நீதானே என் பொன்வசந்தம்

வேட்டையாடு விளையாடு , காக்க காக்க , மணிமேகலை, குண்டலகேசி,நெடுநெல்வாடைன்னு எப்படியோ கௌதம் மேனன்  ஒரு நல்ல தமிழ் title வெச்சிருவாறு. இந்த படத்துலயும் சூப்பரா title வெச்சிட்டாரு.

ஜீவா(வருண்) :
வழக்கம் போல கௌதம் மேனன் பட hero, நல்லா english பேசறார்;
மூணாவது சீன்ல புக் எடுத்தா அஞ்சாவது சீன்ல IIM போயர்றார், ஆறாவது சீன்ல arun excelloல apartment வாங்கிடறார்;
heroக்கு 'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை'ன்னு ஒரு 'வானத்தைப்போல'  family இருக்கு. ஆனா இந்த தடவ லவ் பண்றதுக்கு அமெரிக்கால்லாம் அனுப்பல;
ஒரே ஒரு நல்லது என்னன்னா இந்த படத்துல ஹீரோ mechanical engineering படிக்கல,mechanical departmentக்கு mass த்தற மாதிரி dialogues,பாட்டு ஏதும் இல்ல , இல்லன்ன படம் பாத்த அதே வேகத்துல போய் காலேஜ் கக்கூஸ் செவுரு fulla 'Mech mass , mech rocks' ன்னு எழுதி நாரடிசிருப்பாங்க, எல்லா mech department symposiumக்கும் அந்த dialogue, பாட்ட போட்டு சாவடிசிருப்பாங்க....


சமந்தா( நித்யா ):
உலகத்துலேயே போப் ஆண்டவருக்கு அடுத்து புனிதமானவன்க இவங்க தான். ஸ்கூல், காலேஜ்ல first rank எடுப்பாங்க;
Dance, Fashion show, debateல எப்பவுமே first தான்;
சின்ன வயசுல இருந்து ஒரே பையன லவ் பண்ணுவாங்க;
 cambridge  universitylaல படிப்பாங்க;
discontinue பண்ணிட்டு வந்து சுனாமி தாக்கப்பட்ட  ஊர்ல கொழந்தைகளுக்கு பாடம் சொல்லி தருவாங்க.....வருண் , நித்யா . ரெண்டு பேரும் காங்கிரஸ் கட்சி, K V தங்கபாலுவும் G K வாசனும் மாதிரி, காரணமே இல்லாம சண்ட போடறாங்க, சேர்றாங்க , சண்ட போடறாங்க, சேர்றாங்க.... இது தான் கதை....


படத்துல ஒரு 25% சீன் சூப்பரா இருக்கு,dialogues நல்லா இருக்கு,25% சீன் சுமாரா இருக்கு, மிச்ச 50% சீன்ல , நம்மள தியேட்டர விட்டு வெளிய போகாம உக்கார வெக்கற ஒரே centripetal, centrifugal, gravitational, electrical, frictional force சமந்தா மட்டும்  தான்....

பாட்டும் சுமாரா தான் இருக்கு, BGMம்மும் சுமாராதான் இருக்கு.... என்னதான் 'legend'ஆ இருந்தாலும் ஒரு 'end' இருக்கு இல்ல....

சில பேர் சொல்றாங்க, 'முன்ன பின்ன லவ் பன்னிருந்தாதான் இந்த படம் பாக்கும் போது ஒரு feeling வரும், படம் பிடிக்கும்'ன்னு, அவங்க கிட்ட நா ஒன்னே ஒன்னு தான் கேக்கறேன், நம்ம எத்தன கில்மா சீன் பாக்குறோம், அப்பல்லாம் feelings வருதில்ல, நம்ம என்ன முன்ன பின்ன கில்மாவா பண்ணிருக்கோம்??
ஆக  இந்த மாதிரி statementsa ஏத்துக்கவே முடியாது....


kuttychuvar verdict: OK


உலகம் அழியட்டும்....

