நீதானே என் பொன்வசந்தம்

வேட்டையாடு விளையாடு , காக்க காக்க , மணிமேகலை, குண்டலகேசி,நெடுநெல்வாடைன்னு எப்படியோ கௌதம் மேனன்  ஒரு நல்ல தமிழ் title வெச்சிருவாறு. இந்த படத்துலயும் சூப்பரா title வெச்சிட்டாரு.

ஜீவா(வருண்) :
வழக்கம் போல கௌதம் மேனன் பட hero, நல்லா english பேசறார்;
மூணாவது சீன்ல புக் எடுத்தா அஞ்சாவது சீன்ல IIM போயர்றார், ஆறாவது சீன்ல arun excelloல apartment வாங்கிடறார்;
heroக்கு 'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை'ன்னு ஒரு 'வானத்தைப்போல'  family இருக்கு. ஆனா இந்த தடவ லவ் பண்றதுக்கு அமெரிக்கால்லாம் அனுப்பல;
ஒரே ஒரு நல்லது என்னன்னா இந்த படத்துல ஹீரோ mechanical engineering படிக்கல,mechanical departmentக்கு mass த்தற மாதிரி dialogues,பாட்டு ஏதும் இல்ல , இல்லன்ன படம் பாத்த அதே வேகத்துல போய் காலேஜ் கக்கூஸ் செவுரு fulla 'Mech mass , mech rocks' ன்னு எழுதி நாரடிசிருப்பாங்க, எல்லா mech department symposiumக்கும் அந்த dialogue, பாட்ட போட்டு சாவடிசிருப்பாங்க....


சமந்தா( நித்யா ):
உலகத்துலேயே போப் ஆண்டவருக்கு அடுத்து புனிதமானவன்க இவங்க தான். ஸ்கூல், காலேஜ்ல first rank எடுப்பாங்க;
Dance, Fashion show, debateல எப்பவுமே first தான்;
சின்ன வயசுல இருந்து ஒரே பையன லவ் பண்ணுவாங்க;
 cambridge  universitylaல படிப்பாங்க;
discontinue பண்ணிட்டு வந்து சுனாமி தாக்கப்பட்ட  ஊர்ல கொழந்தைகளுக்கு பாடம் சொல்லி தருவாங்க.....



வருண் , நித்யா . ரெண்டு பேரும் காங்கிரஸ் கட்சி, K V தங்கபாலுவும் G K வாசனும் மாதிரி, காரணமே இல்லாம சண்ட போடறாங்க, சேர்றாங்க , சண்ட போடறாங்க, சேர்றாங்க.... இது தான் கதை....


படத்துல ஒரு 25% சீன் சூப்பரா இருக்கு,dialogues நல்லா இருக்கு,25% சீன் சுமாரா இருக்கு, மிச்ச 50% சீன்ல , நம்மள தியேட்டர விட்டு வெளிய போகாம உக்கார வெக்கற ஒரே centripetal, centrifugal, gravitational, electrical, frictional force சமந்தா மட்டும்  தான்....

பாட்டும் சுமாரா தான் இருக்கு, BGMம்மும் சுமாராதான் இருக்கு.... என்னதான் 'legend'ஆ இருந்தாலும் ஒரு 'end' இருக்கு இல்ல....

சில பேர் சொல்றாங்க, 'முன்ன பின்ன லவ் பன்னிருந்தாதான் இந்த படம் பாக்கும் போது ஒரு feeling வரும், படம் பிடிக்கும்'ன்னு, அவங்க கிட்ட நா ஒன்னே ஒன்னு தான் கேக்கறேன், நம்ம எத்தன கில்மா சீன் பாக்குறோம், அப்பல்லாம் feelings வருதில்ல, நம்ம என்ன முன்ன பின்ன கில்மாவா பண்ணிருக்கோம்??
ஆக  இந்த மாதிரி statementsa ஏத்துக்கவே முடியாது....


kuttychuvar verdict: OK


உலகம் அழியட்டும்....

டிசம்பர்ல உலகம் அழியப்போகுதுன்னு சொல்றாங்க.....
'அத்த பொண்ண correct பண்ணனும், IAS ஆகணும், அடையார்ல apartment வாங்கணும்'ன்னு நம்மளோட லட்சியம்லா நிறைவேராதேன்னு கவலை இருந்தாலும், உலகம் அழியரதுல நெறைய நல்லதும் இருக்கு.....

