முகமூடி

First half: 
ஜீவா,  'குங் பு' class போயிட்டு,  சும்மா தண்ட சோரா ஊற சுத்திட்டு இருக்கார், 
வில்லன் நரேன் கோஷ்டி  நெறைய பக்கம் கொள்ளை அடிச்சிட்டு  இருக்காங்க ,அவங்கள நம்ம ஊர் போலீஸ் நால புடிக்க  முடில, so நாசர வரவெச்சிருக்காங்க....இதுக்கு நடுவுல ஜீவாக்கு நாசர் பொண்ணு(heroine) மேல லவ்வு.... 


ஒரு தடவ heroinea impress பண்றதுக்காக, சும்மா ஒரு getup போட்டுட்டு வீட்டுக்கு போறார், திரும்பி வர்ற வழியில அந்த naren group  கொள்ளக்காரங்கள்ள  ஒருத்தன  புடுச்சு குடுக்கறார்....உடனே 'முகமூடி,Superhero' ன்னு famous ஆயிர்றார், So,வில்லன் கோஷ்டி, ஜீவாவையும், நாசரையும் போட்டு தள்ள ட்ரை பண்றாங்க....ஜீவா வீட்ல ரெண்டு தாத்தா இருக்காங்க, ஒருத்தர் costume designer, இன்னொருத்தர் scientist, வேற என்ன, scientistனாளே தமிழ் சினிமால ஒரு robot பொம்மை , ரெண்டு wire வெச்சுக்கிட்டு 'soldering' பண்றதுதான வழக்கம், அத தான் இதுலயும் காட்டிருக்காங்க.... இன்னும் எத்தன நாளைக்குயா தமிழ் சினிமால scientist எல்லாம் solderingங்கே வெச்சிட்டு இருப்பாங்க??, ஒரு welding , foundry அளவுக்காவது improve பண்ணுங்கப்பா.... இந்த ரெண்டு தாத்தாவும் சேர்ந்து ஜீவா வில்லன்கள புடிக்கறதுக்கு help பண்றாங்க....

இப்படி  first halfla comedy, super herokku build upன்னு OKவா இருக்கு....

Second half:

second halfல ஒரு gluteus maximusஉம் கெடயாது.... செம மொக்கையான climax வேற .

Overall:

மிஸ்கின் TVla எல்லாம்  முகமூடி costumeக்கு அவ்வளவு பில்ட் up குடுத்துட்டு, எதோ சரவணா storesல 2  மீட்டர் polyster பிட் துணி வாங்கி , 'மணி tailors'ல குடுத்து தெச்ச மாதிரி ஒரு build up இல்லாம சப்பையா  காட்டீர்றாங்க.... அந்த costume போடறதுனால என்ன useனும் சொல்லல....வழக்கம் போல மிஸ்கின் படத்துல இருக்கற bar song, reverseல நடக்கற மாதிரி ஒரு சாங், slow motionல கால காற்றதுன்னு எல்லாமே இருக்கு....

இந்த படத்துல எல்லா charectersமே வீட்ல மூணாவது அல்லது நாலாவது floorல தான் இருப்பாங்க, யாராவது யாரையாவது பாக்க போனா, அவங்க போய் வண்டிய நிறுத்திட்டு மூணு floor நடந்து போறத fulla காட்றாங்கப்பா.... மிச்ச படத்துலயெல்லாம் fight, song na தான்  தம்  அடிக்க போவாங்க, இந்த படத்துல மாடி படிய காமிச்சாலே போயிர்றாங்கப்பா....

திடீர்னு ஏதாவது சீன் நல்லா இருக்கேன்னு நிமிர்ந்து உக்காந்தா, அந்த சீன் ரொம்ப நேரத்துக்கு போயிட்டே இருக்கு....'fightநா fighte போட்டுட்டு இருப்பியா??, song, song'ன்னு audience responseவர்ற அளவுக்கு சில sequences lengthy....

ஆகமொத்தம் படத்துல, நாசர் மூக்க தவிர பெருசா ஒன்னும் இல்ல....

kuttychuvar verdict: between 'OK' and 'THU'கடைசியா 'kuttychuvar.com' சார்பா 'வாய மூடி சும்மா இருடா' பாட்ட  மிஸ்கினுக்கு   dedicate பண்றோம்....