ஒரு உலகம் இருந்தது....

'Home away from home'னு போர்டு போட்ட hostel;
 Mech Rockz, MZ Rockzzனு அங்கங்க எழுதியிக்கற toilet;
 கொக்குக்கு அடுத்து கழுத்த அதிகமா  ஆட்டுற  உயிரினமான வார்டன்;
ஏதாவது பண்ணி மாட்டிக்கிட்டா, ஒன்றரை மணி நேரம் புடிச்சு மொக்கைய போடுற RT;
கிட்டத்தட்ட postmortem செஞ்ச மாதிரி இருக்கற paste;
மொக்க மெஸ், அதுலயும் பத்து பதினஞ்சு சப்பாத்தி தின்கிற குரூப்,queue break பண்ணி நடுவுல நின்னு தோசை வாங்குற குரூப்;
 Birhtday பொதுமாத்து,தாத்தா கடை  treat;
 College Id cardukku பதிலா விசிடிங் கார்டு கழுத்துல தொங்குனா கூட allow பண்ற watchman;
 "All of you just please submit your assignments on friday, but friday doesnot include the friday pa" னு சொல்ற Maddy;
 Copy அடிச்சு program போட்டாலும் 33 error வர்ற lab exam, கஷ்டப்பட்டு மிச்ச ரெண்டரை மணி நேரம் உக்காந்து மண்டைய பிச்சு 33 errora , 3 errora கொரைக்கற சுகம்;
அவன்லா அவள correct பண்ணிட்டானான்னு வர்ற கிசு கிசு..... 


இனி ஒரு நாள் லீவ் எடுதன்னா debar பன்னிருவாங்கன்னு மெரட்டற Tutor;
50 ரூபா குடுத்தா 50 நாளைக்கு வேண்ணாலும் மெடிக்கல் certificate குடுக்கற பீளமேடு doctors(especially sathyanarayanan MBBS);
படிங்கடா, படிங்கடான்னு  கெட்ட  வார்த்தைல  திட்ற placement rep, 
எழுதுன Yashwant kanetkara விட Let us C booka அதிக நாள் கைல வெச்சிருந்த ஒரு கோஷ்டி(especially me),
வில்லு பாத்துட்டு cell phona switch off பண்ண விஜய் fans,
அசல் பாத்துட்டு அப்பிடியே பஸ் ஏறி ஊருக்கு போன அஜித் fans,
5 பேர் cut off போட்ட ஒரு தம்,
புக்க வித்து அடிச்ச பீர்,
G blockla கூட்டமா உக்காந்து பாக்கற cricket matches;
Vijay vs Ajith fights, Sachin vs Dhoni fights, Sachin vs Ganguly fights, Terra patrick vs aletta ocean fights,
அழகழகா அங்கங்க சுத்திட்டிருக்கற BSc IT,FT figures;
பீளமேடு, எஸ்ஸோ, சௌரிபாளையம்   TASMAC,
Intrams, Dramatix, Rhythm, Win hearts, NMB cream bun, RV paneer puff, Shahi grill, Keerthi mess mutta chappathi,மணீஸ் தியேட்டர் night show, Coffee day and Boomerang ஜோடிகள்,  micro xerox, mini cd.... 
இதெல்லாம் இருந்த ஒரு சந்தோசமான உலகம் இருந்துச்சு.....அங்க   மிகப்பெரிய  கவலையே, நம்ம சைட் அடிக்கற figure ,வேற ஒருத்தன் கூட பேசறாளேன்னு தான்,
அங்க  மிகப்பெரிய கோபமே, நம்ம வாங்கிட்டு வந்த 'தம்'ம , தெரியாம எடுத்து அடிசிட்டானுகளேன்னு தான், 
அங்க  மிகப்பெரிய சண்டையே, ****** நல்ல பிகரா?, இல்ல ********** நல்ல பிகரா?ன்னு தான்,
அங்க மிகப்பெரிய எதிரியே, Retest வெக்க மாட்டேன்னு சொல்ற சில mam தான்,

நாலு வருஷத்துல கொஞ்சம் சோகமா இருந்தது செமஸ்டர் ரிசல்ட் வந்த 8 நாளாதான் இருக்கும்.

ஆனா இப்போ, AC office, கைல coffee, பாக்கெட்ல ஒரு பக்கெட் தம், oppositela குட்டி டிரஸ் போட்டுட்டு ரெண்டு மூணு பிகர் உக்காந்திருக்கு, ஆனாலும், collegeப்ப இருந்த சந்தோசம் இல்ல....

                                              MISS U F5ERZ, MISS U PSG TECH