீட்ல இருக்கீங்க, current போயிருச்சு, timepassக்கு பக்கத்துல friendsum இல்ல, எங்கயாவது வெளிய போலாம்னா, உங்க ஊர்ல entertainmentக்கும் ஏதும் இல்ல, ஒரே ஒரு theatre மட்டும் தான் இருக்கு, அதுல அலெக்ஸ் பாண்டியன் தான் ஓடுது - இப்படி ஒரு நெலம வந்தாலும் (எனக்கு வந்துச்சு),

உங்க friend, ஒரு தீவிரமான அனுஷ்கா fan, 'படம் பாக்க கம்பெனி மட்டும் குடுடா நா ticket,intervella popcorn,bike parking காசு உட்பட எல்லாத்தையும் sponsor பண்றேன்'னு சொன்னாலும் 

இவ்வளவு ஏன்?, நீங்க அலெக்ஸ் பாண்டியன் படத்துக்கு கூட்டிட்டு போகலைன்னா , நா பக்கத்துக்கு வீட்டு தினேஷ் கூட ஓடிப்போயிருவேன்னு  உங்க  lover சொன்னா கூட,

தயவு செஞ்சு படத்த பாத்தராதீங்க....


தமிழ்நாடு அரசே, muslims பாதிக்க படுவாங்கன்னு  'விஸ்வரூபம்'
படத்த release ஆகறதுக்கு முன்னாடியே பாத்து, தடை பண்றீங்கோ, ஒட்டு மொத்த தமிழ் நாட்டையும் பாதிக்கிற இந்த அலெக்ஸ் பாண்டியன் மாதிரி படத்தையும் முன்னாடியே பாத்து தடை பண்ணிட்டீங்கன்னா, எல்லாரும் நல்லா இருக்கலாம்ல.

kuttychuvar verdict:  THU....

'B E ' - Episode 2 'பச்சைக்கிளிகள் தோளோடு'

Episode 1 படிக்காதவங்க மொதல்ல இத படிங்க :Episode 1 'அந்த மூணு மாசம்':

Computer Science Departmentல மொத்தம் 120 பேர்.
மொத நாள் எல்லாருக்கும் introduction நடந்தது. ரெண்டு சூப்பர் figure.1 Soumya Sivakumar, 2 Nithya rangarajan, .120 பேரையும் ரெண்டு groupஆ பிரிச்சாங்க.... நா, என் ஸ்கூல் friend Ram,சௌம்யா,இன்னொரு 57 பேர் 'G1' group.  நித்யா , மிச்ச பேர் 'G2'....

எங்க கிளாஸ் ஒரு typical computer science class ... ஒரு சூப்பர் figure , ரெண்டு ஓரளவுக்கு நல்ல figure, சில சுமார்ஸ், சில homelies, சில, தங்கள தாங்களே American citizensன்னு நெனச்சிட்டு சுத்தர பொண்ணுங்க,சில, அப்பா எடுத்து குடுத்த  orange colour பூ போட்ட polyester சுடிதார்ல அமைதியா classக்கு வந்துட்டு போற பொண்ணுங்க....

Soumya, Nithya ,இந்த பொண்ணுங்க ரெண்டும் செம famous..... வெளிய CSE Departmentன்னு சொன்னம்னா 'எந்த class? G1ஆ G2வா?'ன்னு கேக்க மாட்டாங்க, 'சௌம்யா classஆ நித்யா classஆ?' ன்னு தான் கேப்பணுக....செம காண்டாகும்....

சௌம்யா சிவகுமார்: சேலம் பொண்ணு.அவ இன்னைக்கு போடுற சுடிதார் மூணு மாசம் கழிச்சு தான் repeat ஆகும். சில சமயம் doubt வரும் இவ நெஜமாலுமே இத்தன சுடிதார் வெச்சிருக்காளா,  இல்ல hostelல்ல பக்கத்துக்கு department பொண்ணுங்க சுடிதார்லாம் மாத்தி மாத்தி போட்டு வந்து டகால்டி வேல காமிக்கராலான்னு....
First semல அமைதியா classக்கு வந்துட்டு போயிட்டு இருந்தா, எப்ப நெறையா பசங்க பாக்கறாங்கன்னு தெரிஞ்சுதோ, அப்பா இருந்து 'சில்லுனு ஒரு காதல் சூர்யா மாதிரி "ஏ மச்சான் ஷாக் வெச்சான்"' ரேஞ்சுக்கு தான் claasக்கு வருவா....