டிசம்பர்ல உலகம் அழியப்போகுதுன்னு சொல்றாங்க.....
'அத்த பொண்ண correct பண்ணனும், IAS ஆகணும், அடையார்ல apartment வாங்கணும்'ன்னு நம்மளோட லட்சியம்லா நிறைவேராதேன்னு கவலை இருந்தாலும், உலகம் அழியரதுல நெறைய நல்லதும் இருக்கு.....

காலைல எந்திருச்சு, குளிக்கும் போது முடி கொட்டுதேன்னு கவலை பட வேண்டியதில்ல;

10000 கிலோ மீட்டர் , 5 சர்வீஸ், 3 accident  பாத்த நம்ம bike இன்னும் ஒரு figureஅ கூட சீட்ல ஏத்தாம virginஆ இருக்கேன்னு கவலை பட தேவ இல்ல;

உலகமே ஒன்னுக்கு அடிச்சிட்டு வந்து குப்புற படுத்து தூங்குற காலைல ஆறு மணிக்கு,morning shift போக தேவை இல்ல;
Officeல manager பண்ற மொக்க காமெடிக்கெல்லாம் சிரிக்க தேவ இல்ல;
Client பேசற englisha subtitle இல்லாம  புரிஞ்சுக்க தேவ இல்ல ;


TVya போட்டாலே வர்ற,
'Arun excello temple green ஓரகடம் வழங்கும் நாப்பத்தி அஞ்சு லட்ச ருபாய் மதிப்புள்ள double bed room flat' ங்கற sentencea திருப்பி திருப்பி கேக்க வேண்டியதில்ல;
கலா அக்கா, நமீதா மேடம், குஷ் அக்கா மூஞ்சிகள பாக்க வேண்டியதில்ல;

வர்ற Australia test seriesla 4-0ன்னு தோக்க  தேவ இல்ல;
டோனி test match விளையாடற கொடுமையெல்லாம் பாக்க தேவை இல்ல;

சச்சின் retired ஆக தேவை இல்ல, அத விட முக்கியமா சச்சின் recorda இனிமே எவனாலயும் முறியடிக்க முடியாது,'ஒப்பற்ற ஓவியமே','ஒன்னுக்கடிக்கும் ஓய்யாரமே'ன்னு ஒன்னாவது படிக்கற ஒம்பதாவது வட்ட செயலாளர் பையனுக்கு வெக்கற cut outa பாக்க தேவ இல்ல;

'ஆத்தா உன்ன மன்னிப்பாளா? தாய்ப்பால் உனக்கு coca cola;' மாதிரி கவித்துவமான பாட்ட கேக்க தேவை இல்ல,

வருமகோட்ல வாழ்ற ஹீரோ; 
எருமமாட்ல பொழப்பு நடத்தற heroine;
நடுரோட்ல accident ஆகி  சாகர climaxன்னு நெஞ்ச நக்க ட்ரை பண்ற படங்கள பாக்க தேவ இல்ல;

ஒரு படம் ஓடிருச்சுன்னா  ,
"3 நாள்ல 44 கோடி வசூல்;
4 நாள்ல 56 கோடி வசூல்;
2 nd டே மேட்னி showla  சத்யம் தியேட்டர்ல 'puff ' வித்த காசு 'எந்திரன' விட அதிகம்......"
இப்படியெல்லாம் Vijay/Ajith fans Facebook Statusகல பாக்க தேவ இல்ல;

'DSLR' coupled with 'Adobe Photoshop' coupled with 'Multi vitamin milk protien skin cream' coupled with 'பக்கத்துல ஒரு அட்டு figure' -
இவ்வளவும் இருந்தும் சுமாரா இருக்கற பொண்ணுங்க Profile Picக்கு 125  பேர் லைக் போடறத பாத்து கடுப்பாக தேவ இல்ல....

கொஞ்ச சட்ட போட்ட பூனம் பண்டேக்கள் , மஞ்ச சட்ட போட்ட அரசியல் தலைவர்கள் , என்ன கேட்டாலும் சத்தம் போடுற Government office ஆண்டிக்கள், முக்கியமா இந்திய economists - இவனுங்க எவன் தொல்லையும் இனி இருக்காது....

