வன்மையாக கண்டிக்கிறோம்

12th முடிச்சு ,ஒரு collegela சேர்ந்து,

ரெண்டு மூணு லட்சம் செலவு பண்ணி,

paper திருத்தற அன்னைக்கு காலைல பொண்டாட்டி கூட சண்ட போட்ட காண்டுல arrear வெச்சு உடற வாத்தியார்களுக்கு நடுவுல,arrear வெக்காம பாஸ் பண்ணி degree வாங்கி,

campus interviewல எள்ளுன்னா எண்ணையா  இருப்பேன் , ஸ்னேஹானா பிரசன்னாவா  இருப்பேன் , ரோஜான்னா R.K செல்வமனியா  இருப்பேன்னு ஏதேதோ சொல்லி place ஆகி,

offer letterக்கு மூணு மாசம் wait பண்ணி,call letterக்கு ஆறு மாசம் பண்ணி, ஒரு வருஷம் கழிச்சு வேலைல சேர்ந்து,

சென்னை அல்லது பெங்களூர்ல பத்துக்கு பத்து sizela ரெண்டு ரூம் இருக்கற வீட்டுக்கு பத்தாயிரம் வாடகை குடுத்து, அம்பதாயிரம் advance குடுத்து,

அந்த வீட்லயும் ஆணி அடிக்க கூடாது, தண்ணி அடிக்க கூடாது, அத அடிக்க கூடாது, இத அடிக்க கூடாதுன்னு ஆயித்தெட்டு condition போடப்பட்டு,

இட்லியா 'ஈ'ட்லியான்னு தெரியாத அளவுக்கு ஈ ஒட்டிருக்கற messல breakfast சாப்டு,
எரும மாட்ட விட slowa move ஆகுற trafficla office போய்,

படிக்காத technology, முடிக்காத project, மடிக்காத  laptop, கிட்டத்தட்ட கடிக்காத managerன்னு officela குப்ப கொட்டி,

பண்டிகைக்கு காக்கைக்கு சோறு வெக்கற மாதிரி இத்துணுண்டு வெச்சுட்டு 75 ரூபா பில் போடுற office canteenல lunch சாப்டு,லவ் பண்லாம்னு பண்ணா, பொண்ணுங்களால அவமானப்படுத்தப்பட்டு,

லீவ்ல ஊருக்கு போறதுக்கு ஆனானப்பட்ட IRCTCலையே tatkalல டிக்கெட் புக் பண்ணி,

ஊருக்கு போனா, 'எப்ப onsite போக போற?', 'சம்பளம் எவ்வளவுன்னு' கேக்கற மாமா, சித்தப்பா , பெரிப்பா கிட்ட சமாளிச்சு,

வாழ்ந்துட்டு இருக்கற software engineergala பாத்து சில பெருசுக, 'உங்களுக்கு  என்னப்பா  , முப்பதாயிரம் சம்பளம் வாங்குறீங்க , ஜாலியா இருக்கீங்க'ன்னு assaulta ஒரு sentenceல கேட்டர்றாங்க....

இப்படி கேக்கற ஆட்கள வன்மையா கண்டிக்கரதோட, இனிமே இதே வார்த்தைய வேற ஏதாவது software engineer கிட்ட சொன்னா, உங்க மேல கேஸ் போடறதுக்கும், உண்ணாவிரதம்
இருக்கறதுக்கும் கூட தயங்க மாட்டோம்னு சொல்லிக்கறோம்.....