MTC பயணம்


* Bus stopல பஸ்ஸ விட Share Auto, Auto, Van தான் அதிகமா நிக்கும்;

* சென்னைனாலே,
சந்துல ஒன்னுக்கு அடிக்க போனாலும், 
சத்யம் theatreல டிக்கெட் வாங்க போனாலும்,
நமக்கு முன்னாடி பத்து பதினஞ்சு பேர் கண்டிப்பா இருப்பான்.
அதேமாதிரி bus stopலயும் எப்பவுமே  ஒரு கும்பல் இருக்கும், 
மன்னன் பட ரஜினி மாதிரி 'chainu  மோதரம்னு' அடிச்சு புடிச்சு தான் பஸ்ல ஏறனும்.

*White board, Green board, Violet board, Deluxe busnu நெறைய பஸ் இருக்கும் ஆனா டிக்கெட் விலைய தவிர இந்த பஸ்களுக்குள்ள வேற எந்த வித்யாசத்தையும்,CBCIDயால கூட கண்டுபுடிக்க முடியாது;

*கூட்டத்துல அடிச்சு புடிச்சு ஏறி இடம் புடிக்கலாம்னு பாத்தா ,மழை பேஞ்சு நனைஞ்ச சீட்டு, யாரோ வாந்தி எடுத்த சீட்டு, பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு, இதெல்லாம் போக மிச்சம் இருக்கற பத்து பதினஞ்சு சீட்லயும் எவனாவது உக்காந்திட்டிருப்பான்.
இத எல்லார்த்தையும் மீறி உங்களுக்கு பஸ்ல ஏர்ண உடனே சீட் கெடச்சுதுன்னா இந்தியாவுலையே ராபர்ட் வதோராக்கு அடுத்து luckiest person நீங்க தான்.

* MTC bus conductor தனக்கு piles இருந்தாலொழிய எப்பவுமே சீட்ட உட்டு எந்திரிக்க மாட்டார், எவ்வளவு கூட்டமா இருந்தாலும் காச pass பண்ணிதான் டிக்கெட் எடுக்கணும்.


* Conductor, 14 ரூபா டிக்கெட்டுக்கு 20 ரூபா குடுத்தா அடுத்த stopல எறங்க சொல்லுவார்;
16 ரூபா டிக்கெட்டுக்கு 20 ரூபா குடுத்தா திட்டுவார்;
18 ரூபா டிக்கெட்டுக்கு 20 ரூபா குடுத்தா முறைப்பார்;
19 ரூபா டிக்கெட்டுக்கு 20 ரூபா குடுத்தா ஒர்ருபா திருப்பி தரமாட்டார்.

* பஸ்ல நிக்கும்போது சில அழகான பொண்ணுங்க கிட்ட கூட போய் நின்னுரலாம், ஆனா இந்த 50 வயசு aunties கிட்ட நிக்கவே கூடாது, சென்னை ரோடுக்கும் பஸ் ஆடுற ஆட்டத்துக்கும், கண்டிப்பா பக்கத்துல இருக்கறவங்க மேல இடிக்கும், அதும் ஏதாவது பொண்ணுங்களா இருந்தா கூட பரவால்ல ஒன்னும் சொல்ல மாட்டாங்க, இந்த auntyகல இடுசிட்டோம் அவ்வளவுதான் 'அப்பாலேந்து பாத்துன்னுக்குறேன்  இன்னாத்துக்கு மேல மேல வந்து ஈஷ்டுக்கற'ன்னு கத்தி ஊற கூட்டிருங்க.

உலகத்துலேயே Alphabets, ஒரு digit  நம்பர், ரெண்டு digit நம்பர், மூணு digit நம்பர், Avagadro நம்பர், ராமானுஜம் நம்பர், இப்டி எல்லா நம்பரையும் permutation combination போட்டு பேர் வெச்சது நம்ம MTCயாதான் இருக்கும். Eg: PP19x, T151

*கோவில் திருவிழா ஏதும் இல்லாம, கட்சி கூட்டம் ஏதும் நடக்காம, சவ ஊர்வலம் ஏதும் போகாம,CM, Central minister வராம, நடு ரோட்ல எவனும் சண்ட போடாம,bus driverக்கு  பொண்டாட்டி  கிட்ட இருந்து போன் எதும் வராம, ரோடு வேல ஏதும் செய்யாம,ஆடு மாடு நாய் குறுக்க போகாம, மெட்ரோ ரயிலுக்காக diversion இல்லாம ,மழை பேயாம,
இவ்வளவும்  இருந்தா போக வேண்டிய இடத்துக்கு நேரத்துக்கு போயிறலாம். 

ஒரு உலகம் இருந்தது!!அப்பா அம்மாவோட மொதல் மொதலா கால் எடுத்து வெச்ச entrance;
ஆறு மாசத்துல, நமக்குன்னு உருவான  ஒரு gang;
ECE Rockz, Mech Rockzzனு அங்கங்க எழுதியிக்கற hostel veranda;
கிட்டத்தட்ட postmortem செஞ்ச மாதிரி இருக்கற paste;
நம்ம iron பண்ணி வெச்ச சட்டைய சுட்டு போட்டுட்டு போற சில பேர்;
Hostelலையே தங்கியிருக்கற சில dayscholars;
classla 37% பேர் மொதல் மொதலா சரக்கடிக்க காரணமாயிருந்த 1st year IV;

பல காதல் ஜோடிகள் உருவாக காரணமாயிருந்த 2nd year IV;
Internalsla எவ்வளவு கேவலமா எழுதினாலும்,அப்படியே புக் பாத்து காப்பி அடிச்சு எழுதினாலும், பேர பாத்த உடனேயும் ஒரே mark போடுற teachers;

