3 விமர்சனம்:

தனுஷ், ஸ்ருதி ஸ்கூல்ல படிச்சிட்டு இருக்காங்க...  ஒரு நாள், தனுஷ் ஸ்ருதிய பாக்கறாரு,நல்லா வெளக்கி வெச்ச வெள்ளி சொம்பு
மாதிரி இருக்க, லவ் அட் first sight, கொஞ்ச நாள் கழிச்சு ஸ்ருதியும் தனுஷ லவ் பண்ண ஆரம்பிக்கறாங்க... தனுஷ பாத்த உடனே ஸ்ருதிக்கும் லவ் at first sight னு காட்டாம விட்டது கொஞ்சம் ஆறுதல்....இந்த  ஸ்கூல் கதை மட்டும் பாக்க நல்லா இருக்கு.

சில வருடங்களுக்கு பிறகு:

ஸ்ருதி  அம்மா , அவள US கூட்டிட்டு போக ட்ரை பண்றாங்க
ஆனா ஸ்ருதி, passporta  எரிச்சுட்டு, தனுஷ கல்யாணம் பண்ணிக்கிறாங்க....

                                                             Intermission
தனுஷ் ஸ்ருதி chemistry ..... யப்பா!!!! இப்பதான் தெரியுது , தனுஷோட நிறம் கருப்பு இல்லய்யா, அவர்  ஒடம்பு fulla  மச்சம்....

ஸ்ருதியும் கமல் பொண்ணுன்னு நிருபிச்சுட்டாங்க, நடிக்கறதுல கொஞ்சம்;kiss அடிக்கறதுல புல்லா....

சில வருடங்களுக்கு பிறகு:

இப்பதான் தெரியவருது,  தனுஷுக்கு 'Bipolar Disorder'. திடீர்னு ரொம்ப கோபப்படறார், திடீர்னு அழுகுறார், கிட்டத்தட்ட  சைக்கோ ஆயிடறார்.. bipolar, hyperbola, parabola ன்னு எங்கிருந்து தான் இந்த வியாதியெல்லாம் கண்டுபுடிக்கிரான்களோ?? இந்த விஷயம் ஸ்ருதிக்கு தெரியக்கூடாதுன்னு மறைக்கறார். கடைசில, வியாதி முத்திப்போக, தற்கொலை செஞ்சுக்கறார்....இப்பெல்லாம் தமிழ் சினிமால negative climax வெக்கறது தக்காளி சோத்துல தயிர் ஊத்தி சாபிடுற மாதிரி casuala ஆனதுனால, நமக்கும் ஏதும் பீலிங்க்ஸ் வர்றது இல்ல.

படத்துல 1 30 மணி நேர second halfla , 1 15 மணி நேரம் அழுதுட்டே இருக்காங்க.... சில எடத்துல மயக்கம் என்ன பாக்கற மாதிரியே இருக்கு....

ஒரு  படத்துல எல்லாரும் அழுதா, மெதுவா பேசுனா, 5 நிமிஷத்துல முடிக்க வேண்டிய சீன 15 நிமிஷத்துக்கு  இழுத்தா , negative climax வெச்சா,  நல்ல படம்னு சொல்லிருவாங்கன்னு நெனச்சுட்டாங்க போல!!!!

தனுஷ் நடிப்பு  தெகட்டிருது.... அப்பப்ப , குடுக்கற காசுக்கு மேல நடிக்கராரோன்னு கூட தோணுது....

படத்தோட plus:
பாட்டு , BGM .
சிவா கார்த்திகேயன் காமெடி.
பிரபு.
first 30 நிமிஷம்.
சில டயலாக்.

மைனஸ்:

செகண்ட் half  .
Y திஸ் கொலைவெறி - வீடியோ

குட்டிச்சுவர் verdict :அப்புறம், இந்த படத்துக்கு, 3 , 35 , 327 னு என்ன பேர் வேண்ணாலும் வெச்சிருந்திருக்கலாம், ஏன்னா இந்த படத்துக்கும் titlekum சம்பந்தமே இல்ல....

PS: மக்களே,, சில websitesல Refreshing, Poignant, excellentனு போட்டுருக்கான்னு நம்பி எமாந்தராதிங்க....