தாண்டவம்

சென்னைல பாரிஸ் cornerல இருக்கற எதோ ஒரு  CD கடைக்கு போய்,randoma கைய உட்டு  மூணு CD எடுத்து ,அதுல CDக்கு பத்து சீன சுட்டா ஒரு படம் ஆச்சு....இத தான இதுக்கு முன்னாடி 4 படத்துலயும் பண்ணுனோம்.....அதுக்குள்ள எதுக்கு போய் assistant director கதையெல்லாம் சுட்டுட்டு.....இதெல்லாம் நல்லாவா இருக்கு Mr Vijay?? 


கதை: அதான் trailerல 'An unusual revenge storyனு' போடும்போதே,நமக்கு தெரிஞ்சு போற usualலான பழிவாங்குற கதைதான். அனுஷ்காவ கொன்னுர்றாங்க ,விக்ரம் பழிவாங்குறார்.... 

விக்ரம் indian intelligence agency RAWல work பண்ணிட்டிருக்கார், அனுஷ்கா eye doctora இருக்காங்க,books படிக்கறது, painting, musicன்னு கிட்டத்தட்ட Bradleyயோட ரெண்டாவது சிஷ்யைங்கற(மொத சிஷ்யர் தான் சந்திரமுகி ரஜினியாச்சே) அளவுக்கு காட்டிருக்காங்க(தக்காளி,,ஏதோ அனுஷ்காவா இருந்தங்காட்டி பொறுத்துக்கிட்டோம்).... ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்குது.

கூட வேலை செய்யற ஜகபதி பாபு, நம்ம நாட்டோட ராணுவ ரகசியத்த வித்து, பணம் சம்பாதிக்கறதுக்கு தடையா விக்ரம் இருக்காருங்கரதுக்காக ,விக்கிரம லண்டன் அனுப்பி, ஒரு bomb blastல சிக்க வெக்கறாங்க....அந்த bom blastல அனுஷ்கா செத்தர்றாங்க,விக்ரமுக்கு கண் போயிருது. கண் இல்லாமையே, echolocation மூலமாவாவே, வில்லன்கள பழி வாங்கறார்....

அனுஷ்கா விக்ரம் romance நல்லா இருக்கு, மிச்சபடி,full படமும் flata, averagea போகுது....
படத்துல ஆறு பாட்டு, எல்லாமே slow, ஒரு ஒரு பாட்டும் ஒரு மாசம் ஓடற மாதிரி ஒரு feeling....background score செம மொக்கை...Background music.நல்லா இருந்திருந்தா படம் இன்னும் கொஞ்ச நல்லா இருந்த பீலிங் வந்திருக்கும்....

நீரவ் ஷா வழக்கம்போல நல்லா பண்ணிருக்கார்.... சந்தானம், நாசர், எமி , லக்ஸ்மி ராய் எல்லாரும் OK....


மிச்சபடி Editor, Choreographer பத்தி பெருசா சொல்றதுக்கு ஒன்னும் இல்ல.... எல்லாரும், taluk officeல வேல செய்யற ஆண்ட்டி மாதிரி அவங்கவங்க கடமைய செஞ்சுட்டாங்க....

தலைவி அனுஷ்கா fans, விக்ரம் fans, எமி ,லக்ஷ்மி ராய் fans,வேல வெட்டி இல்லாதவங்க, இந்த வாரம் ஏதாவது படம் பாத்தே தீரணும்னு முடிவு எடுத்தவங்க  தியேட்டர் போய் பாருங்க.... ரொம்ப நல்ல படம் பாக்கணும்னு நெனைக்கறவங்க   போஸ்டர் பாத்தா கூட பத்து அடி தாண்டவும்....