பின்னாடி benchla உக்காந்து நானும் friendum அவளுக்கு ஆளிருக்குமா இருக்காதான்னு discuss பண்ணிட்டு இருப்போம், அப்பத்தான் ஒரு சேலம் பையன் நடுவுல தலய விட்டு 'அவளுக்கெல்லாம் schoolலையே ஆள் இருக்காம்,tution கூட அவன் கூட தான் போவாளாம்'ன்னு சொன்னான்....
எனக்கு இன்னைக்கு வரைக்கும் ஒரு  doubt தீரவே இல்ல 'அதெப்படி நாட்ல    கிட்டத்தட்ட  எல்லா பொண்ணுங்களும் ஆள் இருக்குங்கறாங்க, ஆனா நாட்ல பாதி பசங்களுக்கு மேல ஆள் இல்லாம வெட்டியாதான் இருக்கோம், அப்ப இவங்க யாரதான் லவ் பண்றாங்க????'

'ஆள்' -- college lifeல எவ்வளவு முக்கியமான வார்த்த....

பொண்ணுங்கள பொருத்தவரைக்கும் 'என்னோட ஆள் ' அப்படின்னா , "அவங்க போடுற மொக்கயெல்லாம் கேக்கற ,recharge பண்ணி விடுற, ஊருக்கு போகும்போது, hostelள்ள இருந்து பஸ் ஸ்டாப் வரைக்கும் luggage தூக்கிட்டு வர்ற,classoda படத்துக்கு போனா,Industrial visit போனா,அவங்களுக்கு bodyguarda வேல பாக்குற பையன்". 

பசங்க dictionaryல 'என்னோட ஆள்' அப்படினா "ஒரு அழகான அல்லது சுமாரான பொண்ணு, break, lunch டைம் la நம்ம அவள follow பன்னுவ்வோம்..., ஆனா  அந்த பொண்ணுக்கு நம்மள  யார்னே தெரியாமக்கூட இருக்கலாம், ஒவ்வொருத்தனுக்கும் ஒன்னு அல்லது  ஒன்னுக்கும் மேல, எவ்வளவு ஆள் வேண்ணாலும் இருக்கலாம்".
பொண்ணுங்களுக்கு 'ஆள்' அப்படிங்கறது ஒரு Economic term, பசங்களுக்கு Biological term.... அப்புறம் தீர விசாரிச்சதுல சௌம்யாக்கு ஆள் இல்லன்னு தெரிஞ்சது....
தெரிஞ்சா மட்டும் என்ன? நானும் என் friendsum அவள  வேடிக்க மட்டும் தான் பாத்துட்டு இருந்தோம்.... அவள  மொக்க figureன்னு சொன்ன சில பேரோட சண்ட கூட போட்ருக்கோம்....
ஆனா அவ classல இருந்ததுல ஒரே நல்ல விஷயம் என்னன்னா , நா debar ஆகாம 75% attendance வெச்சேன்....லீவ் போடலாம்னு காலைல சும்மா hostel roomல படுத்திருப்பேன்,classக்கு போன friend போன் பண்ணுவான், 'இன்னைக்கு சிவகுமார்(எப்பவுமே நாங்க பொண்ணுங்கல அவங்க அப்பா பேர வெச்சுதான் mention பண்ணுவோம்....ஒரு safetyக்கு) சூப்பரா டிரஸ் பண்ணிட்டு வந்திருக்கான்'ம்பான்..... உடனே எந்திருச்சு மூஞ்சிய மட்டும் கழுவிட்டு 'C programming' periodஆ இருந்தா கூட பரவால்லன்னு, classக்கு போயிருவேன்....

