அதே கெட்ட வார்த்தை

காலேஜ் முடிச்சு வேலைக்கு சேர்ந்து ஒரு வருஷம் ஆயிருந்துது... ஒரு வெள்ளிக்கிழமை, office ல இருந்து, வீட்டுக்கு வந்து, facebook லாகின் பண்ணி பாத்துட்டு இருந்தேன்.

திடீர்னு, friend suggestionla ஒரு பொண்ணு பேர் என் கண்ணுல பட்டுது.
ப்ரீத்தி ராஜசேகரன். என் கூட, 9th 10th படிச்ச பொண்ணு. நா சைட் அடிச்ச , லவ் பண்றன்னு நெனச்ச, முதல் பொண்ணு. லைப்ல இவள மறக்கவே மாட்டேன்னு நெனச்சேன், ஆனா 11th 12th படிச்ச ஸ்கூல்ல, காலேஜ்ல இதவிட நல்ல பிகர பாத்ததுக்கு அப்றோம் இவ ஞாபகமே இல்லாம போயிருச்சு....

profile உள்ள போய்ட்டு "friend request குடுக்கலாமா வேண்டாமா , ஏற்கனவே 17 பொண்ணுக reject பண்ணிருக்கு" அப்டின்னு mind யோசிக்கறதுக்கு முன்னாடியே , என் கை send friend request பட்டன கிளிக் பன்னிருந்துது....
"How r u.... Do u remember me" அப்டின்னு ஏதேதோ  type பண்ணி மெசேஜ் அனுப்புனேன்.

2005 , தாராபுரம், ponnu matriculation school, 9th Std B sec:

முதல் பெஞ்ச்ல உக்காந்துட்டு இருப்பா. பில்லா 2 teaser மாதிரி  1 நிமிஷத்துல சுண்டி இழுக்கற அளவுக்கு அழகு இல்லன்னாலும், 'கோலங்கள் ' நாடகம் மாதிரி, 3 தடவ தொடர்ந்து பாத்தா நாலாவது தடவ பாக்காம இருக்க முடியாது....

பிரகாஷ்னு ஒருத்தன் கூடவே இருப்பான், schoolukku  வர்றது போறது எல்லாமே அவன் கூடத்தான். சைக்கிள்ல போகும்போது, செயின் பிரச்சன ஏதாவது வந்தா ரிப்பேர் பண்றது, மழை வந்தா , அவள ஆட்டோல அனுப்பிட்டு , அவ cyclelayum சேர்த்து இவன் உருட்டிட்டு போறதுன்னு, அவளுக்கு எல்லா சில்லற வேலையும் அந்த பிரகாஷ் தான் பாப்பான். இவ இப்ப எப்டி இருப்பாங்கற  ஆர்வத்த விட, இந்த பிரகாஷ் இப்ப எப்டி இருப்பாங்கற ஆர்வம் தான் enakku  அதிகமா இருந்துச்சு....

அந்த ரெண்டு வருஷத்துல, Geometry, Graph, Map, Record note, இத எல்லார்த்தவிட நா அதிகமா பாத்தது  இவள்தான்....அவளும்  அப்பப்ப பாத்துட்டு தான் இருந்தா....

10th  படிக்கும் போது, ஒரு தடவ என்கிட்ட வந்து, "இந்த record note sign  வாங்கி தருவியா? நா இன்னைக்கு 4 30 க்கு வீட்டுக்கு போகணும், evening வரைக்கும் இருந்து வாங்க முடியாது "ன்னு சொன்னா.... நானும் சந்தோசத்துல notea வாங்கிட்டேன்..

10 நிமிஷம் கழிச்சு யோசிச்சு பாத்தா, அன்னைக்கு பிரகாஷ் லீவ், அதனால நம்மள அவனுக்கு substitutea use பன்றாளோன்னு தோனுச்சு....அந்த பத்து நிமிஷ gapla  கிளாஸ் பசங்க 'சின்ன பிரகாஷ்'னு என்ன கூப்ட ஆரம்பிச்சுட்டானுக.... 

