மாற்றான்


சூர்யாவோட அப்பா ஒரு Genetic Sceintist.ஒரு Super humana create பண்ற முயற்சில எதோ தப்பாகி,conjoined twins பிறந்தர்றாங்க.

அவர்  Energoinன்னு ஒரு health drink தயாரிக்கறார், அத குடிக்கற கொழந்தைகளோட வளர்ச்சி நல்லா இருக்கு,energion 70% market sharea புடிச்சிருக்கு....
ஆனா இத குடிச்சா அஞ்சு ஆறு வருஷத்துல கொழந்தைகளுக்கு நெறைய disease வந்து செத்துருவாங்கன்னு சூர்யாவுக்கு  தெரியுது...
கொழந்தைகளுக்கு நல்லதில்லன்னு தெரிஞ்சே காசுக்காக இந்த health drinka விக்கிற அப்பாவ பழி வாங்குறார், இதுதான் கதை.

இதுல Comedy, Kajal Agarwal ,Russian Journalist, Olympic athletes, US, USSR cold war தூவி விட்டு செமையா ஸ்க்ரீன்ப்ளே பண்ணிட்டார்....75% படம் நல்லா  இருக்கு....கடைசி அரை மணி நேரம் K V Anand டைரக்ட் பண்ண மாதிரியே இல்ல. 'விரலுக்கேத வீக்கம்' V Sekar டைரக்ட் பண்ண மாதிரி இருந்துது... அவ்வளவு slow, Sentiment, mokka....

படத்துல யாரு மாற்றானோ இல்லையோ, கையும் களவுமா Harris Jayaraj மாட்றான்....Climaxla என்ன music போடறதுன்னு தெரியாம Harris Jeyaraj தவிச்சது,theatrela உக்காந்திருக்கற நமக்கு தெரியுது....

fight sequence கொஞ்சம் lengtha கொறச்சு, 15 நிமிஷம் climaxa கொறச்சா இன்னும் நல்லா இருக்கும்....
Directors ஒன்னே ஒன்னு புரிஞ்சிக்கணும் , ரெண்டரை மணி நேரத்துக்கு மேலல்லாம் டிக்கிய ஒரே இடத்துல park பண்ணி படம் பாக்கறதெல்லாம் ரொம்ப கஷ்டம், தயவு செஞ்சு  படத்த 2 hrs 15 minsல  முடிங்கப்பா....

படத்த கண்டிப்பா எல்லாரும் ஒரு தடவ பாக்கலாம்.... இனிமே மாற்றான் பாக்க போறவங்களுக்கு kuttychuvar.com சார்பா ஒரே ஒரு advice , தயவு செஞ்சு வண்டிய easya வெளிய எடுக்கற மாதிரி முன்னாடியே park பண்ணிட்டு போங்க, 'கால் முளைத்த பூவே ' பாட்டு ஆரம்பிச்ச உடனே கெளம்பி வீட்டுக்கு வந்துருங்க....

Kuttychuvar Verdict: between GOOD and OKAY