இப்படியே 'பச்சை கிளிகள் தோளோடு பாட்டு குயிலோ மடியோடுன்னு ' போயிட்டு இருந்த வாழ்க்கைல ஒரு twist வந்துது....
                                                                                                            -தொடரும் 

அடுத்த எபிசொட்: First Beer, Internals and Semster....

'B E' - Episode 1 'அந்த மூணு மாசம்':

என் பேரு நவநீதகிருஷ்ணன்.... 'வாட்டசாட்டமான உயரம், பார்த்த உடனே பிடிக்கிற  முகம்கூர்மையான மூக்கு, கட்டுமஸ்தான உடம்பு, தடித்த மார்பு' அப்படின்னு Tamil sex storiesல வர்நிக்கற மாதிரி எல்லாம் இருக்க மாட்டேன். எதோ ஒரு ஒல்லியான bodyல ஒரு சுமாரான மூஞ்சிய ஒட்ட வெச்சு mindல நிறுத்திக்கங்க.... 


Episode 1 - அந்த மூணு மாசம்:

12th exam result வந்துது, 1123 mark....

தமிழ் நாட்ல எதோ ஒரு பெரிய ஸ்கூல்ல ரெண்டு வருஷம் hostelல இருந்து முக்கி முக்கி மனப்பாடம் பண்ணி exam எழுதுன எல்லார் மாதிரியும், அப்ப எனக்கு தெரிஞ்ச மூணு UG course, BE, MBBS, B Com மட்டுமே.

result வந்ததுல இருந்து காலேஜ் சேர்ற வரைக்கும் இருக்கற மூணு மாசமும்  பரபரப்பா இருந்தது அப்பா தான்....Colleges, Courses பத்தி Newspaper, TV, Radioல வர்ற எல்லா newsஐயும் படிப்பார்.... திடீர்னு ஒரு நாள், 'PSG Techல BE Sandwich course ஒன்னு நல்லா இருக்கும்னு நேத்து ஒரு paperல போட்டிருந்தான்'ம்பார் , திடீர்னு ஒரு நாள் 'தாய் மூகாம்பிகை collegeல Mechatronics நல்லா இருக்குன்னு நேத்து தமிழன்  TVல சொன்னான்'ம்பார்.
USல இருக்கற மாமால இருந்து , தாராபுரம் bike standல பக்கத்துல bike park பண்ணவர் வரைக்கும் 'பையன் 1123 mark வாங்கிருக்கான், BEக்கு எந்த காலேஜ் நல்லா இருக்கும்?' ன்னு பாக்கற எல்லார் கிட்டயும் கேட்டு ஒரு லிஸ்ட் போட்டு வெச்சிருந்தார்,
.1) Anna University 2)PSG Tech 3) GCT 4)Thiyagaraja 5)CIT

அடுத்து, BEல என்ன course எடுக்கறது? அப்பா எனக்கு குடுத்தது மூணு option,

1 ECE  : இந்த பேர கேட்ட உடனே தமிழ் படங்கள்ல சொட்டையா குறுந்தாடி வெச்சிட்டு எந்நேரமும் soldering வெச்சிகிட்டு உக்கார்ந்திருக்கற scientist தான் ஞாபகம் வந்துது.... Rejected
2 Mech : விசாரிச்சதுல இந்த courseல பொண்ணுங்களே சேர மாட்டாங்கன்னு சொன்னாங்க... பொண்ணுஙக இல்லாத classல எவனாவது சேருவானா? - Rejected
3.CSE  : Selected (நா ஏன் CSE எடுத்தேன்ங்கறதுக்கு தனி ஸ்டோரி இங்க இருக்கு:கம்ப்யூட்டரும் என் வாழ்க்கையும்)

Counsellingல PSG Techல CSE கெடச்சுது.
காலேஜ் சேர வரைக்கும் இருக்கற gapல பல பேர சமாளிக்க வேண்டி வரும்.