செம டென்ஷன் ஆகி, அவகிட்ட போய், "ரெகார்ட் நோட் sign வாங்கி தர முடியாது.... என்ன என்ன பிரகாஷ்னு நெனச்சியா?? போடி...."ன்னு சொல்லிட்டேன் ....

'ஒரு கெட்ட வார்த்தை' தான் reply வந்துது....

அப்ப தெரிலையே , மானம் முக்கியமில்ல பிகர் தான் முக்கியம்னு....

அதுக்கப்புறம் அவ கிட்ட பேசவே இல்ல.....

இன்று:

வழக்கமா ஒரு மணி நேரத்துக்கு 3 தடவ facebook login பண்ணி பாக்கறவன், அவளுக்கு friend request குடுத்ததுல இருந்து 6 தடவ லாகின் பண்ண ஆரம்பிச்சேன்....

2 நாள் கழிச்சு அவ friend requesta அக்செப்ட் பண்ணிக்கிட்டா.... அந்த messagekku reply யும் பண்ணிருந்தா.... அப்றோம் அம்மா அப்பா, ஸ்கூல், காலேஜ் பத்தி messagelaye conversation போயிட்டு  இருந்துது....

செரி ,phone number கேப்போம்னு யோசிச்சா, கூட்டமான மெடிக்கல் shopla போய், strawberry flavoured condoms நாலு குடுங்கன்னு கூட கேற்றலாம், ஆனா இந்த பொண்ணுங்க கிட்ட போன் நம்பர் கேக்கரக்கு தைரியம் வர்றதில்ல....
அவளே போன் நம்பர் கேட்டு facebbokla msg பண்ணிருந்தா....

அவ காலேஜ்ல தெரிஞ்சவங்க கிட்ட கேட்டதுல , யார் கூடையும் சுத்துனது இல்ல, நல்ல பொண்ணுன்னு information கெடச்சுது. குடுமபத்துக்கு ஏத்த பொண்ணு, ஸ்கூல்ல சொதப்புன மாதிரி சொதப்பாம, எப்படியாவது லவ் பண்ணி கல்யாணம் பண்ணிரணும்னு கனவு கண்டுட்டு இருந்தேன்....

அப்டியே msg, அப்பப்ப கால்னு நல்லா போய்ட்டு இருந்துது.... இந்த மேட்டர் roommate மூலமா என்னோட ஒரு  காலேஜ் friendகு தெரிஞ்சிருச்சு....

"நல்ல figura , அட்டா?? "
"நம்ம காலேஜ் நந்தினி மாதிரி இருக்குமா????" 
"அடுத்த வாரம் ட்ரீட் வெச்சுரு"னு friend கிட்ட இருந்து msg வந்துட்டு இருந்துது.

அப்பத்தான் அவ கிட்ட , "அப்றோம், யாரையாவது லவ் பண்றியா??"ங்கற முக்கியமான கேள்விய கேட்டிருந்தேன்...

இவன் கிட்ட நம்ம அவள லவ் பண்றோம்னு சொன்னா, எல்லார்கிட்டயும் சொல்லி, அடுத்த வாரம் நம்ம காசிலேயே சரக்கடிச்சுட்டு, நம்மள எதோ காமக்கொடூரன் ரேஞ்சுக்கு ஓட்டி சாவடிச்சிருவாணுக(இதுக்கு முன்னாடி நம்மளும் அத தான் செஞ்சிருக்கோம்....), love பண்றோம்னுசொல்லிறக்கூடாதுன்னு நெனச்சுட்டு,
அவன் கிட்ட இருந்து எஸ்கேப் ஆகறதுக்காக,"மச்சி லவ்லா இல்ல டா, இவள்லாம் 9th ல ரெகார்ட் note எழுதற gapla ரெண்டு பேர்த்த கரெக்ட் பண்றவ,அப்பவே  பிரகாஷ் னு ஒருத்தன் பின்னாடியே சுத்திட்டு இருப்பான், சும்மாவா விட்ட்ருப்பான்....ஸ்கூல்லையே அப்டின்னா காலேஜ்ல எத்தன  பேர் கூட சுத்துனாளோ?? சும்மா கடலைய போட்டு பாப்போம், வொர்க் அவுட் ஆச்சுன்னா  மாயாஜால், மகாபளிபுரம்னு சுத்திட்டு கழட்டி விட்ரனும் மச்சி...." அப்டின்னு type  பண்ணி மெசேஜ் அனுப்பிட்டேன்....

