பூனே வாரியர்ஸ் இந்தியா


கேப்டன்: சவ்ரவ் கங்குலி
பௌலிங் கோச்: டொனால்ட்
batting கோச்: பிரவீன் அம்ரேதாதாக்குன்னு எப்பவுமே ஒரு கூட்டம் இருக்கும்... first IPL ஆரம்பிச்சு
ரெண்டு மேட்ச் தொடர்ந்து  ஜெயிச்ச உடனே அந்த கூட்டத்தோட அழும்பு தாங்க முடியாம போயிட்டு இருந்துது.... அடுத்த மேட்ச்ல இருந்து  தோக்க ஆரம்பிச்ச தாதாவோட  டீம் இன்னைக்கு வரைக்கும் ஒரு செமி finals கூட போகல.... ஒவ்வோரரு தடவ KKR  விளையாடி தோக்கும்போதும் ,

"இந்த மேட்ச்ல தாதா ஒரு சிக்ஸ் அடிச்சாரு, அது போதும் டா  எங்களுக்கு...."

"இன்னைக்கு தாதா ஒரு செம கேட்ச் புடிச்சாரு, அது போதும்  டா, ஜெயிக்கனுன்னு கூட அவசியம் இல்ல...."

இப்படி தூங்கும்போது பாய்ல ஒன்னுக்கு அடிச்ச சின்ன   பசங்க மாதிரி ஏதாவது ஒரு 'சல்பி' காரனத்த சொல்லி மூணு சீசனா எஸ் ஆயிக்கிட்டு இருந்தது அந்த கூட்டம்....

நாலாவது சீசன்ல எந்த டீம்லையுமே எடுக்காததுநால அவரோட கிரிக்கெட் வாழ்க்கையே முடிஞ்சதுன்னு எல்லாரும் நெனைக்கும் போது, புனே வாரியர்ஸ் sign பண்ணாங்க.... யுவராஜ் இல்லாததுனால இந்த சீசன்ல கேப்டன் ஆயிட்டார்.இந்த தடவையாவது கங்குலி, தான் ஒரு ரியல் 'DADA' தான், கால் வெச்ச இடமெல்லாம் வெளங்காம போற 'LEG DADA' இல்லன்னு
ப்ரூவ் பண்ணுவாரான்னு பாப்போம்.

செரி, டீமோட batting line upa பாத்தோம்னா , மிதுன் மன்ஹாஸ், மனிஷ் பண்டே, மோனிஸ் மிஸ்ரா, பெர்குசன் , clarke ,
ஜெஸ்சி ரைடர், உத்தப்பா, நாதன் மெக்கல்லம்,தமிம்,  இந்த மாதிரி, எல்லாருமே அறைவேக்காடாவே இருக்காங்க, ஒருத்தன கூட நம்ப முடியாது.... ஒரே பிளஸ் Angelo Mathews.

பௌலிங்ல , Alfonso Thomas, ராகுல் ஷர்மா,முரளி கார்த்திக், பார்நெல், மாதிரி நல்ல bowlers  இருக்காங்க....
first மூணு சீசன் மாதிரி, பெரிய பௌலிங் இல்லாததுனால, தானே பௌலிங் போட்டு, ஆடிக்கு ஒருக்கா, அம்மாவாசைக்கு ஒருக்கா,  ஒரு விக்கெட் எடுத்தா, கைய்ய தூக்கிட்டு கிரௌண்ட் புல்லா சுத்த மாட்டார்னு நெனைக்கிறேன்....

கீ players: Angelo mathews , ராகுல் ஷர்மா, கம்ரான் கான்....

மொத்ததுல பாத்தா, டீம் செம மொக்கையா இருக்கு.... ஆனா இந்த டீமா வெச்சுகிட்டு, தாதா கப் வாங்கிட்டார்ணா, சச்சினுக்கு பதிலா 'பாரத் ரத்னா' கங்குலிக்கு குடுங்கன்னு போராடலாம்....

IPL 5 பூனே வாரியர்ஸ் ஜெயிக்க இருக்கற வாய்ப்பு??: திருப்பதில லட்டுக்கு  பதிலா, ஜிலேபி குடுக்கரக்கு எவ்வளவு வாய்ப்பு இருக்கோ, அத விட கம்மியாதான் இருக்கு....