நாட்டு நடப்பு


நாட்டு நடப்பு 02
* வித்யா பாலனுக்கு நேஷனல் அவார்ட் குடுத்திருக்காங்க, நடிப்புக்கு!!!!..... dirty picture படத்துல வித்யா பாலனோட நடிப்பையும் பாத்திருக்கான்னா , உண்மையிலேயே அந்த ஜுரிக்கு தான் 'சிறந்த ஜுரி'ன்னு அவார்ட் தரனும்....
எப்படியோ,  நம்ம ஷகிலா சேச்சிக்கு oru கலைமாமனியாவது கொடுங்கப்பா....


* மார்ச் 8 ஆம் தேதி womans day. அதுக்காக  பொண்ணுங்க saree கட்டி, பொட்டு வெச்சு, பூ வெச்சுட்டு வேலைக்கு வந்திருந்தாங்க.... womans டே அன்னைக்காவது 'woman' மாதிரி இருக்கணும்னு நெனச்சாங்களே....* அப்புறம் இப்படி ஒரு செய்தி "டாஸ்மாக் ல போலி சரக்கு விக்கறது கண்டுபிடிப்பு"..... ஏன்டா இது 'சுதேசமித்திரன்' லையே வர்ற அளவுக்கு பழைய நியூஸ் ஆச்சேடா , இப்பதா போலி சரக்கு விக்கறது தெரியுதா உங்களுக்கு??  அப்பப்ப குடிமகன்களையும் கண்டுக்கங்கப்பா......

* அஞ்சு ஸ்டேட் election ரிசல்ட் வந்திருச்சு....
இலவுகாத்த கிளி மாதிரி இந்த பழம் பழுக்கும்ன்னு UP லையே வருஷக்கணக்கா காத்து கெடந்தார் ராகுல் காந்தி.... அது வெடிச்சு, பஞ்சு பஞ்சா வெளிய வந்திருச்சு.... வெடிச்சது பஞ்சு மட்டும் இல்ல , congress ஓட கு... கு..... கு.... குட்டி நெஞ்சுந்தான்....

"Rahul retiring tomorrow " ங்கற newsa பாத்துடனையும், ராகுல் காந்தி தான் retire ஆகப்போராரோன்னு சந்தோசப்பட்டா , நம்ம திராவிட் retire ஆகிட்டாரு....


'wall' நோக்கி ஒரு பந்த வீசுனா அது , அதே வேகத்துல திரும்பி வரும்கிற 'newton' ஓட law  வே பொய்யாக்கி, இந்த 'wall ' ல நோக்கி பந்து வீசுனா, அத அப்படியே crease லையே நிக்க வெச்சு bowlersa வெறுப்பேத்துற  சிங்கம்....
Square cut க்கு  இலக்கணம்ன அது டிராவிட் ஓட square cut ஆதான் இருக்கும்.... We will miss u தலைவா.....


சினிமா :

அர்ஜுனோட  மாசி  படம் ரிலீஸ் ஆச்சு....
அர்ஜுன் பேரு மாசி,
ஒரு stationla PC,
அந்த ஏரியா  ரவுடி பேர் 'காசி '
'காசி' ய அழிச்சு AC யா promotion வாங்குவார்.... இதுக்கு மேல என்ன கதை இருக்க போகுது??
AC theatrela OC ல டிக்கெட் கொடுத்தாக்கூட, போலாமான்னு யோசிக்க வேண்டிய படம்....
இன்னும் 'நாங்க', 'சேவற்கொடி' படமும் ரிலீஸ் ஆச்சு....

ஒரு கல் ஒரு கண்ணாடி பட பாட்டு ரிலீஸ் ஆயிருக்கு.... வழக்கம்போல ஹாரிஸ் ஜெயராஜ் பாட்ட கேக்கும்போது வர்ற, "இந்த பாட்ட எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே!!!!" feelings தன இந்த பட பாட்ட கேக்கும்போதும் வருது.... கொஞ்சம் தடவ கேட்டதுல , "வேணாம் மச்சான்" பாட்டு நல்லா இருக்கு....

வானிலை:

* சென்னைல வெயில் ஆரம்பிச்சிருச்சு.... சென்னை வெயில்லயும்  ஒரு advantage இருக்கு, ஒரு வேல ஜட்டி தொவைக்க மறந்துட்டம்னா , கெளம்பரக்கு ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னாடி தொவச்சு போட்டாக்கூட காஞ்சிரும்....இந்த வார பொது அறிவு செய்தி:

நடிகை சோனா வோட தற்போதைய  weight 83 கிலோ....

------------------------------------------------------------------------------------------------------------------------------------

சச்சின் நூறு, நமீதா வீட்டு சோறு- அடுத்த வாரம்....