குட்டிச்சுவர் verdict :


வன்மையாக கண்டிக்கிறோம்

12th முடிச்சு ,ஒரு collegela சேர்ந்து,

ரெண்டு மூணு லட்சம் செலவு பண்ணி,

paper திருத்தற அன்னைக்கு காலைல பொண்டாட்டி கூட சண்ட போட்ட காண்டுல arrear வெச்சு உடற வாத்தியார்களுக்கு நடுவுல,arrear வெக்காம பாஸ் பண்ணி degree வாங்கி,

campus interviewல எள்ளுன்னா எண்ணையா  இருப்பேன் , ஸ்னேஹானா பிரசன்னாவா  இருப்பேன் , ரோஜான்னா R.K செல்வமனியா  இருப்பேன்னு ஏதேதோ சொல்லி place ஆகி,

offer letterக்கு மூணு மாசம் wait பண்ணி,call letterக்கு ஆறு மாசம் பண்ணி, ஒரு வருஷம் கழிச்சு வேலைல சேர்ந்து,

சென்னை அல்லது பெங்களூர்ல பத்துக்கு பத்து sizela ரெண்டு ரூம் இருக்கற வீட்டுக்கு பத்தாயிரம் வாடகை குடுத்து, அம்பதாயிரம் advance குடுத்து,

அந்த வீட்லயும் ஆணி அடிக்க கூடாது, தண்ணி அடிக்க கூடாது, அத அடிக்க கூடாது, இத அடிக்க கூடாதுன்னு ஆயித்தெட்டு condition போடப்பட்டு,

இட்லியா 'ஈ'ட்லியான்னு தெரியாத அளவுக்கு ஈ ஒட்டிருக்கற messல breakfast சாப்டு,
எரும மாட்ட விட slowa move ஆகுற trafficla office போய்,

படிக்காத technology, முடிக்காத project, மடிக்காத  laptop, கிட்டத்தட்ட கடிக்காத managerன்னு officela குப்ப கொட்டி,

பண்டிகைக்கு காக்கைக்கு சோறு வெக்கற மாதிரி இத்துணுண்டு வெச்சுட்டு 75 ரூபா பில் போடுற office canteenல lunch சாப்டு,லவ் பண்லாம்னு பண்ணா, பொண்ணுங்களால அவமானப்படுத்தப்பட்டு,

லீவ்ல ஊருக்கு போறதுக்கு ஆனானப்பட்ட IRCTCலையே tatkalல டிக்கெட் புக் பண்ணி,

ஊருக்கு போனா, 'எப்ப onsite போக போற?', 'சம்பளம் எவ்வளவுன்னு' கேக்கற மாமா, சித்தப்பா , பெரிப்பா கிட்ட சமாளிச்சு,

வாழ்ந்துட்டு இருக்கற software engineergala பாத்து சில பெருசுக, 'உங்களுக்கு  என்னப்பா  , முப்பதாயிரம் சம்பளம் வாங்குறீங்க , ஜாலியா இருக்கீங்க'ன்னு assaulta ஒரு sentenceல கேட்டர்றாங்க....

இப்படி கேக்கற ஆட்கள வன்மையா கண்டிக்கரதோட, இனிமே இதே வார்த்தைய வேற ஏதாவது software engineer கிட்ட சொன்னா, உங்க மேல கேஸ் போடறதுக்கும், உண்ணாவிரதம்
இருக்கறதுக்கும் கூட தயங்க மாட்டோம்னு சொல்லிக்கறோம்.....


நீங்க,ஜோதிகா இல்ல....


காலைல எந்திருச்சு,குளிச்சு,dressக்கு matcha கண்ல, காதுல, கழுத்துல, கால்ல, மாட்டிட்டு, எதோ Cannes film festivelக்கு போற ஐஸ்வர்யா ராய் rangeக்கு office போற;

Asian paints exterior emulsion விளம்பரத்துல வர்ற செவுரு மாதிரி மூஞ்சில coating அடிச்சுக்கற;

Cooling glass, Headphone இல்லாம வெளிய வர மறுக்கற(headphone wire பிஞ்சு ஒரு வாரம் ஆயிருந்தாலும் பரவால்ல);

பஸ்லயோ share autoலையோ போகும்போது தெரியாம யாராவது கால மிதிச்சுட்டா 'OUCH' 'OOPS' ன்னு கத்தற;

மூனாங்கிலாசையே முழுசா படிக்காத auto driver கிட்ட 'I dont have change, do u have change for 500??'ன்னு englishல கேக்கற;