அவ கிட்ட இருந்து யாரையாவது லவ் பண்றியா?ங்கற கேள்விக்கும் இன்னும் பதில் வரல....

ரெண்டு நிமிஷம் கழிச்சு மெசேஜ் டோன் அடிச்சுது,

போன் எடுத்து பாத்தா, ப்ரீத்தி கிட்ட இருந்து மெசேஜ்.

2006 ல சொன்ன அதே கேட்ட வார்த்தை....

என்னடான்னு யோசிச்சுட்டு சென்ட் items எடுத்து பாத்தா, friendukku அனுப்ப வேண்டிய messaga தப்பா ப்ரீத்திக்கு அனுப்பிருந்தேன்....

அதே கெட்ட வார்த்தைல என்ன நானே திட்டிக்கிட்டேன்....

பூனே வாரியர்ஸ் இந்தியா


கேப்டன்: சவ்ரவ் கங்குலி
பௌலிங் கோச்: டொனால்ட்
batting கோச்: பிரவீன் அம்ரே



தாதாக்குன்னு எப்பவுமே ஒரு கூட்டம் இருக்கும்... first IPL ஆரம்பிச்சு
ரெண்டு மேட்ச் தொடர்ந்து  ஜெயிச்ச உடனே அந்த கூட்டத்தோட அழும்பு தாங்க முடியாம போயிட்டு இருந்துது.... அடுத்த மேட்ச்ல இருந்து  தோக்க ஆரம்பிச்ச தாதாவோட  டீம் இன்னைக்கு வரைக்கும் ஒரு செமி finals கூட போகல.... ஒவ்வோரரு தடவ KKR  விளையாடி தோக்கும்போதும் ,

"இந்த மேட்ச்ல தாதா ஒரு சிக்ஸ் அடிச்சாரு, அது போதும் டா  எங்களுக்கு...."

"இன்னைக்கு தாதா ஒரு செம கேட்ச் புடிச்சாரு, அது போதும்  டா, ஜெயிக்கனுன்னு கூட அவசியம் இல்ல...."

இப்படி தூங்கும்போது பாய்ல ஒன்னுக்கு அடிச்ச சின்ன   பசங்க மாதிரி ஏதாவது ஒரு 'சல்பி' காரனத்த சொல்லி மூணு சீசனா எஸ் ஆயிக்கிட்டு இருந்தது அந்த கூட்டம்....

நாலாவது சீசன்ல எந்த டீம்லையுமே எடுக்காததுநால அவரோட கிரிக்கெட் வாழ்க்கையே முடிஞ்சதுன்னு எல்லாரும் நெனைக்கும் போது, புனே வாரியர்ஸ் sign பண்ணாங்க.... யுவராஜ் இல்லாததுனால இந்த சீசன்ல கேப்டன் ஆயிட்டார்.



இந்த தடவையாவது கங்குலி, தான் ஒரு ரியல் 'DADA' தான், கால் வெச்ச இடமெல்லாம் வெளங்காம போற 'LEG DADA' இல்லன்னு
ப்ரூவ் பண்ணுவாரான்னு பாப்போம்.

செரி, டீமோட batting line upa பாத்தோம்னா , மிதுன் மன்ஹாஸ், மனிஷ் பண்டே, மோனிஸ் மிஸ்ரா, பெர்குசன் , clarke ,
ஜெஸ்சி ரைடர், உத்தப்பா, நாதன் மெக்கல்லம்,தமிம்,  இந்த மாதிரி, எல்லாருமே அறைவேக்காடாவே இருக்காங்க, ஒருத்தன கூட நம்ப முடியாது.... ஒரே பிளஸ் Angelo Mathews.

