இத தட்டிக்கேக்க யாருமே இல்லையா??

பாலினிது தேனினிது என்பதம் மக்கள்
பீர்ஒன்று குடிக்கா தவர் 

                                                                               -தெருக்குறள்

'பீர் அடிக்கலாமா?
அப்படின்னு, 7 பேர் இருக்கற ரூம்ல ஒருத்தன் வாய்ல இருந்து வந்த உடனே, பீர் வாங்கலாம்னு ,ஒரு T Shirta போட்டுட்டு, உள்ள இருந்த 'laptop' அ எடுத்து வெளிய வெச்சுட்டு ,laptop bag மட்டும் எடுத்துட்டு பக்கத்து 'TASMAC' போனா..... , ஒரு நிமிஷம்.... டாஸ்மாக் பத்தி தெரியாதவங்க கீழ இருக்கற டாஸ்மாக் விளக்கத்த மொதல்ல  படிங்க....
டாஸ்மாக்ங்கறது ஒரு பச்சை போர்டு , 10*10 ரூம், ஒரு 50,60 அட்டை பெட்டி, 500,600 bottle, ரெண்டு வொர்க் ஆகாத பிரிட்ஜ் , ஒரு பேன், ரெண்டு tubelight , தெலுங்கு பட வில்லன் மாதிரி எப்பவுமே மொறைக்கற ரெண்டு supplier, இத எல்லார்த்தையும் அடச்சு, முன்னாடி ஒரு கம்பி கிரில், அதுல ஒரு பாட்டில் மட்டும் வர்ற அளவுக்கு ஒரு ஓட்டை.... இது எல்லார்த்துக்கும் வெளிய, ரெண்டு கை, ரெண்டு கால், ஒன்றரை கிட்னி, ஒரு ஹார்ட், கால் லிவர் ஓட எப்பவுமே நின்னுட்டு இருக்கற இருவது, முப்பது பேர்....

bag எடுத்துட்டு போனா , அங்க ஒரு 20, 30 பேர் முட்டி மோதிட்டு இருப்பாங்க.... மன்னன் பட ரஜினி  மாதிரி கஷ்டப்பட்டு உள்ள போய் 500 ரூபா நோட்ட குடுத்து 'அண்ணா  அஞ்சு KF ஸ்ட்ராங் குடுங்க'  ன்னு கேட்டா....
'ஸ்ட்ராங் இல்ல, lehar தான் இருக்கு , வேணுமா??'ன்னு reply வரும்....

அங்கேயே நின்னு friendukku போன் பண்ணி 'மச்சி lehar தான் இருக்கு , வாங்கட்டா??
'இல்ல மச்சி, lehar சுத்தமா  மப்பு ஏறாது  நீ  அடுத்த டாஸ்மாக்  போய் கேட்டுப்பார்' னு சொல்லுவான். ....

ஒரு ரெண்டு கிலோ மீட்டர் போய், அதுத்த டாஸ்மாக் போனா, வெளிய நின்னுட்டு இருக்கற பெருசு 'தம்பி இங்க பீர் இல்ல.... அடுத்ததுல கேட்டுப்பார்....'
 பீர் அடிக்கறவன     பாத்த உடனே கண்டு புடுச்சர்ரான்கப்பா.....

இந்த தடவ நமக்கே வெறி வந்துரும்.... 'நமக்கே பீர் இல்லையா நாட்ல?? பீர் வாங்காம வீட்ல கால் எடுத்து வெய்க்க போறதில்லன்னு'சபதம் எடுத்துட்டு, அடுத்த டாஸ்மாக்குக்கு வண்டிய விட்டா, friend கிட்ட இருந்து போன் வரும்....
'என்னடா பண்ணிட்டு இருக்க?? சீக்கிரம் வாங்கிட்டு வா,10 மணிக்கு கடைய  close பண்ணிருவான்....sidedishla வாங்கியாச்சு ' 
'15 நிமிஷம் வெயிட் பண்ணு மச்சி, 'பீர்'ஓட வர்றேன்'...next TASMAC:

அங்கயும் ஒரு முப்பது நாப்பது பேர் நின்னுட்டு இருப்பான்....
இந்த லட்சனுத்துல சில கட்சிக தமிழ் நாட்ல பூரண மதுவிலக்கு கொண்டு வர போறாங்களாம்.....வந்து டாஸ்மாக் வாசல்ல பாருங்க....உங்களால பூரணம் விஸ்வனாதன கூட கொண்டு வர முடியாது....

திருப்பியும் மன்னன் ரஜினி மாதிரி உள்ள போய் 
'அண்ணா அஞ்சு KF ஸ்ட்ராங் பீர் குடுங்க....'
'KF இல்ல....'
'இருக்கற ஸ்ட்ராங் பீர்ல அஞ்சு குடுங்க...'
'cooling இல்ல பரவால்லையா?'
'பரவால்ல குடுங்க ''

வெளிய வந்து பீர் பேர பாத்தா 'darkknight', '4500','honeybee', 'mohenjadharo' 'Indian Ocean' இப்படி எதவாது ஒரு கேள்விப்படாத  பேர் இருக்கும்.... அநேகமா இதெல்லாம் , டாஸ்மாக் பின்னாடி பொடக்காலில உக்காந்து suppliere செய்யற பீரா இருக்குமோன்னு டவுட் வரும்....
500 ரூபாய்க்கு 5 பீர் போக,82 ரூபா சில்லறை குடுத்திருப்பான்.... ஐன்ஸ்டீனால கூட ஒரு பீரோட விலைய கண்டுபுடிக்க முடியாதுடா சாமி....

வாங்கிட்டு போய் வீட்ல உக்காந்து பீர் sidedish வெக்க பேப்பர் விரிச்சா  
'டாஸ்மாக்கில் போலி மதுபானங்கள் கண்டுபிடிப்பு 'ன்னு நியூஸ் போட்டுருப்பான்....
'டேய் இதெல்லாம் சுதேசமித்ரன்ல வர வேண்டிய நியூஸ் ஆச்சேடா , இப்பதான் உங்களுக்கு தெரியுதா??'ன்னு பொலம்பிட்டே அடிக்க வேண்டியது தான்....
ஒரு பீர் அடிக்க ஒரு தமிழன், இவ்வளவு பாடு பட வேண்டி இருக்கு....
டாஸ்மாக்ல நல்ல பீர் கெடைக்கறது, சோமாலியாவுல நல்ல சோறு கெடைக்கறத விட கஷ்டம் ஆயிருச்சு....

இத தட்டிக்கேக்க யாருமே இல்லையா??