சொந்தக்காரர் ஒருத்தர் வருவார், எந்த college சேர்ந்திருக்கன்னு  கேப்பார் PSGன்னு சொன்னம்னா 'என்னப்பா நந்தா காலேஜ்ல சீட் கெடைக்கலையா??'ன்னு கேப்பார்

ஊர்ல இருந்து எங்க பாட்டி வரும் 'என்னத்துக்கப்பா Coimbatore கட்டி பையன படிக்க வெச்சுகிட்டு , தாராபுரத்துலையே பிஷப் காலேஜ்ல சேத்தீட்டீனா , வண்டிலேயே போயிட்டு, மத்தியான சாப்பாடுக்கு ஊட்டுக்கே வந்துக்கலாம்ல'ங்கும்.


சில பெருசுக 
'நல்ல markன்னு பேசிக்கறாங்க , எவ்வளவு மார்க் எடுத்த??'
'1123ங்க தாத்தா'
ரெண்டாயிரதுக்கா? மூவாரதுக்காப்பா?? ன்னு கேக்கும் 

இந்த மாதிரி பதில சொல்லவே முடியாத கேள்விகள் எல்லாம் daily atleast ஒரு தடவையாவது கேக்க வேண்டி வரும்.ஒவ்வொருத்தருக்கும் அரை மணி நேரம் உக்காந்து exam, cut off, engineering எல்லாரத பத்தியும் சொல்லி குடுக்கணும்....


இப்படியே மூணு மாசம் ஓடுச்சு.... 

August 1 2006:

மொத நாள், collegeக்கு வெளிய, orientationக்கு wait பண்ணிட்டு இருந்தேன்....
அங்க நின்னதுல பாதி நல்ல figures.... ஒரு வேல நம்ம மூணு மாசமா எந்த பொன்னையும் பாக்காததுனால அழகா தெரியராளுகளா இல்ல நெஜமாவே நல்லா இருக்களுகளான்னு ஒரு doubt வந்துது. ஆனா நெஜமாவே நல்லா தான் இருந்தாங்க.....
உடனே ஸ்கூல் figuresக்கு போன் பண்ணி 'ஆடிக்கு ஒரு தடவ அம்மாவாசைக்கு ஒரு தடவ தலைக்கு குளிச்சு , பூ வெச்சு புது cotton சுடிதார iron பண்ணி போட்டா மட்டும் அழகா இருக்கற நீங்கெல்லா,figureன்னு நெனச்சுக்கிட்டு என்ன சீன போட்டீங்க? நீங்கெல்லாம் figures இல்லம்மா இங்க நிக்கறவங்க தான் figures'ன்னு சொல்லனும்னு தோனுச்சு....

பக்கத்துல ரெண்டு பசங்க பேசிட்டு இருந்தது காதுல கேட்டுது 'மச்சி Coimbatoreலையே இந்த collegeல தான் சூப்பர் figures இருக்கும்.அதுவும் நீ வேற Computer Science deparment, கலக்கு....'
அப்படியே என் மனசு Troposphere, Stratosphere தாண்டி Mesosphere பக்கம் பறந்துட்டு இருந்துச்சு....
எல்லாரும் உள்ள வாங்க' watchman கூப்பிட்டார்....
திருப்பாச்சி படத்துல intervel blockல 'டன் டன் டட டன் டன் டட டட்டான் டன் டன் டட டன் டன் டட டட்டான் ' music ஓட கேமரா மேல கால வெச்சு நடக்கற விஜய் மாதிரி, மனசுக்குள்ள music ஓட மொத அடிய collegeக்குள்ள எடுத்து வெச்சேன்.
                                                                                                                    -தொடரும்
                                                                                                                                                

இம்சை's of India

எப்படியும் நம்ம friends கோஸ்டிலையோ roommatesலையோ ஒருத்தனாவது லவ் பண்ணிட்டு சுத்திட்டு இருப்பான். இவனுங்க என்னெல்லாம் இம்சை பண்றானுங்க??

காலைல 6 ,7 மணிக்கு,'Good morning dear, have a nice day.....' அப்படி இப்படின்னு நம்ம காது பக்கத்துலையே cell phone keypadla கொட கொட கொட கொட typeன்னு பண்ணி அந்த பொண்ண எழுப்பறதுக்கு முன்னாடி நம்மள எழுப்பிருவானுங்க....இல்லன்னா அந்த பொண்ணு இவனுக்கு call பண்ணி, நம்மளையும் சேத்து எழுப்பி விட்டுடும்.