வெளிய பெரிய hotelக்கு சாப்பிட போனா, சாப்பிடறதையும், என்ஜாய் பண்றதையும் விட, அங்கங்க fountain இருக்கற இடமா பாத்து நின்னு facebookla போடறதுக்காக போட்டோ எடுத்துக்கற;

ஏதாவது பையன் பாக்கறான்னு  தெரிஞ்சுருச்சுன்னா  உடனே over expression குடுக்கறது , பக்கத்துல இருக்கற frienda கிள்றது, தூரத்துல போற team mateக்கு ஹாய் சொல்றது,cell phonea சுத்தறதுன்னு 'heroinism போடற;

பசங்க  facebookல message பண்ணா மூணு நாள் கழிச்சு reply பண்ற ;

பசங்க  friend request குடுத்தா  மூணு மாசம் கழிச்சு accept பண்ற, சில சமயம் accept பண்ணாம கூட உடற;

மூணு நாளைக்கு ஒரு தடவையாவது facebook profile picture change பண்ற;

அதுல ஒரு போட்டோவாவது ஒரு குழந்தைய கட்டி புடிச்சிட்டு இருக்கற மாதிரி போட்டு, அந்த போட்டோவுக்கு காசு குடுத்தாவது 'Awesome pic.... u look sooperrr ♥♥♥♥' ன்னு கமெண்ட் போட சொல்லுற;நாட்ல நடக்கறத பத்தி ஒண்ணுமே தெரிலன்னா கூட,சாக்ரடீஸ் rangeக்கு 'The man who refuses to judge, who neither agrees nor disagrees, who declares that there are no absolutes and believes that he escapes responsibility, is the man responsible for all the blood that is now spilled in the world. Reality is an absolute, existence is an absolute, a speck of dust is an absolute and so is a human life.இப்படி யாருக்கும் புரியாம facebook status போடுற;

சப்பாத்தி, தோசைய கூட spoonla சாப்பிடுற;
ரோட்ல போனா எல்லாருமே தன்ன பாக்கரதாவே நெனச்சுக்கற;


நவநாகரீக மங்கைகளே ,உங்களுக்கு
ஒன்னே ஒன்னு சொல்லிக்கறோம்,

You are not Jyothika;
நுவ்வு ஜோதிகா லேது;
நிங்கள் ஜோதிகா இல்லா;
துமாரா ஜோதிகா நஹி;

நீங்க ஜோதிகா இல்ல;

                                                                                                   

சாப்ட்வேர் கம்பெனிகளில் முன்னேறுவது எப்படி??

Software Engineers மொத்தம் ரெண்டு வகை, 
காலைல 8 மணிக்கு ஆபீஸ் வந்துட்டு switch போட்ட grinder மாதிரி, night வரைக்கும் உக்காந்து எல்லா வேலையும் இழுத்து போட்டு செஞ்சுட்டு ,work pressureனு வீட்ல போய் அம்மா,அப்பா,பொண்டாட்டி கூட சண்ட போட்டுட்டு படுத்து தூங்கறவங்க மொத கோஷ்டி.இவங்க, அவங்களா உழைச்சு , increment வாங்கி , onsite போய், சம்பாரிச்சு, மண்டைல முடி கொட்டி, கல்யாணம் பண்ணி செட்டில் ஆயிருவாங்க.... இவங்களுக்கு நம்ம அட்வைஸ் ஏதும் தேவை இல்ல....ரெண்டாவது கோஷ்டி:
வேல செய்ய புடிக்காம, கடுப்புல வந்து, ஏனோ தானோன்னு வேல செஞ்சு, increment இல்லாம,onsite இல்லாம, வீட்ல, 'சாப்பாட்ல உப்பு இல்லன்னு' சொன்னா,' PCS/Cunfosys/GTS/JCLல தான வேல செய்யற??' ன்னு  நக்கல் பேச்சுக்கு ஆள் ஆகி,தினமும் Managerகிட்ட 'You have to put some extra efforts man'ன்னு பேச்சு வாங்கிட்டு இருக்கற   73% பேரு....


