Labels:

நாட்டு நடப்பு:

போன வார நாட்டு நடப்பு:

* தளபதி மு கா ஸ்டாலினோட பிறந்தநாள் மார்ச் 1 ஆம் தேதி, இதுவரைக்கும் , உதயசூரியனே, இதயசூரியனே, குலவிளக்கே, குத்துவிளக்கே, இப்படி புகழ்ந்து போஸ்டர் ஓட்டிட்டு இருந்த தி மு க காரங்க ஒரு படி மேல போய்,
"கழக சொந்தங்களை இணைக்கும் facebook கே "
அப்படின்னு சென்னை புல்லா போஸ்டர் ஒட்டி எல்லாரையும் திரும்பி பாக்க வெச்சுட்டாங்க....
இவங்களே இப்படி போஸ்டர் அடிக்கும் போது, அழகிரி பிறந்தநாளுக்கு "எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் மார் காட்டி நிக்கும் எங்கள் பூனம் பண்டேவே"ன்னு
போஸ்டர் அடிக்க கூட வாய்ப்பு இருக்கு....

* 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சி விஜய் tvla ஆரம்பிச்சாங்க.... காக்க காக்க அன்புச்செல்வன் மாதிரி வெறப்பா டிரஸ் பண்ணிட்டு வந்து ,
உணவின்  பேர்  கொண்ட பண்டிகை எது??
a )பொங்கல்
b) தீபாவளி
c ) சக்கரை பொங்கல்
d ) மெதுவடை

 இப்படி LKG MISS மாதிரி கேள்வி கேட்டுட்டு இருந்தாரு.... இவனெல்லாம் எப்படி ஜோதிகா லவ் பன்னுச்சோன்னு பல பேர் பொலம்புனாங்க....

* பா ம க பத்தி newse இல்ல.... பா ம க பத்தி நியூஸ் இல்லன்கறதே ஒரு நியூஸ் தான.... 'நாங்க அந்த கட்சியோட கூட்டணி வெக்க மாட்டோம்', 'சினிமால தம் அடிக்க கூடாது', 'ஹிந்தி பாட புத்தகம்லா தமிழ்ல தான் அச்சடிச்சிருக்கனும்னு' ஏதாவது 'பிசு பிசு 'ன்னு பண்ணிட்டிருக்கிற பா ம க, இந்த வாரம் எதுமே பன்னல....

இது போக , இந்த வாரமும் தமிழ் நாட்ல 3 accident,  8 கொலை, 16  கொள்ளை 23 கள்ளக்காதல் , 8 மணி நேரம் கரண்டு கட், தி மு க முன்னாள் MLA வீட்ல வருமான வரி சோதன, ஜெயலலிதா , சசிகலா பெங்களூர் கோர்ட்ல ஆஜர், ன்னு வழக்கமா நடக்கறது ஏதும் மிஸ் ஆகல....

விளையாட்டு:

ஓவர்சீஸ்ல இந்தியா தோக்கறது ஒரு பெரிய newsa??
 "கோலி தான் அடுத்த சச்சின்", இதுதான் இப்ப hot news....
சில பேர் 'ஆமா 'ங்கறாங்க...
சில பேர், "அட போங்கப்பா, ஒரு படம் ஹிட் ஆச்சுன்னா அடுத்த superstar ன்னு சொல்றதும் ,ஒரு century போட்டா ,அடுத்த சச்சின்னு சொல்றதும் சகஜம் தானப்பா!!!, சடகோபன் ரமேஷ கூட தான் அடுத்த சச்சின்னு சொன்னீங்க, அட போங்க பாஸ்சு"ன்னு சொல்றாங்க....

வணிகம்:

இந்த வாரம் தங்கம், Petrol , Gold flake Kings, Lites, Kingfisher Storng விலைல எந்த மாற்றமும் இல்ல....

சினிமா:
அரவான் , கொண்டான் கொடுத்தான் , யார், சங்கர் ஊர் ராஜபாளையம், இந்த 4 தமிழ் படம் ரிலீஸ் ஆச்சு(அட நா பொய் சொல்லல , சத்தியமா கடைசியா இருக்கற 3 படமும் ரிலீஸ் ஆச்சு....)....
அரவான் - ஸ்லோவா இருக்கு, ஆனா நல்லா இருக்கு,
மிச்ச மூணு படம் பாக்கற அளவுக்கு நா தைரியசாலி இல்ல....

இந்த வார பொது அறிவு செய்தி:

சமந்தா பின்னாடி கழுத்துல "YMC" னு பச்சை குத்தியிருப்பா....

இத விட சூடான செய்திகளோட, அடுத்த வாரம் பாப்போம்....