அவன் குளிக்க போனா, கக்கூஸ்போனா  phoneல அந்த பொண்ணு கிட்ட இருந்து வர்ற callக்கு நம்மள attender ஆக்கிருவாணுக.call attend பண்றது கூட பரவால்ல, நம்ம பேசுனா அந்த பொண்ணு ஏதோ 'ஒரு வல்லரசு நாடு மாதிரியும், இவர் ஒரு வல்லரசு நாடு மாதிரியும், அணு ஆயுத பேரம் பேசிக்க phone பண்ண மாதிரியும், நடவுல நம்ம எதோ பாகிஸ்தான் ISI உளவு அமைப்பு, call attend பண்ணிட்ட மாதிரியும்' reaction குடுக்கும்.

Friends எல்லாம் உக்காந்து பேசிட்டு இருக்கும் போது எவனாவது ஏதாவது மொக்க காமெடி பண்ணா, 'ஏன்டா இப்படி காட்டு மொக்கைய போட்டுட்டு இருக்கீங்க??' ன்னு கேப்பானுக, கொஞ்ச நேரத்துல அந்த பொண்ணு கிட்ட கடலை போடும்போது அதே காமெடிய சொல்லி விழுந்து விழுந்து சிரிச்சிட்டு இருப்பானுக.

'முக்கியமான matter மச்சி, யார்கிட்டயும் சொல்லிராதன்னு' சொல்லி ஏதாவது matter சொன்னா,maximum மூணாவது நாள் கடலை போடும்போதாவது அந்த பொண்ணு கிட்ட சொல்லிருவானுங்க.

முக்கியமா இந்த லவ் பண்ற பசங்களோட உக்காந்து சரக்கு மட்டும் அடிக்கவே கூடாது. சரக்கு அடிக்கும் போது கொஞ்சம் மப்பு ஏறிடுச்சுனாலே, ஒரு கேள்வி கேப்பானுக....
'மச்சி வீட்ல accept பண்ணிக்குவாங்களா? எங்க கல்யாணம் நடக்குமா??'
நம்மளும், 'கண்டிப்பா நடக்கும் மச்சி' ன்னு சொன்னம்னா 
டேய் உண்மையா யோசிச்சு சொல்லு டா, எனக்காக சொல்லாத....' ன்னு சொல்லுவானுக 
நம்ம 'கொஞ்சம் கஷ்டம் தாண்டா, நீ வேற caste, அவ வேற caste, உங்க வீட்ல ஒத்துக்கிட்டாலும் அவங்க வீட்ல ஒத்துக்கணும் கொஞ்சம் கஷ்டம் தான் மச்சி.... 'ன்னு சொன்னா 
'ஏண்டா friendக்காக கொஞ்சமாவது positiveஆ சொல்ல மாட்டியா?'ம்பாணுக....

பாதி சரக்குல இப்படி எல்லாம் கேள்வி கேட்டா 'நீங்க ரெண்டு பெரும் புன்னகை மன்னன் கமல் ரேகா மாதிரி தற்கொலை பண்ண ட்ரை பண்ணி சாகாம, மரத்துல தொங்க தாண்டா போறீங்க'ன்னு சொல்லலாம்னு இருக்கும். ஆனா மிச்ச சரக்க அடிக்க விட மாட்டனேங்கற ஒரே காரணத்துக்காக,
மச்சி ஒன்னும் கவலை படாத நாங்க எதுக்கு இருக்கோம் , கண்டிப்பா சேத்து வெப்போம் உங்க கல்யாணம் கண்டிப்பா நடக்கும். ன்னு ஏதேதோ சொல்லி மிச்ச சரக்க அடிக்கணும்.cricket விளையாடும் போது முக்கியமான fielding நேரத்துல போன் எடுத்து காதுல வெச்சிட்டு பந்த புடிக்காம விட்டுட்டு நிப்பாணுக.