இவங்கல்லாம் கஷ்டப்பட்டு வேல செய்யாமலே முன்னேறரதுக்கு எளிய வழிகள்:

*.காலைல மேனேஜர் office போறதுக்கு முன்னாடி நம்ம  போயரனும்,Evening அவர்  கெளம்புனதுக்கு அப்புறம் தான் நம்ம கெளம்பனும்(அந்த timeல வேல செய்யனும்கறது முக்கியம் இல்ல....).....

*. 5 mins வேலையா இருந்தாலும், பெருசா build up பண்ணனும்,
For example,
உங்க  lead சின்னதா excel sheetla ஒரு fieldla ஏதாவது change பண்ண சொன்னாங்கன்னா, அந்த வேலைய செஞ்சு முடிச்சிட்டு,

Hi Ramesh,

As discussed with you yesterday evening over phone, I have successfully changed 3rd row, 4th column of the 'employee details' excel sheet. 
Please find the updated excel sheet in the following folder path,

<<folder path/file name>>

Please reply back for any clarifications

Thank you,
XXXXXXXXXXXXXX,
Software Analyst,
YYYY Consultancy Solutions,
Chennai.

அப்படின்னு 5 நிமிஷ வேலைக்கு 15 நிமிஷம் செலவு பண்ணி மெயில் போடணும்....Team members, module lead, group lead, project manager எல்லார்த்தையும் CCல வெக்கணும்....

* .birthday celebrations, Team outingநா, மூஞ்சில cake  பூசறது , photo எடுக்கும்போது கொம்பு வெக்கறது , அப்பப்ப ரெண்டு மூணு மொக்கைய போடறதுன்னு நல்லா  'performance' பண்ணனும்....


*Managera எதிர்த்து பேசவே கூடாது, manager சொன்னா ஒன்னும் ஒன்னும் மூணு....
*  தெரியாம கூட , 'தெரியாது' ங்கற வார்த்தைய சொல்லிரவே கூடாது. சுத்தமா தெரியாத ஒரு tool, software அல்லது technology பத்தி manager/lead கேட்டா கூட 
Its a kind of,Its a  sort of, In the sense, usability, modularity, quality, technically speaking , cost cutting, probably, actually  இந்த மாதிரி வார்த்தைகள போட்டு, ஒரு statement குடுத்தரனும்...

*.Client visit வந்தா, clientsஓட நல்லா interact  பண்ணனும். 
What do you think about Indian culture?, 
Which one u like most, Dosa or Chappathi?
What will be the future of Indian Software Engineers?(அங்க Eurozone crisis  வந்து,  கொஞ்ச நாள்ல அவன் futureருக்கே வழியில்லன்னு தெரிஞ்சிருந்தாலும் பரவால்ல....)
 இந்த மாதிரி மொக்கத்தனமான கேள்வியெல்லாம் கேக்கணும்....

*. அப்பப்ப sweets எடுத்துட்டு வரணும்,

Hi All,
Sweets at my desk, Please help yourselves,

 அப்டின்னு mail போட்டு எல்லார்த்துக்கும் குடுக்கணும்....இப்படி டகில்பாஸ் வேல செஞ்சாதான் நம்மளோட managerஉக்கு நம்மளோட  teamwork தெரியும்.

இது போக அப்பப்ப யாருக்காவது ஏதாவது சொல்லிக்குடுக்கனும்  (எல்லார்த்துக்கும் தெரியுற மாதிரி சத்தமா ), Juniorsக்கு அட்வைஸ்  பண்ணனும்   ,Team movie போனா ticket book பண்ணனும் ,cab book  பண்ணனும், Clean shave, formalsனு  Raymonds model மாதிரி சுத்தனும்.

இப்படி மேல சொன்ன வேலையெல்லாம் செஞ்சா , Software fieldல முன்னேறி, onsite போயி, சம்பாரிச்சு கல்யாணம் பண்ணி, ஊற தாண்டி ஊரப்பாக்கத்துல ஒரு இடம் வாங்கி settle ஆயிறலாம்....


