துப்பாக்கி

"துப்பாக்கி,மூணு மாசம் case நடத்தி, முப்பத்தி ரெண்டு தடவ வாய்தா வாங்கி கஷ்டப்பட்டு பேர் வெச்சாங்க.... ஆனா இந்த படத்துக்கு இந்த பேர்   எதுக்குன்னு சத்தியமா தெரில....

ஹாரிஸ் ஜெயராஜ் பாட்ட சுட்டிருக்காரு;
முருக தாஸ் நெறைய சேனல்ல வந்து வாயிலையே வடைய சுட்டிருக்காரு;
அப்படியே எங்கிருந்தோ கதைய சுட்டிருக்காரு;
இவ்வளவையும் சுட்டதுக்காக துப்பாக்கின்னு பேர் வெச்சாங்களோ என்னமோ??

ஆனா ஒன்னு, துப்பாக்கி use பண்றதுக்காக படத்துக்கு துப்பாக்கின்னு பேர் வெச்சா, தமிழ்ல விக்ரமன் direct பண்ண படம் தவிர  இதுவரைக்கு release ஆன 1345 படத்துல 997 படத்துக்கு அருவாள்ன்னு பேர் வெக்கனும் மிச்ச 348 படத்துக்கு துப்பக்கின்னுதான் பேர் வெக்கணும்....Harris Jeyaraj எப்பவுமே google google பண்ணியாவது ஆறுல நாலு பாட்டாவது கேக்கற மாதிரி போட்ருவாரு,ஆனா இந்த தடவ google google தவிர எதுமே நல்லா இல்ல....

படத்துல மிலிடரி officera வர்றார் விஜய், அவரு போன படத்துல கொண்டலாம்பட்டில சும்மா சுத்திட்டு  இருந்த போதே காஷ்மீர் தீவிரவாதிகளா கொன்னவரு, இப்ப சொல்லவா வேணும். எல்லா தீவிர வாதிகளையும் பிரிச்சு மேயராறு.

விஜய் படத்துக்கு வந்துட்டு லாஜிக் இல்லன்னு சொல்றது, சரவண பவன் போய்ட்டு மட்டன் பிரியாணி இல்லன்னு சொல்ற அளவுக்கு கேணத்தனம்ங்கறதுனால அத பத்தி பேச தேவ இல்ல.....

 தக்காளி , பாதில எந்திருச்சு போனா ,parkingla இருந்து வண்டிய வெளிய எடுக்க முடியாதுங்கற ஒரே காரணத்துக்காக தான் இந்த படத்த முழுசா பாக்க வேண்டியதாப்போச்சு....."
இப்படியெல்லாம் எழுதி படத்த கிழிக்கலாம்னு படம் ரிலீஸ்க்கு முன்னாடியே type பண்ணி வெச்சுட்டு தான் theatreku போனேன்.... ஆனா என்ன பண்றது, என் கெரகம், படம் நல்லா இருந்திருச்சு....

படம் கண்டிப்பா எல்லாருக்கும் புடிக்கும்,unless and until, பக்கத்துல ஒரு விஜய் fan உக்காந்துகிட்டு "தலைவர் நடிப்பு மாஸா???", "தலைவர் dance மாஸா??" "தலைவர் dressing மாஸா???",னு கேட்டு  கடுப்பேத்தாத வரைக்கும்....

குட்டிச்சுவர் verdict: GOOD