பௌலிங்ல , Alfonso Thomas, ராகுல் ஷர்மா,முரளி கார்த்திக், பார்நெல், மாதிரி நல்ல bowlers  இருக்காங்க....
first மூணு சீசன் மாதிரி, பெரிய பௌலிங் இல்லாததுனால, தானே பௌலிங் போட்டு, ஆடிக்கு ஒருக்கா, அம்மாவாசைக்கு ஒருக்கா,  ஒரு விக்கெட் எடுத்தா, கைய்ய தூக்கிட்டு கிரௌண்ட் புல்லா சுத்த மாட்டார்னு நெனைக்கிறேன்....

கீ players: Angelo mathews , ராகுல் ஷர்மா, கம்ரான் கான்....

மொத்ததுல பாத்தா, டீம் செம மொக்கையா இருக்கு.... ஆனா இந்த டீமா வெச்சுகிட்டு, தாதா கப் வாங்கிட்டார்ணா, சச்சினுக்கு பதிலா 'பாரத் ரத்னா' கங்குலிக்கு குடுங்கன்னு போராடலாம்....

IPL 5 பூனே வாரியர்ஸ் ஜெயிக்க இருக்கற வாய்ப்பு??: திருப்பதில லட்டுக்கு  பதிலா, ஜிலேபி குடுக்கரக்கு எவ்வளவு வாய்ப்பு இருக்கோ, அத விட கம்மியாதான் இருக்கு....

Delhi Daredevils வெளங்குமா??

IPL ஆரம்பிச்சிருச்சு.... 5th std annual examku படிக்கரவன்ல இருந்து, IAS prepare பண்றவன் வரைக்கும் நாசமா போறதுக்கான ஒரு வழி....
நமக்கும் வேற என்ன வேல, ஒவ்வொரு டீம் பத்தியும் பாக்கலாம், மொதல்ல டெல்லி....

டெல்லி டேர்டெவில்ஸ்:

captain: சேவாக் .
coach: எரிக் சிம்மொன்ஸ்
டீம்: Click here for Delhi Daredevils Team

வைகைல தண்ணி வராது;
அண்டார்டிகால பூகம்பம் வராது;
அஜித்துக்கு காமெடி வராது;

இந்த Universal Truths வரிசைல,

சேவாக்குக்கு captaincy வராதுங்கறதும் ஒன்னு. ஆனாலும் அவர நம்பி captaincya குடுத்திருக்கறாங்க....
இதுக்கு  முன்னாடி நடந்த IPL ல 2 தடவ செமி பைனல்ஸ் போயிருக்காங்க.....ரெண்டு தடவையுமே பருத்தி வீரன் கிளைமாக்ஸ் பிரியா மணி மாதிரி கதற கதற....,,,,தோக்கடிசுட்டாங்க....

இந்த தடவ, ஜெயவர்தனே , பீட்டர்சன் ரெண்டு பேரையும் புதுசா வாங்கியிருக்காங்க....




வார்னர் , finch, சேவாக், பீட்டர்சன், ரோஸ் டெய்லர், நமன் ஓஜா, இந்த மாதிரி அதிரடி batsmana வெச்சிருக்காங்க.... atleast 2 பேருக்கு கிளிக் ஆனா 20 ஓவருக்கு, 330 அடிக்க கூட வாய்ப்பு இருக்கு.... ஜெயவர்தனே மட்டும் தான் நின்னு விளையாடற ஆளு....

 bowlersla இர்பான் பதான், அகர்கர், அவிஷ்கர் சால்வி, உமேஷ் யாதவ்னு பல பேர் இருக்காங்க.... இதுல ஏதாவது ரெண்டு பேருக்கு கிளிக் ஆனாக்கூட, 20 ஓவருக்கு 440 ரன் கூட opposite டீம் அடிக்க   வாய்ப்பு இருக்கு!!!!

கீ players: சேவாக், ஜெயவர்தனே, ஆரோன்.

கீழ்த்தரமான players: இர்பான் பதான். அகர்கர்.

இந்த டீம் IPL5 ஜெயிக்கறதுக்கு வாய்ப்பு??: TCS சம்பளம்  hike அளவுக்கு, கொஞ்சமா இருக்கு....

next: Pune Warriors India....COMING SOON....