முகமூடி

First half: 
ஜீவா,  'குங் பு' class போயிட்டு,  சும்மா தண்ட சோரா ஊற சுத்திட்டு இருக்கார், 
வில்லன் நரேன் கோஷ்டி  நெறைய பக்கம் கொள்ளை அடிச்சிட்டு  இருக்காங்க ,அவங்கள நம்ம ஊர் போலீஸ் நால புடிக்க  முடில, so நாசர வரவெச்சிருக்காங்க....இதுக்கு நடுவுல ஜீவாக்கு நாசர் பொண்ணு(heroine) மேல லவ்வு.... 


ஒரு தடவ heroinea impress பண்றதுக்காக, சும்மா ஒரு getup போட்டுட்டு வீட்டுக்கு போறார், திரும்பி வர்ற வழியில அந்த naren group  கொள்ளக்காரங்கள்ள  ஒருத்தன  புடுச்சு குடுக்கறார்....உடனே 'முகமூடி,Superhero' ன்னு famous ஆயிர்றார், So,வில்லன் கோஷ்டி, ஜீவாவையும், நாசரையும் போட்டு தள்ள ட்ரை பண்றாங்க....ஜீவா வீட்ல ரெண்டு தாத்தா இருக்காங்க, ஒருத்தர் costume designer, இன்னொருத்தர் scientist, வேற என்ன, scientistனாளே தமிழ் சினிமால ஒரு robot பொம்மை , ரெண்டு wire வெச்சுக்கிட்டு 'soldering' பண்றதுதான வழக்கம், அத தான் இதுலயும் காட்டிருக்காங்க.... இன்னும் எத்தன நாளைக்குயா தமிழ் சினிமால scientist எல்லாம் solderingங்கே வெச்சிட்டு இருப்பாங்க??, ஒரு welding , foundry அளவுக்காவது improve பண்ணுங்கப்பா.... இந்த ரெண்டு தாத்தாவும் சேர்ந்து ஜீவா வில்லன்கள புடிக்கறதுக்கு help பண்றாங்க....

இப்படி  first halfla comedy, super herokku build upன்னு OKவா இருக்கு....

Second half:

second halfல ஒரு gluteus maximusஉம் கெடயாது.... செம மொக்கையான climax வேற .

Overall:

மிஸ்கின் TVla எல்லாம்  முகமூடி costumeக்கு அவ்வளவு பில்ட் up குடுத்துட்டு, எதோ சரவணா storesல 2  மீட்டர் polyster பிட் துணி வாங்கி , 'மணி tailors'ல குடுத்து தெச்ச மாதிரி ஒரு build up இல்லாம சப்பையா  காட்டீர்றாங்க.... அந்த costume போடறதுனால என்ன useனும் சொல்லல....வழக்கம் போல மிஸ்கின் படத்துல இருக்கற bar song, reverseல நடக்கற மாதிரி ஒரு சாங், slow motionல கால காற்றதுன்னு எல்லாமே இருக்கு....

இந்த படத்துல எல்லா charectersமே வீட்ல மூணாவது அல்லது நாலாவது floorல தான் இருப்பாங்க, யாராவது யாரையாவது பாக்க போனா, அவங்க போய் வண்டிய நிறுத்திட்டு மூணு floor நடந்து போறத fulla காட்றாங்கப்பா.... மிச்ச படத்துலயெல்லாம் fight, song na தான்  தம்  அடிக்க போவாங்க, இந்த படத்துல மாடி படிய காமிச்சாலே போயிர்றாங்கப்பா....

திடீர்னு ஏதாவது சீன் நல்லா இருக்கேன்னு நிமிர்ந்து உக்காந்தா, அந்த சீன் ரொம்ப நேரத்துக்கு போயிட்டே இருக்கு....'fightநா fighte போட்டுட்டு இருப்பியா??, song, song'ன்னு audience responseவர்ற அளவுக்கு சில sequences lengthy....

ஆகமொத்தம் படத்துல, நாசர் மூக்க தவிர பெருசா ஒன்னும் இல்ல....

kuttychuvar verdict: between 'OK' and 'THU'கடைசியா 'kuttychuvar.com' சார்பா 'வாய மூடி சும்மா இருடா' பாட்ட  மிஸ்கினுக்கு   dedicate பண்றோம்....