Labels:

வேட்டை review

பாட்டி வட சுட்ட கதைக்கு அப்புறம் தமிழனுக்கு அதிகமா பழக்கப்பட்ட கதை....லோக்கல் rowdya ஹீரோ அழிக்கிற கதை....
ஒரு changukku இதுல 2 ஹீரோ, 2 rowdy....

"நீ யாரு மேல கை வெச்சிருக்க தெரியுமா????","இந்த ஊர்ல ஒன்னு நீ இருக்கணும், இல்ல நா இருக்கணும்....",னு டயலாக்....
intro சாங், குத்து சாங், காதல் சாங்,
எரும மாட்டுக்கும் இவனுக்கும் காதுல இருக்கிற கடுக்கன வெச்சுதான் வித்யாசம் kandupudikkara மாதிரி அடியாட்கள்,
லாரில சரக்கு கடத்தறது,atha ஹீரோ தடுக்கறது, பழக்கூடைல bomb வெக்கறது, 
பின்னி மில்ஸ்ல fightu ,  heroine whiteu ,

இப்படி commercial padaththukku தேவையான இலக்கனங்கள்ள இருந்து துளி கூட மாறாத படம்.

மாதவனும் ஆர்யாவும் அண்ணன் தம்பி. dutyla இருக்கும்போது அப்பா செத்தர்ரதுனால   அந்த police வேலைய  மாதவனுக்கு தராங்க(இன்னுமா இப்படில்லா இருக்கு??)....
first halfla, மாதவன் ரொம்ப பயந்த சுபாவம், அதனால ஆர்யா வில்லன்னுகலல்லாம் அடிச்சு உதைக்கிறார்.
அடுத்து ஆர்யா மாதவனுக்கு வீரம் வரவைக்கறார்(அந்த சீன்ல audiencukku நல்லா சிரிப்பும் வரவைக்கிறார்....). 
second halfla மாதவன் ஆர்யா ரெண்டு பேரும் சேர்ந்து 2 ரவுடி களையும் கொல்றாங்க.... நடுவுல 2 heroine...
அமலா  பால் இடுப்புல இருக்கிற சதை அளவுக்கு  கூட கதை இல்ல...

படத்துல  plus:

அமலா பால் கண்ணாடி சீன், அங்கங்க இருக்கிற காமெடி, நீரவ் ஷாவோட camera(especially 'அக்காக்கேத்த  மாப்பிள்ள....' பாட்ல)

மைனஸ்:

கிளைமாக்ஸ்(perfect example for word "காட்டு மொக்கை"), fight சீன்ஸ், அமெரிக்க மாப்பிள்ளை சீன்ஸ், யுவன் songs , aaryaa நாய்க்குட்டிய காப்பாத்துற சீன்(இந்த நாயகுட்ட்ய காப்பாத்துற சீன்லா இதுக்கு முன்னாடி heroine தான்பா பண்ணிட்டு இருந்தாங்க, எப்பப்பா ஹீரோக்கள் ஆரம்பிச்சீங்க??)

VERDICT:
குட்டிச்சுவர் verdict:

Labels:

நண்பன் Review
எல்லாருக்கும் தெரிஞ்ச கதை  தான்.... அப்பாஸ் , பிரஷாந்த ஹீரோ வா போட்டு S A சந்திரசேகர் டைரக்ட் பண்ணா கூட  ஹிட் ஆக கூடிய கதை....

வசனம், திரைக்கதை , ஒளிப்பதிவு, எடிட்டிங், சத்யனோட underwear , இப்படி எல்லாமே ஹிந்தில இருக்கறதையே எடுத்துகிட்டதனால, எல்லாமே நல்லா இருக்கு.....

actingnu பாத்தா,
விஜய் சூப்பரா நடிச்சிருக்கார்.... கண்டிப்பா விஜய் acting எல்லாருக்கும் புடிக்கும்,unless nd until, பக்கத்துல ஒரு விஜய் fan உக்காந்துகிட்டு "தலைவர் நடிப்பு மாஸா???", "தலைவர் dance மாஸா??"னு கேட்டு  கடுப்பேத்தாத வரைக்கும்....

இதுக்கு முன்னாடி, "நீ அடிச்சா பீஸ் , நா அடிச்சா மாஸ்","நீ  அடிச்சா அடி விழும், நா அடிச்சா இடி விழும்", "போடா , வாடா, பொட்டக்கன்னா" னு டயலாக் பேசிட்டு  இருந்த விஜய்,
"புடிச்ச வேலைய தேர்ந்தெடு, கடினமா உழை, வெற்றி உன்ன தானா தேடி வரும்...."நு பேசறத பாக்கும்போது, 'இப்ப போடுங்கய்யா "சத்தியமாக இந்த dialogue ஐ பேசியவர் உங்கள் விஜய் தான்"னு ' சொல்ல தோணுது....

அடுத்து ஜீவா , சத்யன், ஸ்ரீகாந்த்  getha போட்டுருக்கானுக.... சரக்கடிச்சுட்டு நடிக்கற scene la சிவாஜி யால கூட ஜீவா  மாதிரி நடிக்க முடியாது.... சத்யனுக்கும் சத்யராஜுக்கும் fluenta இங்கிலீஷ் தான் வரல.... இங்கிலீஷ் பேசறதுலல்லாம் குறை கண்டுபிடிக்கறதுக்கு நம்ம என்ன பொண்ணுங்களா?....

இலியானாக்கு தான் இத்துனூண்டு............................ரோல்..........ஏதோ பண்ணிருக்கு புள்ள....

ஹாரிஸ் ஜெயராஜ்,ஒரே  ஒரு foriegn languagela பாட்டு  போட்டதே(7am arivu) காரி துப்பர மாதிரி இருந்ததே, இதுல 16 foriegn languagela போட்ட பாட்டு எப்படி இருக்குமோன்னு பயந்த மாதிரி இல்லாம supera இருந்தது....
எல்லா  பாட்டுமே  கேக்கற  மாதிரி இருக்கு....

இருக்கானா, இல்லையான பாட்டுல , நெஜமாவே இருக்கா இல்லையான்னே தெரில.....(இலியானா இடுப்பத்தான்  சொல்றேன்....)

படத்துல minus நா அந்த கொழந்த அழாம இருக்கற சீன்...." 'ஆல் இஸ் வெல்' தான் சொல்ல போறீங்கன்னு ஊருக்கே தெரியும், சீக்கிரம் சொல்லுங்கடா வெண்ணைகளா"னு தியேட்டர் ல response.

மொத்தத்துல வெளிய வரும் போது, "படம் நல்லா இருந்தா விஜய் fans அழும்பு தான்காதேங்கரத்தையும்" மீறி படம் நல்லா இருக்குன்னு சொல்லற மாதிரி இருக்கு படம்....வேட்டை review - coming soooon....

Labels:

அனுஷ்கா முதுகு(U):

* இக்கதையில் வரும்  பாத்திரங்கள் அனைத்தும் TCS/CTS/WIPRO/INFOSYS/HCL லில் வேலை செய்வோரை மட்டும் குறிப்பனவையே....

* இக்கதையில் வரும் பிகர்கள்,     தீபிகா படுகோனே,அனுஷ்கா     போன்று இல்லாமல், திரும்ப பார்க்க பார்க்கவும், அவங்களோட  friendsa compare பண்ணியும், 'சரி ok, இதுவும் ஒரு figure தான்'  என்று ஏற்றுக்கொள்ள பட்டவையே....

**************************************************************************************************************************காலைல  9 மணி: 
நானும் அனுஷ்காவும் படுத்து தூங்கிட்டு இருக்கோம்....


நான் தனியா எங்க ரூம்ல படுத்திருக்கேன், அனுஷ்கா அவங்க வீட்ல தனியா படுத்திருக்காங்க..... இது அந்த மாதிரி ஸ்டோரி இல்ல, தப்பா நெனைக்காதீங்கப்பா!!!!!!!!

எந்திருச்சு sun musicla ஒரு  பாட்டு கேக்கலாம்னு TV ய போட்டு, ஜெயம் குண்டு சாம்பார் பருப்பு ,ஆச்சி ஊறுகாய், பொம்மீஸ் nighties விளம்பரம்லா முடிஞ்சதுக்கு அப்புறம் programla இப்படி ஒரு conversation ஓடிட்டு இருக்கும்:

VJ: உங்க பேர் சொல்லுங்க
caller: என் பேர் ராஜா மேடம்
VJ: உங்க TV வால்யும கொஞ்சம் கொறச்சுட்டு பேசுங்க,
caller: OK MADAM.... இன்னைக்கு என் லவர் கவிதாவோட birthday மேடம். அவளுக்காக ஒரு பாட்டு போடுங்க....
VJ: என்ன மேடம் னு கூப்டாதீங்க....DIVYA னே  கூப்பிடலாம்....

இப்படி லெமுரியா கண்டதோட வழக்கொழிஞ்சு போன conversation ஓடிட்டு இருக்கும்.... அது முடுஞ்சு ஒரு பாட்டு போட்டவுடனே பக்கத்துக்கு வீட்டு ஆன்ட்டி.....

Aunty: உங்க TV வால்யும கொஞ்சம்  கொறசுக்குங்க.....
ME: OK  Aunty
Aunty: என்ன Aunty னு கூப்டாதீங்க....காமாட்சின்னே கூப்பிடலாம்....!!!!!!!!!!!!

வயச குறைக்க சொல்ரக்கு முன்னாடி sizea கொரைங்கம்மா...

