ஒரு உலகம் இருந்தது!!அப்பா அம்மாவோட மொதல் மொதலா கால் எடுத்து வெச்ச entrance;
ஆறு மாசத்துல, நமக்குன்னு உருவான  ஒரு gang;
ECE Rockz, Mech Rockzzனு அங்கங்க எழுதியிக்கற hostel veranda;
கிட்டத்தட்ட postmortem செஞ்ச மாதிரி இருக்கற paste;
நம்ம iron பண்ணி வெச்ச சட்டைய சுட்டு போட்டுட்டு போற சில பேர்;
Hostelலையே தங்கியிருக்கற சில dayscholars;
classla 37% பேர் மொதல் மொதலா சரக்கடிக்க காரணமாயிருந்த 1st year IV;

பல காதல் ஜோடிகள் உருவாக காரணமாயிருந்த 2nd year IV;
Internalsla எவ்வளவு கேவலமா எழுதினாலும்,அப்படியே புக் பாத்து காப்பி அடிச்சு எழுதினாலும், பேர பாத்த உடனேயும் ஒரே mark போடுற teachers;

அம்மா அப்பா எடுத்து குடுத்த pink colour polyester சுடிதார்ல அமைதியா வந்துட்டு போற பொண்ணுங்க;
தங்கள அமெரிக்க citizensன்னு நெனச்சுட்டு சுத்தர ஒரு group பொண்ணுங்க;
Copy அடிச்சு program போட்டாலும் 33 error வர்ற lab exam;
கஷ்டப்பட்டு மிச்ச ரெண்டரை மணி நேரம் உக்காந்து மண்டைய பிச்சு 33 errora , 3 errora கொரைக்கற சுகம்;
அவன்லா அவள correct பண்ணிட்டானான்னு வர்ற கிசு கிசு;
சுறா பாத்துட்டு cell phona switch off பண்ண விஜய் fans;
அசல் பாத்துட்டு அப்பிடியே பஸ் ஏறி ஊருக்கு போன அஜித் fans;
எவ்வளவு படிச்சிட்டு போனாலும் 'தப்பா வேற department question papera வாங்கிட்டமோ'ன்னு நெனைக்க வெக்கற செமஸ்டர்  question papers;
Birhtday பொதுமாத்து;
night show மொக்க படம்;
5 பேர் cut off போட்ட  தம்;
புக்க வித்து அடிச்ச பீர்;
கூட்டமா உக்காந்து பாக்கற cricket matches;
Vijay vs Ajith fights, Sachin vs Dhoni fights, Sachin vs Ganguly fights, Terra patrick vs aletta ocean fights, Gold flake kings vs Black fights, Beer vs Hot fights;
இதெல்லாம் இருந்த ஒரு சந்தோசமான உலகம் இருந்துச்சு.....
அங்க   மிகப்பெரிய  கவலையே, நம்ம சைட் அடிக்கற figure ,வேற ஒருத்தன் கூட பேசறாளேன்னு தான்,
அங்க  மிகப்பெரிய கோபமே, நம்ம வாங்கிட்டு வந்த 'தம்'ம , தெரியாம எடுத்து அடிசிட்டானுகளேன்னு தான், 
அங்க  மிகப்பெரிய சண்டையே, ****** நல்ல பிகரா?, இல்ல ********** நல்ல பிகரா?ன்னு தான்,
அங்க மிகப்பெரிய எதிரியே, Retest வெக்க மாட்டேன்னு சொல்ற சில mam தான்,
நாலு வருஷத்துல கொஞ்சம் சோகமா இருந்தது செமஸ்டர் ரிசல்ட் வந்த 8 நாளாதான் இருக்கும்.

இப்போ, AC office, கைல coffee, பாக்கெட்ல ஒரு பக்கெட் தம், oppositela ரெண்டு மூணு பிகர் உக்காந்திருக்கு, ஆனாலும், collegeப்ப இருந்த சந்தோசம் இல்ல....