அப்புறம் அந்த பொண்ணோட birthdayக்கு  என்ன gift வாங்கலாம்;
அவ பக்கத்து வீட்டு குட்டி பொண்ணோட birthdayக்கு என்ன gift வாங்கலாம்;
அவள  meet பண்ண போகும்போது என்ன சட்ட போடலாம்;ன்னு
discuss பண்ணி மொத்தம் 365 nightல 15 night தூங்க விட மாட்டானுக.

அன்னைக்கு meet பண்ணும்போது என் schoolfriend Divyaக்கு நா அனுப்பின messagea பாத்துட்டா, என் கிட்ட பேச மாட்டேங்குறா;
அந்த பொண்ணுக்கு எவனோ தப்பா messgae அனுப்புறான்;
அவ manager அவகிட்ட ஒரு மாதிரியா பேசுரான்;
அவ சித்தி பொண்ணு யாரையோ லவ் பண்ணி register marriage பண்ணிக்கிட்டா, இதனால எங்க marriageக்கு பிரச்சன வரும்;
இப்படி பொலம்பி ஒரு 25 night தூக்கத்த கெடுத்துருவானுக.....

ஆக இந்த பிரச்சனைல இருந்து தப்பிக்க ஒரே வழி, நம்ம friend லவ் பண்ண ஆரம்பிச்சுட்டான்னா, ஒன்னு நம்ம அவன் கிட்ட இருந்து பிரிஞ்சரனும், இல்ல அவங்க ரெண்டு பேரையும் பிரிச்சரனும்....

                            வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 

கம்ப்யூட்டரும் என் வாழ்க்கையும்

2000, எனக்கு வயசு 12

நா 6th படிச்சிட்டு இருந்தப்ப தான் எங்க schoola ஒரே ஒரு கம்ப்யூட்டர் வாங்குனாங்க....வாரத்துல செவ்வாக்கிழமை ஒரு hour தான் கம்ப்யூட்டர் period. எப்படி அந்த வயசுல sunday போடற 'சக்திமான்'க்காக ஒரு வாரம் வெயிட் பண்ணுவமோ அதே மாதிரி அந்த கம்ப்யூட்டர் periodக்கு வெயிட் பண்ணுவோம்.

ஒரு மணி நேரம் period.அதுவும் computera switch on பண்ணிட்டு பக்கத்துக்கு  கடைல  போய் டீ  போண்டா சாப்பிட்டு வந்தம்னா ஒரு வழியா desktop screen வந்திருக்கும். அதுலயும் switch on ஆயிருச்சுன்னா sowbagya wet grinder மாதிரி சவுண்ட் வேற வரும்.

Dave கேம் போட்டு தருவாங்க.ஆளுக்கு ஒரு அவுட் தான்.. எல்லாருமே சீக்கிரம் அவுட் ஆயிருவோம். கடைசியா கம்ப்யூட்டர் சார் விளையாடுவார், அவர் ரெண்டு மூணு ரவுண்டு அவுட் ஆகாம  விளையாடுன உடனே,  இவர் தான் பில் கேட்ஸ்க்கு அடுத்து கம்ப்யூட்டர் அதிகமா தெரிஞ்சவர்ங்கர ரேஞ்சுக்கு பேசிக்குவோம்.

2002,  வயசு 14
ஒரு பையன் மட்டும் அவங்க மாமா கம்ப்யூட்டர் பத்தி தெரிஞ்சவர்ங்கறது நால classla வந்து Microsoft paintல வீடு வரைஞ்சு சீன போடுவான். அத வெச்சே பல பொண்ணுங்க அவன் கிட்ட பேசும். நம்மளும் நல்லா computer கதுக்கனும்கர ஆசை வந்திச்சு.

'AC இல்லன்ன computerக்கு வைரஸ் வந்திரும்;
keyboardல formatன்னு டைப் பண்ணா உள்ள இருக்கறது எல்லாமே அழிஞ்சிரும்;,அது இது'ன்னு ஏதேதோ சொல்லுவான். அவன் கம்ப்யூட்டர் பத்தி என்ன சொன்னாலும் நிலால பாட்டி வட சுட்டதா நம்ம பாட்டி நம்ம கிட்ட வட சுட்டப்ப எப்படி சந்தேகமே இல்லாம கேட்டமா அப்படியே கேப்போம்.

