Labels:

வேலன்டைன்ஸ் டே அன்னைக்கு வேலைக்கு போனவர்களே:

வேலன்டைன்ஸ் டே அன்னைக்கு வேலைக்கு போய் காண்டான  எத்தனையோ 'single's ஓட குமுறல்ல  , என்னோட குமுறல இங்க எழுதறேன்:

இங்க normala இருக்கிற எழுத்தெல்லாம் நா சொல்றதாவும், red color ல இருக்கறதெல்லாம், என் மனசாட்சி சொன்னதாவும் நெனச்சு படிங்க....


காலைல எழுந்திருச்சேன்....
(தேவை இல்லாம இன்னைக்கு ஆபீஸ் போகாத, கண்டவனும் கடுப்பேத்துவானுக, பேசாம மறுபடியும்  போர்வைய போத்தி படுத்து தூங்கிரு....)
இன்னைக்கு நாட்ல என்னதான் நடக்குதுன்னு பாப்போமேன்னு நானும் குளிச்சு கெளம்பி வண்டி எடுத்தேன்....

போய் சிக்னல்ல நிக்கும்போதே தெரிஞ்சுது, ஊரே வேலன்டைன்ஸ் டே பத்தி தான் பேசிட்டு இருந்துது....

அப்படியே ரோட்ல வேடிக்க பாத்துட்டே  போய்ட்டு இருந்தேன்....
நெறைய பேர் அவங்க ஆள வண்டில வெச்சு கூட்டிட்டு போய்ட்டு இருந்தாங்க....  திடீர்னு பக்கத்துல ஒரு பைக்க பொண்ணு ஓட்டிட்டு போயிட்டு இருந்துது...பின்னாடி இருந்த பையன் 'எங்கயோ' கை வெச்சிருந்த மாதிரி இருந்து.... நா அத ஷாக் ஆகி பாத்துட்டு போயிட்டு இருந்தப்ப,
ஒரு பொண்ணு, scooty pepla திடீர்னு u- turn போட்டு என் வண்டில மோதி கீழ விழுந்திருச்சு....


நா ஒரு பத்து அடி தள்ளி போய் நிப்பாட்டி, வண்டில இருந்து திரும்பி பாத்தா ஒரு koottame கூடி இருந்தாங்க.... இந்த, பிட்டு pada theatre கவுன்ட்டர் ஓபன் பண்ண வரைக்கும் யாரும் இருக்க மாட்டாங்க, கவுன்ட்டர் ஓபன் பண்ண உடனே, பக்கத்துல டீ கடை, பேப்பர் கடைல ஒழிஞ்சு வெயிட் பண்ணிட்டு இருந்தவங்க எல்லாம் counterku டிக்கெட் வாங்க கூடற மாதிரி....
நா அந்த கூட்டத்தை நோக்கி நடந்து ponen, அவ அவன் ஏதேதோ பேசிட்டு இருக்கான்....

கண்ண எங்கடா வெச்சுட்டு வரீங்க??
(அவன் அவன் கையையே எங்கயோ வெச்சுட்டு வரான், அதல்லாம் உட்டுறுங்க , என்னைய புடிங்க....)

ME: அந்த பொண்ணு தான்  horn அடிக்காம உள்ள வந்திருச்சு....

கூட்டத்துல இருந்து ஒரு நாட்டமை வந்தார் " இது எங்க ஏரியா பொண்ணு,பொண்ணுக்கு, வண்டிக்கு, எதுனா அடி பட்டுருந்துச்சுனா, நீ தாம்பா தரனும்...."

dai நவநீத கிருஷ்ணா, ஒரு வேல இந்த பொண்ணு ஒரு figure ஆ இருந்து , இந்த accident மூலமா ஒரு intro கெடச்சா செமையா இருக்குமே!!!

போய் பொண்ண பாத்தா, அந்த நெனப்புல அப்படியே தீய வெச்ச மாதிரி இருந்துது....

நல்ல வேள அந்த பொண்ணுக்கு ஏதும் ஆகல, நா வண்டி எடுத்துட்டு ஆபீஸ் போயிட்டேன்....

PL : என்ன தம்பி, இன்னைக்கு நீ லீவ் கேப்பன்னு நெனச்சேன்....
(கேட்டா மட்டும் உடனே குடுத்தர்ற மாதிரி.... ஏன்யா கடுப்பேத்துற???)

நா: ஏங்க????  எனக்கு ஆள் லா இல்ல.... நீங்க வேற.....
(இப்ப உனக்கு நல்லா குளு குளுன்னு இருக்குமே !!!!)

போய் சிஸ்டம் முன்னாடி உக்காந்தேன்....

"sorry டி.... இன்னைக்கு வேலை இருக்கு டி.... friday கண்டிப்பா போலாம்.... I love u so much di...." னு பக்கத்து டீம்ல ஒருத்தன் பேசிக்கிட்டு இருந்தான்....
நா  அவன் எங்க கூட்டிட்டு போவான்னு ஒரு நாள் fulla யோசிச்சிட்டு இருந்தேன்....
சத்யம் கூட்டிட்டு போவானோ?,மாயாஜால் கூட்டிட்டு போவானோ? பீச்?, மகாபலிபுரம்?, இல்ல அங்க கூட்டிட்டு போயிருவானோ??
இப்படி பல ஞாபகம்....அவ்வளவு பழக்கம் இல்லாததுனால, "எங்க நாயே கூட்டிட்டு போக போறன்னு?" கேக்க முடியல....

அப்புறம், friends கூட lunch போனேன்....

"மச்சி என் ஆளுக்கு ஏற்கனவே ஆள் இருக்கு டா..... இன்னைக்கு வண்டில வரும்போது, வேற ஒருத்தனோட வண்டில போயிட்டு இருந்தா...." ஒரு friend சொன்னான்....

இத படிக்கரவுங்க எல்லார்த்துக்குமே 'ஆள்' ங்கறதுக்கு மீனிங் தெரிஞ்சிருக்கும்,
தெரியாதவங்களுக்கு 'ஆள்' defenition கீழ இருக்கு....

'என்னோட ஆள்' அப்படினா ஒரு அழகான அல்லது சுமாரான பொண்ணு, break, lunch டைம் la நம்ம அவள follow பன்னுவ்வோம்..., ஆனா  அந்த பொண்ணுக்கு நம்மள  யார்னே தெரியாமக்கூட இருக்கலாம், ஒவ்வொருத்தனுக்கும் ஒன்னு அல்லது  ஒன்னுக்கும் mela, எவ்வளவு ஆள் வேண்ணாலும் இருக்கலாம்....

நா: விடு மச்சி, இது நமக்கென்ன புதுசா, school, college la இருந்து பாத்ததுதான,vera figurea பாத்துக்கலாம்....
friend2: அத விடு மச்சி, நம்ம சுவேதாவ ஒருத்தன் கரெக்ட் பண்ணிட்டான் தெரியுமா??
நா: செம figure ஆச்சே மச்சி அவ ..... yaarraa அவன்.....
friend2: நம்ம விவேக்  thaan.....
friend1 : அவன்லா எப்படி  டா அவள correct பண்ணான்??? அவன் ஒரு மொக்க நாய் ஆச்சே டா.....
(நானும் பாத்துட்டேன்,எவன் எந்த figurea கரெக்ட் பண்ணாலும், அடுத்தவர்கள் சொல்ற ஒருமித்த டயலாக்.....)


lunch முடிச்சுட்டு திரும்பியும் cubiclea போய் உக்காந்தேன்,

பக்கத்து டீம்ல ஒரு பொண்ணு "நேத்து மகேஷ் எனக்கு ஒரு க்ரீடிங்க்ஸ் குடுத்தாண்டி, செமையா இருந்துச்சு....

(நம்ம கடைசியா 5 th Std ல பொங்கல் greetings குடுத்தது, அதுக்கப்புறம் greetingsa கண்ணுல கூட பாத்தது இல்ல....)"

அப்படியே கொஞ்ச நேரம் டைம் பாஸ் பண்ணிட்டு கெளம்பி வண்டி எடுக்க பார்க்கிங் போனா, அங்க ஒரு ஜோடி:

பொண்ணு: gift supera இருக்கு டா....
பையன்: போன வேலன்டைன்ஸ் டேக்கு arun உனக்கு என்ன gift  குடுத்தான்?/
பொண்ணு: வாட்ச் குடுத்தாண்டா , நா தொலைச்சுட்டேன்.... போன வேலன்டைன்ஸ் டேக்கு உனக்கு கீதா என்ன குடுத்தா??
..........................................
............................................

இப்படி ஒரு மானங்கெட்ட love பன்ரக்கு நம்மள மாதிரி single ஆவே இருந்திரலாமே......
(figure correct பண்ண துப்பில்ல, இப்படி எதையாவது சொல்லி மனச தேத்திக்க வேண்டியதுதான்.....)


ஆகா மொத்ததுல,இந்த வேலன்டைன்ஸ் டே அன்னைக்கு office போனதுல கத்துக்கிட்டது,வேலன்டைன்ஸ் டே அன்னைக்கு வீட்ட விட்டு வெளிய போகணும்னா நமக்கு ஒரு லவர் இருக்கணும், இல்லன்னா வெளியவே போக கூடாது..... அப்புறம்,வேலன்டைன்ஸ் டே அன்னைக்கு அதிகமா காதுல விழற top 5 வார்த்தைகள்,

5. தெரியுமா?? அவ அவன கழட்டி உட்டுட்டாலாம்.....

4. இவளுக்கெல்லாம்/இவனுக்கெல்லாம் ஆள் இருக்கா!!!!

3. I LOVE U ....

2. என் ஆளுக்கு ஏற்கனவே ஆள் இருக்கு மச்சி.....

1. அவன்லா எப்படி  டா அவள correct பண்ணான்??? அவன் ஒரு மொக்க நாய் ஆச்சே டா....

திரும்பி வீட்டுக்கு வந்தா ,

ரூம் மேட்: இன்னைக்கு செம காண்டு ஏத்திட்டாணுக  டா.... சரக்கடிப்போமா???
(தெய்வமே!!!!)


me : வா மச்சி போவோம்....