தாண்டவம்

சென்னைல பாரிஸ் cornerல இருக்கற எதோ ஒரு  CD கடைக்கு போய்,randoma கைய உட்டு  மூணு CD எடுத்து ,அதுல CDக்கு பத்து சீன சுட்டா ஒரு படம் ஆச்சு....இத தான இதுக்கு முன்னாடி 4 படத்துலயும் பண்ணுனோம்.....அதுக்குள்ள எதுக்கு போய் assistant director கதையெல்லாம் சுட்டுட்டு.....இதெல்லாம் நல்லாவா இருக்கு Mr Vijay?? 


கதை: அதான் trailerல 'An unusual revenge storyனு' போடும்போதே,நமக்கு தெரிஞ்சு போற usualலான பழிவாங்குற கதைதான். அனுஷ்காவ கொன்னுர்றாங்க ,விக்ரம் பழிவாங்குறார்.... 

விக்ரம் indian intelligence agency RAWல work பண்ணிட்டிருக்கார், அனுஷ்கா eye doctora இருக்காங்க,books படிக்கறது, painting, musicன்னு கிட்டத்தட்ட Bradleyயோட ரெண்டாவது சிஷ்யைங்கற(மொத சிஷ்யர் தான் சந்திரமுகி ரஜினியாச்சே) அளவுக்கு காட்டிருக்காங்க(தக்காளி,,ஏதோ அனுஷ்காவா இருந்தங்காட்டி பொறுத்துக்கிட்டோம்).... ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்குது.

கூட வேலை செய்யற ஜகபதி பாபு, நம்ம நாட்டோட ராணுவ ரகசியத்த வித்து, பணம் சம்பாதிக்கறதுக்கு தடையா விக்ரம் இருக்காருங்கரதுக்காக ,விக்கிரம லண்டன் அனுப்பி, ஒரு bomb blastல சிக்க வெக்கறாங்க....அந்த bom blastல அனுஷ்கா செத்தர்றாங்க,விக்ரமுக்கு கண் போயிருது. கண் இல்லாமையே, echolocation மூலமாவாவே, வில்லன்கள பழி வாங்கறார்....

அனுஷ்கா விக்ரம் romance நல்லா இருக்கு, மிச்சபடி,full படமும் flata, averagea போகுது....
படத்துல ஆறு பாட்டு, எல்லாமே slow, ஒரு ஒரு பாட்டும் ஒரு மாசம் ஓடற மாதிரி ஒரு feeling....background score செம மொக்கை...Background music.நல்லா இருந்திருந்தா படம் இன்னும் கொஞ்ச நல்லா இருந்த பீலிங் வந்திருக்கும்....

நீரவ் ஷா வழக்கம்போல நல்லா பண்ணிருக்கார்.... சந்தானம், நாசர், எமி , லக்ஸ்மி ராய் எல்லாரும் OK....


மிச்சபடி Editor, Choreographer பத்தி பெருசா சொல்றதுக்கு ஒன்னும் இல்ல.... எல்லாரும், taluk officeல வேல செய்யற ஆண்ட்டி மாதிரி அவங்கவங்க கடமைய செஞ்சுட்டாங்க....

தலைவி அனுஷ்கா fans, விக்ரம் fans, எமி ,லக்ஷ்மி ராய் fans,வேல வெட்டி இல்லாதவங்க, இந்த வாரம் ஏதாவது படம் பாத்தே தீரணும்னு முடிவு எடுத்தவங்க  தியேட்டர் போய் பாருங்க.... ரொம்ப நல்ல படம் பாக்கணும்னு நெனைக்கறவங்க   போஸ்டர் பாத்தா கூட பத்து அடி தாண்டவும்....

குட்டிச்சுவர் verdict :