அப்படியே சில வருஷம் ஓடிருச்சு.2005,  வயசு 17:

11th 12th படிக்கும் போது கூட HTMLல்ல marquee tag போட்டு lettersa ஓட விடறது, கில்மா stills பாக்கறதுன்னு கம்ப்யூட்டர் மேல காதல் கொரையவே இல்ல.

12thல நல்ல மார்க்   எடுத்தேன் , எப்படியும் சொந்தக்காரங்கள்ல அட்வைஸ் பண்றதுக்குன்னே பெரிய ஆள் ஒருத்த இருப்பார்,எங்க ஊர்ல எல்லாம், ஒருத்தன் madrasல இருந்தாலே அவரு பெரிய ஆள் தான்(அவரு மளிகை கடை வெச்சிருந்தாலும் சரி, மாங்கா ஊறுகா செஞ்சு வித்துட்டு இருந்தாலும் சரி,).
என் விஷயத்துல legal advisor, madrasல இருக்கற மாமா தான்
அவர் சொன்னதுனால BE Computer Science சேத்து உட்டாங்க....'


2007,  வயசு 19:

First yearல ஒரு ரெண்டு பேர் computer வெச்சிருப்பான். Second semesterல ''Project பண்ணனும்,Semesterku படிக்கணும்னு' ஏதேதோ சொல்லி,computer வாங்கி தர சொல்லி கேக்க, வீட்லருந்து madras மாமாக்கு போன் பண்ணி வாங்கி கொடுக்கலாமான்னு கேக்க, அவரும் 'Computer இல்லாம Computer science எப்படி படிப்பான்??Onion இல்லாம Onion உத்தப்பம் எப்படி போட முடியும்??' ன்னு  ஏதேதோ சொல்ல ஒரு வழியா computer  வாங்கி குடுத்துட்டாங்க....

அப்புறம் என்ன, வழக்கமா நடக்கறதுதான். பரங்கிமலை ஜோதி தியேட்டர விட, கோயம்புத்தூர் GB Deluxe தியேட்டர விட, மதுரை தங்கரீகல் தியேட்டர விட, ஷ_லா, ரே_மா படங்கள அதிகமா பாத்தது ஒரு காலேஜ் studentஓட கம்ப்யூட்டர் screeனாதான் இருக்கும்.

அப்புறம்,  படம், பாட்டு, கேம்ஸ்,
புடிச்ச பொண்ணுகளோட orkut page, behindwoods.com, sify.com. இதெல்லாம் போக, lab examக்கு மூணு மணி நேரத்துக்கு முன்னாடி மட்டும் லைட்டா programming.

Final yearலையே கம்ப்யூட்டர் கொஞ்சம் போர் அடிக்க ஆரம்பிச்சிருச்சு....

2010,  வயசு 22:

BE முடிச்சாச்சு, வேற என்ன கழுத கெட்டா குட்டிச்சுவர், BE student கெட்டா T_C, C_S Inf____S மாதிரி எதோ ஒரு software company.
9 hours work பண்றது,dress, book வாங்குறது,EB, phone பில் கற்றது, வீட்டுக்கு காசு அனுப்பறது இப்படி எல்லாத்தையுமே computerல செஞ்சு கண்ணு, முதுகு, இடுப்பு போய் போண்டா கோழி ரேஞ்சுக்கு ஆயாச்சு.
நல்ல வேள, சாப்பிடறதுக்கும் , கக்கூஸ் போறதுக்கும் கம்ப்யூட்டர் use பண்ண முடியாது, இல்லன்னா 24 மணி நேரமும் அதோடே சுத்தற நெலம வந்திருக்கம்.


இன்று:
ஒரு வேள, Dave game, Madras மாமா இல்லன்னா , வாழ்க்கை நல்லா இருந்திருக்குமோன்னு  computer முன்னாடி உக்காந்து யோசிச்சிட்டு இருக்கேன் :(