அம்மா அப்பா எடுத்து குடுத்த pink colour polyester சுடிதார்ல அமைதியா வந்துட்டு போற பொண்ணுங்க;
தங்கள அமெரிக்க citizensன்னு நெனச்சுட்டு சுத்தர ஒரு group பொண்ணுங்க;
Copy அடிச்சு program போட்டாலும் 33 error வர்ற lab exam;
கஷ்டப்பட்டு மிச்ச ரெண்டரை மணி நேரம் உக்காந்து மண்டைய பிச்சு 33 errora , 3 errora கொரைக்கற சுகம்;
அவன்லா அவள correct பண்ணிட்டானான்னு வர்ற கிசு கிசு;
சுறா பாத்துட்டு cell phona switch off பண்ண விஜய் fans;
அசல் பாத்துட்டு அப்பிடியே பஸ் ஏறி ஊருக்கு போன அஜித் fans;
எவ்வளவு படிச்சிட்டு போனாலும் 'தப்பா வேற department question papera வாங்கிட்டமோ'ன்னு நெனைக்க வெக்கற செமஸ்டர்  question papers;
Birhtday பொதுமாத்து;
night show மொக்க படம்;
5 பேர் cut off போட்ட  தம்;
புக்க வித்து அடிச்ச பீர்;
கூட்டமா உக்காந்து பாக்கற cricket matches;
Vijay vs Ajith fights, Sachin vs Dhoni fights, Sachin vs Ganguly fights, Terra patrick vs aletta ocean fights, Gold flake kings vs Black fights, Beer vs Hot fights;
இதெல்லாம் இருந்த ஒரு சந்தோசமான உலகம் இருந்துச்சு.....
அங்க   மிகப்பெரிய  கவலையே, நம்ம சைட் அடிக்கற figure ,வேற ஒருத்தன் கூட பேசறாளேன்னு தான்,
அங்க  மிகப்பெரிய கோபமே, நம்ம வாங்கிட்டு வந்த 'தம்'ம , தெரியாம எடுத்து அடிசிட்டானுகளேன்னு தான், 
அங்க  மிகப்பெரிய சண்டையே, ****** நல்ல பிகரா?, இல்ல ********** நல்ல பிகரா?ன்னு தான்,
அங்க மிகப்பெரிய எதிரியே, Retest வெக்க மாட்டேன்னு சொல்ற சில mam தான்,
நாலு வருஷத்துல கொஞ்சம் சோகமா இருந்தது செமஸ்டர் ரிசல்ட் வந்த 8 நாளாதான் இருக்கும்.

இப்போ, AC office, கைல coffee, பாக்கெட்ல ஒரு பக்கெட் தம், oppositela ரெண்டு மூணு பிகர் உக்காந்திருக்கு, ஆனாலும், collegeப்ப இருந்த சந்தோசம் இல்ல....


மாற்றான்


சூர்யாவோட அப்பா ஒரு Genetic Sceintist.ஒரு Super humana create பண்ற முயற்சில எதோ தப்பாகி,conjoined twins பிறந்தர்றாங்க.

அவர்  Energoinன்னு ஒரு health drink தயாரிக்கறார், அத குடிக்கற கொழந்தைகளோட வளர்ச்சி நல்லா இருக்கு,energion 70% market sharea புடிச்சிருக்கு....
ஆனா இத குடிச்சா அஞ்சு ஆறு வருஷத்துல கொழந்தைகளுக்கு நெறைய disease வந்து செத்துருவாங்கன்னு சூர்யாவுக்கு  தெரியுது...
கொழந்தைகளுக்கு நல்லதில்லன்னு தெரிஞ்சே காசுக்காக இந்த health drinka விக்கிற அப்பாவ பழி வாங்குறார், இதுதான் கதை.

இதுல Comedy, Kajal Agarwal ,Russian Journalist, Olympic athletes, US, USSR cold war தூவி விட்டு செமையா ஸ்க்ரீன்ப்ளே பண்ணிட்டார்....75% படம் நல்லா  இருக்கு....கடைசி அரை மணி நேரம் K V Anand டைரக்ட் பண்ண மாதிரியே இல்ல. 'விரலுக்கேத வீக்கம்' V Sekar டைரக்ட் பண்ண மாதிரி இருந்துது... அவ்வளவு slow, Sentiment, mokka....

படத்துல யாரு மாற்றானோ இல்லையோ, கையும் களவுமா Harris Jayaraj மாட்றான்....Climaxla என்ன music போடறதுன்னு தெரியாம Harris Jeyaraj தவிச்சது,theatrela உக்காந்திருக்கற நமக்கு தெரியுது....

fight sequence கொஞ்சம் lengtha கொறச்சு, 15 நிமிஷம் climaxa கொறச்சா இன்னும் நல்லா இருக்கும்....
Directors ஒன்னே ஒன்னு புரிஞ்சிக்கணும் , ரெண்டரை மணி நேரத்துக்கு மேலல்லாம் டிக்கிய ஒரே இடத்துல park பண்ணி படம் பாக்கறதெல்லாம் ரொம்ப கஷ்டம், தயவு செஞ்சு  படத்த 2 hrs 15 minsல  முடிங்கப்பா....

படத்த கண்டிப்பா எல்லாரும் ஒரு தடவ பாக்கலாம்.... இனிமே மாற்றான் பாக்க போறவங்களுக்கு kuttychuvar.com சார்பா ஒரே ஒரு advice , தயவு செஞ்சு வண்டிய easya வெளிய எடுக்கற மாதிரி முன்னாடியே park பண்ணிட்டு போங்க, 'கால் முளைத்த பூவே ' பாட்டு ஆரம்பிச்ச உடனே கெளம்பி வீட்டுக்கு வந்துருங்க....

Kuttychuvar Verdict: between GOOD and OKAY