எந்திருச்சு குளிச்சு, தீந்து போன pastukku post mortem பண்ணி, இருக்கறத பிதிக்கி எடுத்து பல் வெளக்கிட்டு, கெளம்பி, வண்டி எடுத்துட்டு, வண்டிக்கு பெட்ரோல் போட்டு, நமக்கு ஒரு தம்  போட்டு, office போய் வண்டிய parkingla போட்டுட்டு,

 டைம் ஆச்சேன்னு சொல்லி வேகமா நடந்து போகும்போது,
7 பொண்ணுங்க நல்ல make up, high heelsoda(நாட்ல சூர்யா பட heroine தவிர எல்லாரும் heels போடுவாங்க போல இருக்கு!!!!) வழிய மறச்சுட்டு, எதோ 700 கோடிக்கு சிறுசேரி கட்டடத்த, இவளுக பவனி வர்றதுக்கு கட்ன மாதிரி நடந்து போயிட்டு இருப்பாளுக... 'வழிய விடுங்கடி பீத்த சிருக்கிகளா' னு சொல்ல முடியாம 'Excuse me' னு சொல்லிட்டு வேகமா உள்ள போய்,  
mail a ஓபன் பண்ணா, ஒரு நாலு மெயில் FYA(FOR YOUR ACTION) னு வந்திருக்கும். ONSITE போறவங்களுக்கு இருக்கிற ஒரே வேல, வர்ற maila எல்லாம், FYA போட்டு offshoruku அனுப்பறதுதான்....
புதுசா கல்யாணம் ஆனா பொண்டாட்டி இங்க இருந்து, ஏதாவது ஆசையா முத்தம் கித்தம்  கேட்டு அனுப்புனா,  அத கூட தெரியாத்தனமா FOR YOUR ACTIONNU போட்டு இங்க அனுப்பவேண்டியது.... அது கடைசீல மூனார்ல போய் முடியும்....

1 மணிக்கு canteen ல போய் சாப்பாட வாங்கிட்டு உக்காந்தா,
பக்கத்துல  ஏதாவது பொண்ணுக போடற மொக்க தான் காதுல விழும்... "hey sema comedy da, நேத்து பக்கத்துக்கு வீட்டு சின்ன பைய்யன் கிட்ட திருக்குரள எழுதுனது யாருடான்னு கேட்டேன், அதுக்கு அவன் சாலமன் பாப்பையா ங்கறான்.....ha ha ha ha".....
ஏம்மா , உண்ணக்கூடதான் C ய எழுதனது யார்னு கேட்டா YASHWANT KANETKARNU தான் சொல்லுவ....பாவம் அவன் வயசுக்கு அவ்வளவுதான் தெரியும்...." னு சொல்ல தோணும்....ஆனா முடியாது....

அப்புறம் இந்த 2 30 to 5 டைம் பாஸ் பண்றதுக்கு ஒரே வழி யூரின் பாஸ் பண்றது மட்டும் தான்....
அப்படியே ஒரு 7 மணி வரைக்கும் OP அடிச்சிட்டு,
வேல முடிஞ்சு வீட்டுக்கு வந்து TV யா போட்டா,

தமிழ் channella,
புருஷன்  கம்னாட்டி;
தங்கச்சி  வாழாவெட்டி;
கால் ஒடஞ்ச நாய்குட்டி;
இப்படி கஷ்டப்படற familiya காப்பாத்தற தேவயாணி னு ஒரு சீரியல்....

seri sports சேனல் மாத்துன,
 away seriesa இருந்தா நம்ம டீம்ல matchukku ரெண்டு இஞ்சுரி,opposite டீம்ல matchukku ரெண்டு செஞ்சுரி.... home seriesa இருந்தா 350 டார்கெட் வெச்சாலும் கோழி, கம்பிரே chase பண்ணி ஜெயிப்பானுக....

தப்பி தவறி ராஜ் tv போட்டுட்டா, உங்களுக்கெல்லாம் சீக்கிரம் தீந்து போயிரும் ன்னு சிவராஜ் தாத்தா சொல்லிட்டிருப்பாறு,
"yov  தீந்து போர்க்கு அதென்ன pears சோப்பாடா?...."

அப்படியே TV ya ஆப் பண்ணிட்டு படுத்து யோசிச்சா , ஒரு நாள் FLATa போயிருக்கும். இப்படி இந்த வாழ்க்கையே "அனுஷ்கா முதுகு." மாதிரி FLATa போயிட்டிருக்கு, இதுல என்னைக்காவது திருப்பம் வராதா?, "அனுஷ்கா முன்னாடி"(நா FACEa தான் சொல்றன்) மாதிரி அழகான மேடு பள்ளமா மாராதான்னு ஏங்கிட்டே படுக்கும்போது , ஒரு கால் வரும்,


"நா ராமசாமி சித்தப்பா பய்யன் "ரமேஷ் " பேசறன்னா.... நா TCSla Place ஆயிருக்கன்னா...." ம்பான்....