காலைல எந்திருச்சு, குளிக்கும் போது முடி கொட்டுதேன்னு கவலை பட வேண்டியதில்ல;

10000 கிலோ மீட்டர் , 5 சர்வீஸ், 3 accident  பாத்த நம்ம bike இன்னும் ஒரு figureஅ கூட சீட்ல ஏத்தாம virginஆ இருக்கேன்னு கவலை பட தேவ இல்ல;

உலகமே ஒன்னுக்கு அடிச்சிட்டு வந்து குப்புற படுத்து தூங்குற காலைல ஆறு மணிக்கு,morning shift போக தேவை இல்ல;
Officeல manager பண்ற மொக்க காமெடிக்கெல்லாம் சிரிக்க தேவ இல்ல;
Client பேசற englisha subtitle இல்லாம  புரிஞ்சுக்க தேவ இல்ல ;


TVya போட்டாலே வர்ற,
'Arun excello temple green ஓரகடம் வழங்கும் நாப்பத்தி அஞ்சு லட்ச ருபாய் மதிப்புள்ள double bed room flat' ங்கற sentencea திருப்பி திருப்பி கேக்க வேண்டியதில்ல;
கலா அக்கா, நமீதா மேடம், குஷ் அக்கா மூஞ்சிகள பாக்க வேண்டியதில்ல;

வர்ற Australia test seriesla 4-0ன்னு தோக்க  தேவ இல்ல;
டோனி test match விளையாடற கொடுமையெல்லாம் பாக்க தேவை இல்ல;

சச்சின் retired ஆக தேவை இல்ல, அத விட முக்கியமா சச்சின் recorda இனிமே எவனாலயும் முறியடிக்க முடியாது,



'ஒப்பற்ற ஓவியமே','ஒன்னுக்கடிக்கும் ஓய்யாரமே'ன்னு ஒன்னாவது படிக்கற ஒம்பதாவது வட்ட செயலாளர் பையனுக்கு வெக்கற cut outa பாக்க தேவ இல்ல;

'ஆத்தா உன்ன மன்னிப்பாளா? தாய்ப்பால் உனக்கு coca cola;' மாதிரி கவித்துவமான பாட்ட கேக்க தேவை இல்ல,

வருமகோட்ல வாழ்ற ஹீரோ; 
எருமமாட்ல பொழப்பு நடத்தற heroine;
நடுரோட்ல accident ஆகி  சாகர climaxன்னு நெஞ்ச நக்க ட்ரை பண்ற படங்கள பாக்க தேவ இல்ல;

ஒரு படம் ஓடிருச்சுன்னா  ,
"3 நாள்ல 44 கோடி வசூல்;
4 நாள்ல 56 கோடி வசூல்;
2 nd டே மேட்னி showla  சத்யம் தியேட்டர்ல 'puff ' வித்த காசு 'எந்திரன' விட அதிகம்......"
இப்படியெல்லாம் Vijay/Ajith fans Facebook Statusகல பாக்க தேவ இல்ல;

'DSLR' coupled with 'Adobe Photoshop' coupled with 'Multi vitamin milk protien skin cream' coupled with 'பக்கத்துல ஒரு அட்டு figure' -
இவ்வளவும் இருந்தும் சுமாரா இருக்கற பொண்ணுங்க Profile Picக்கு 125  பேர் லைக் போடறத பாத்து கடுப்பாக தேவ இல்ல....

கொஞ்ச சட்ட போட்ட பூனம் பண்டேக்கள் , மஞ்ச சட்ட போட்ட அரசியல் தலைவர்கள் , என்ன கேட்டாலும் சத்தம் போடுற Government office ஆண்டிக்கள், முக்கியமா இந்திய economists - இவனுங்க எவன் தொல்லையும் இனி இருக்காது....

இது எல்லார்த்துக்கும் மேல இந்தியால  கொஞ்ச நாள்ல ஒரு நெலம வரும் 
குடிக்கற தண்ணி லிட்டர் 50 ரூபாய்க்கு விக்கும்;
வெங்காயம் கிலோ 450 ரூபாய்க்கு விக்கும்;
பெட்ரோல் 250 ரூபாய்க்கு விக்கும்;
கட்டண கழிப்பிடத்துல 25 ரூபா கேப்பான்....
ஆனா நம்ம சம்பளம் மட்டும் Rs 16370 இருக்கும்.... அதுலயும் income tax, professional tax, company welfare fund, State welfare fundன்னு எதையாவது புடிப்பான்.....

ஆக , பேசாம பூமாதேவி வாய பொளக்கட்டும், நாமெல்லாம் உள்ள போவோம்;

                                                  உலகம் அழியட்டும்....