நான் ஈ :

எஸ் எஸ் ராஜமௌலி , இவர் தெலுங்கு  டைரக்ட் பண்ண எல்லா படமும் minimum சூப்பர் ஹிட் தான்.இவர் படத்த ரீமேக் பண்ணியே பல பேர் பெரிய ஆள் ஆயிருக்காங்க.


நான் ஈ :
தன்ன கொலை பண்ண வில்லன,ஹீரோ , திரும்ப  'ஈ'யா பொறந்து  பழி வாங்குற கதை.இப்படி மொட்டையா கதைய கேட்டா,வாழப்பழ காமெடி பாத்த மாதிரி சிரிப்பு வர தான் செய்யும்.ஆனா படம் கண்டிப்பா அப்படி இல்ல....

வழக்கமான , ஹீரோ ஹீரோயின் மாத்தி மாத்தி பாக்கறது,சிரிக்கறது , பஞ்சு மிட்டாய் வாங்கி திங்கரதுன்னு காட்டாம, ஒரு செம fresh ஆனா romance சீன்ஸ்,  
'ஈ'  பொறந்ததுல இருந்து வில்லன பாக்கற வரைக்கும் வர்ற சின்ன சின்ன விஷயம், இன்டர்வெல் முன்னாடி வில்லன் கிட்ட 'I WILL KILL YOU' ன்னு எழுதறதுன்னு first half தாறுமாறு தக்காளி சோறு.

செகண்ட் halfla வில்லன்  ஈய புடிக்க படுற பாடு, samantha ஹெல்ப்  ,சந்தானம் காமெடி, End creditsla ஈ டான்ஸ்,  இப்படி எந்த சீனுமே போர் அடிக்கல.

சுதீப், நானி, சமந்தா , மிச்ச actors எல்லாருமே சூப்பர். சுதீப்போட தமிழ் உச்சரிப்பு தான், தமிழ் படத்துல வர்ற 'சேட்' பேசறமாதிரியே இருக்கு.

படத்துல பாட்டு,background மியூசிக் chancae இல்ல. 
ஒளிப்பதிவு , எடிட்டிங் ,டயலாக்(except 'செயின் கட் ஆனமாதிரி, அவன் ஞாபகத்தையும் கட் பன்னிரு' dialogue)  எல்லாமே பெர்பெக்ட் .
தமிழ் தெலுங்கு bilingualலா இருந்தாலும் ,வண்டி registration கூட TN ன்னு இருக்கறது சூப்பர்.

மொத்த படத்துலையே ஒரே ஒரு சாமியார் சீன் தான் மொக்க.
என்ன பண்றது,
சாமியார் இல்லாத தெலுங்குபடத்த பாக்கறது ,
மாமியார் இல்லாத மெகாசீரியல பாக்கற அளவு கஷ்டமாச்சே....  

first நாள் தியேட்டர்ல கிட்டத்தட்ட நானும் , ஈயும் மட்டும் தான் இருந்தோம், ஆனா அடுத்த நாளே செம பிக் up . ரெண்டாவது தடவ பாக்கும்போது செம audience response.


ஒரு டைரக்டர் நெனச்சா ஒரு ஈய கூட மாஸ் ஹீரோ ஆக்கலாம்னு நிருபிச்சிருக்கார்.
வறுமைக்கோட்டுக்கு கீழ இருக்கற ஹீரோ, எருமைமாடு மேய்க்கிற ஹீரோயின், லவ் பண்றாங்க, கடைசில செத்துப்போராங்கன்னு படம் எடுத்தா, வரிஞ்சு கட்டிட்டு பாராட்டற பத்திரிகைகள், directors ,இந்த மாதிரி படங்களையும் பாராட்டலாம்.

வயசுல இருந்து 60 வயசு வரைக்கும் எல்லாரையும் ரசிக்க வெக்கற படம்.சந்தேஹமே இல்லாம,இதுவரைக்கும் ரிலீஸ் ஆனதுலையே,  இந்த வருஷத்தோட BEST படம் இதுதான்....

Verdict: