Labels:

அனுஷ்கா முதுகு(U):

* இக்கதையில் வரும்  பாத்திரங்கள் அனைத்தும் TCS/CTS/WIPRO/INFOSYS/HCL லில் வேலை செய்வோரை மட்டும் குறிப்பனவையே....

* இக்கதையில் வரும் பிகர்கள்,     தீபிகா படுகோனே,அனுஷ்கா     போன்று இல்லாமல், திரும்ப பார்க்க பார்க்கவும், அவங்களோட  friendsa compare பண்ணியும், 'சரி ok, இதுவும் ஒரு figure தான்'  என்று ஏற்றுக்கொள்ள பட்டவையே....

**************************************************************************************************************************காலைல  9 மணி: 
நானும் அனுஷ்காவும் படுத்து தூங்கிட்டு இருக்கோம்....


நான் தனியா எங்க ரூம்ல படுத்திருக்கேன், அனுஷ்கா அவங்க வீட்ல தனியா படுத்திருக்காங்க..... இது அந்த மாதிரி ஸ்டோரி இல்ல, தப்பா நெனைக்காதீங்கப்பா!!!!!!!!

எந்திருச்சு sun musicla ஒரு  பாட்டு கேக்கலாம்னு TV ய போட்டு, ஜெயம் குண்டு சாம்பார் பருப்பு ,ஆச்சி ஊறுகாய், பொம்மீஸ் nighties விளம்பரம்லா முடிஞ்சதுக்கு அப்புறம் programla இப்படி ஒரு conversation ஓடிட்டு இருக்கும்:

VJ: உங்க பேர் சொல்லுங்க
caller: என் பேர் ராஜா மேடம்
VJ: உங்க TV வால்யும கொஞ்சம் கொறச்சுட்டு பேசுங்க,
caller: OK MADAM.... இன்னைக்கு என் லவர் கவிதாவோட birthday மேடம். அவளுக்காக ஒரு பாட்டு போடுங்க....
VJ: என்ன மேடம் னு கூப்டாதீங்க....DIVYA னே  கூப்பிடலாம்....

இப்படி லெமுரியா கண்டதோட வழக்கொழிஞ்சு போன conversation ஓடிட்டு இருக்கும்.... அது முடுஞ்சு ஒரு பாட்டு போட்டவுடனே பக்கத்துக்கு வீட்டு ஆன்ட்டி.....

Aunty: உங்க TV வால்யும கொஞ்சம்  கொறசுக்குங்க.....
ME: OK  Aunty
Aunty: என்ன Aunty னு கூப்டாதீங்க....காமாட்சின்னே கூப்பிடலாம்....!!!!!!!!!!!!

வயச குறைக்க சொல்ரக்கு முன்னாடி sizea கொரைங்கம்மா...

எந்திருச்சு குளிச்சு, தீந்து போன pastukku post mortem பண்ணி, இருக்கறத பிதிக்கி எடுத்து பல் வெளக்கிட்டு, கெளம்பி, வண்டி எடுத்துட்டு, வண்டிக்கு பெட்ரோல் போட்டு, நமக்கு ஒரு தம்  போட்டு, office போய் வண்டிய parkingla போட்டுட்டு,

 டைம் ஆச்சேன்னு சொல்லி வேகமா நடந்து போகும்போது,
7 பொண்ணுங்க நல்ல make up, high heelsoda(நாட்ல சூர்யா பட heroine தவிர எல்லாரும் heels போடுவாங்க போல இருக்கு!!!!) வழிய மறச்சுட்டு, எதோ 700 கோடிக்கு சிறுசேரி கட்டடத்த, இவளுக பவனி வர்றதுக்கு கட்ன மாதிரி நடந்து போயிட்டு இருப்பாளுக... 'வழிய விடுங்கடி பீத்த சிருக்கிகளா' னு சொல்ல முடியாம 'Excuse me' னு சொல்லிட்டு வேகமா உள்ள போய்,  
mail a ஓபன் பண்ணா, ஒரு நாலு மெயில் FYA(FOR YOUR ACTION) னு வந்திருக்கும். ONSITE போறவங்களுக்கு இருக்கிற ஒரே வேல, வர்ற maila எல்லாம், FYA போட்டு offshoruku அனுப்பறதுதான்....
புதுசா கல்யாணம் ஆனா பொண்டாட்டி இங்க இருந்து, ஏதாவது ஆசையா முத்தம் கித்தம்  கேட்டு அனுப்புனா,  அத கூட தெரியாத்தனமா FOR YOUR ACTIONNU போட்டு இங்க அனுப்பவேண்டியது.... அது கடைசீல மூனார்ல போய் முடியும்....

1 மணிக்கு canteen ல போய் சாப்பாட வாங்கிட்டு உக்காந்தா,
பக்கத்துல  ஏதாவது பொண்ணுக போடற மொக்க தான் காதுல விழும்... "hey sema comedy da, நேத்து பக்கத்துக்கு வீட்டு சின்ன பைய்யன் கிட்ட திருக்குரள எழுதுனது யாருடான்னு கேட்டேன், அதுக்கு அவன் சாலமன் பாப்பையா ங்கறான்.....ha ha ha ha".....
ஏம்மா , உண்ணக்கூடதான் C ய எழுதனது யார்னு கேட்டா YASHWANT KANETKARNU தான் சொல்லுவ....பாவம் அவன் வயசுக்கு அவ்வளவுதான் தெரியும்...." னு சொல்ல தோணும்....ஆனா முடியாது....

அப்புறம் இந்த 2 30 to 5 டைம் பாஸ் பண்றதுக்கு ஒரே வழி யூரின் பாஸ் பண்றது மட்டும் தான்....
அப்படியே ஒரு 7 மணி வரைக்கும் OP அடிச்சிட்டு,
வேல முடிஞ்சு வீட்டுக்கு வந்து TV யா போட்டா,

தமிழ் channella,
புருஷன்  கம்னாட்டி;
தங்கச்சி  வாழாவெட்டி;
கால் ஒடஞ்ச நாய்குட்டி;
இப்படி கஷ்டப்படற familiya காப்பாத்தற தேவயாணி னு ஒரு சீரியல்....

seri sports சேனல் மாத்துன,
 away seriesa இருந்தா நம்ம டீம்ல matchukku ரெண்டு இஞ்சுரி,opposite டீம்ல matchukku ரெண்டு செஞ்சுரி.... home seriesa இருந்தா 350 டார்கெட் வெச்சாலும் கோழி, கம்பிரே chase பண்ணி ஜெயிப்பானுக....

தப்பி தவறி ராஜ் tv போட்டுட்டா, உங்களுக்கெல்லாம் சீக்கிரம் தீந்து போயிரும் ன்னு சிவராஜ் தாத்தா சொல்லிட்டிருப்பாறு,
"yov  தீந்து போர்க்கு அதென்ன pears சோப்பாடா?...."

அப்படியே TV ya ஆப் பண்ணிட்டு படுத்து யோசிச்சா , ஒரு நாள் FLATa போயிருக்கும். இப்படி இந்த வாழ்க்கையே "அனுஷ்கா முதுகு." மாதிரி FLATa போயிட்டிருக்கு, இதுல என்னைக்காவது திருப்பம் வராதா?, "அனுஷ்கா முன்னாடி"(நா FACEa தான் சொல்றன்) மாதிரி அழகான மேடு பள்ளமா மாராதான்னு ஏங்கிட்டே படுக்கும்போது , ஒரு கால் வரும்,


"நா ராமசாமி சித்தப்பா பய்யன் "ரமேஷ் " பேசறன்னா.... நா TCSla Place ஆயிருக்கன்னா...." ம்பான்....