இது எல்லார்த்துக்கும் மேல இந்தியால  கொஞ்ச நாள்ல ஒரு நெலம வரும் 
குடிக்கற தண்ணி லிட்டர் 50 ரூபாய்க்கு விக்கும்;
வெங்காயம் கிலோ 450 ரூபாய்க்கு விக்கும்;
பெட்ரோல் 250 ரூபாய்க்கு விக்கும்;
கட்டண கழிப்பிடத்துல 25 ரூபா கேப்பான்....
ஆனா நம்ம சம்பளம் மட்டும் Rs 16370 இருக்கும்.... அதுலயும் income tax, professional tax, company welfare fund, State welfare fundன்னு எதையாவது புடிப்பான்.....

ஆக , பேசாம பூமாதேவி வாய பொளக்கட்டும், நாமெல்லாம் உள்ள போவோம்;

                                                  உலகம் அழியட்டும்....

துப்பாக்கி

"துப்பாக்கி,மூணு மாசம் case நடத்தி, முப்பத்தி ரெண்டு தடவ வாய்தா வாங்கி கஷ்டப்பட்டு பேர் வெச்சாங்க.... ஆனா இந்த படத்துக்கு இந்த பேர்   எதுக்குன்னு சத்தியமா தெரில....

ஹாரிஸ் ஜெயராஜ் பாட்ட சுட்டிருக்காரு;
முருக தாஸ் நெறைய சேனல்ல வந்து வாயிலையே வடைய சுட்டிருக்காரு;
அப்படியே எங்கிருந்தோ கதைய சுட்டிருக்காரு;
இவ்வளவையும் சுட்டதுக்காக துப்பாக்கின்னு பேர் வெச்சாங்களோ என்னமோ??

ஆனா ஒன்னு, துப்பாக்கி use பண்றதுக்காக படத்துக்கு துப்பாக்கின்னு பேர் வெச்சா, தமிழ்ல விக்ரமன் direct பண்ண படம் தவிர  இதுவரைக்கு release ஆன 1345 படத்துல 997 படத்துக்கு அருவாள்ன்னு பேர் வெக்கனும் மிச்ச 348 படத்துக்கு துப்பக்கின்னுதான் பேர் வெக்கணும்....Harris Jeyaraj எப்பவுமே google google பண்ணியாவது ஆறுல நாலு பாட்டாவது கேக்கற மாதிரி போட்ருவாரு,ஆனா இந்த தடவ google google தவிர எதுமே நல்லா இல்ல....

படத்துல மிலிடரி officera வர்றார் விஜய், அவரு போன படத்துல கொண்டலாம்பட்டில சும்மா சுத்திட்டு  இருந்த போதே காஷ்மீர் தீவிரவாதிகளா கொன்னவரு, இப்ப சொல்லவா வேணும். எல்லா தீவிர வாதிகளையும் பிரிச்சு மேயராறு.

விஜய் படத்துக்கு வந்துட்டு லாஜிக் இல்லன்னு சொல்றது, சரவண பவன் போய்ட்டு மட்டன் பிரியாணி இல்லன்னு சொல்ற அளவுக்கு கேணத்தனம்ங்கறதுனால அத பத்தி பேச தேவ இல்ல.....

 தக்காளி , பாதில எந்திருச்சு போனா ,parkingla இருந்து வண்டிய வெளிய எடுக்க முடியாதுங்கற ஒரே காரணத்துக்காக தான் இந்த படத்த முழுசா பாக்க வேண்டியதாப்போச்சு....."
இப்படியெல்லாம் எழுதி படத்த கிழிக்கலாம்னு படம் ரிலீஸ்க்கு முன்னாடியே type பண்ணி வெச்சுட்டு தான் theatreku போனேன்.... ஆனா என்ன பண்றது, என் கெரகம், படம் நல்லா இருந்திருச்சு....

படம் கண்டிப்பா எல்லாருக்கும் புடிக்கும்,unless and until, பக்கத்துல ஒரு விஜய் fan உக்காந்துகிட்டு "தலைவர் நடிப்பு மாஸா???", "தலைவர் dance மாஸா??" "தலைவர் dressing மாஸா???",னு கேட்டு  கடுப்பேத்தாத வரைக்கும்....

குட்டிச்சுவர் verdict: GOOD


MTC பயணம்


* Bus stopல பஸ்ஸ விட Share Auto, Auto, Van தான் அதிகமா நிக்கும்;

* சென்னைனாலே,
சந்துல ஒன்னுக்கு அடிக்க போனாலும், 
சத்யம் theatreல டிக்கெட் வாங்க போனாலும்,
நமக்கு முன்னாடி பத்து பதினஞ்சு பேர் கண்டிப்பா இருப்பான்.
அதேமாதிரி bus stopலயும் எப்பவுமே  ஒரு கும்பல் இருக்கும், 
மன்னன் பட ரஜினி மாதிரி 'chainu  மோதரம்னு' அடிச்சு புடிச்சு தான் பஸ்ல ஏறனும்.

*White board, Green board, Violet board, Deluxe busnu நெறைய பஸ் இருக்கும் ஆனா டிக்கெட் விலைய தவிர இந்த பஸ்களுக்குள்ள வேற எந்த வித்யாசத்தையும்,CBCIDயால கூட கண்டுபுடிக்க முடியாது;

*கூட்டத்துல அடிச்சு புடிச்சு ஏறி இடம் புடிக்கலாம்னு பாத்தா ,மழை பேஞ்சு நனைஞ்ச சீட்டு, யாரோ வாந்தி எடுத்த சீட்டு, பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு, இதெல்லாம் போக மிச்சம் இருக்கற பத்து பதினஞ்சு சீட்லயும் எவனாவது உக்காந்திட்டிருப்பான்.
இத எல்லார்த்தையும் மீறி உங்களுக்கு பஸ்ல ஏர்ண உடனே சீட் கெடச்சுதுன்னா இந்தியாவுலையே ராபர்ட் வதோராக்கு அடுத்து luckiest person நீங்க தான்.

* MTC bus conductor தனக்கு piles இருந்தாலொழிய எப்பவுமே சீட்ட உட்டு எந்திரிக்க மாட்டார், எவ்வளவு கூட்டமா இருந்தாலும் காச pass பண்ணிதான் டிக்கெட் எடுக்கணும்.


* Conductor, 14 ரூபா டிக்கெட்டுக்கு 20 ரூபா குடுத்தா அடுத்த stopல எறங்க சொல்லுவார்;
16 ரூபா டிக்கெட்டுக்கு 20 ரூபா குடுத்தா திட்டுவார்;
18 ரூபா டிக்கெட்டுக்கு 20 ரூபா குடுத்தா முறைப்பார்;
19 ரூபா டிக்கெட்டுக்கு 20 ரூபா குடுத்தா ஒர்ருபா திருப்பி தரமாட்டார்.

* பஸ்ல நிக்கும்போது சில அழகான பொண்ணுங்க கிட்ட கூட போய் நின்னுரலாம், ஆனா இந்த 50 வயசு aunties கிட்ட நிக்கவே கூடாது, சென்னை ரோடுக்கும் பஸ் ஆடுற ஆட்டத்துக்கும், கண்டிப்பா பக்கத்துல இருக்கறவங்க மேல இடிக்கும், அதும் ஏதாவது பொண்ணுங்களா இருந்தா கூட பரவால்ல ஒன்னும் சொல்ல மாட்டாங்க, இந்த auntyகல இடுசிட்டோம் அவ்வளவுதான் 'அப்பாலேந்து பாத்துன்னுக்குறேன்  இன்னாத்துக்கு மேல மேல வந்து ஈஷ்டுக்கற'ன்னு கத்தி ஊற கூட்டிருங்க.

உலகத்துலேயே Alphabets, ஒரு digit  நம்பர், ரெண்டு digit நம்பர், மூணு digit நம்பர், Avagadro நம்பர், ராமானுஜம் நம்பர், இப்டி எல்லா நம்பரையும் permutation combination போட்டு பேர் வெச்சது நம்ம MTCயாதான் இருக்கும். Eg: PP19x, T151

*கோவில் திருவிழா ஏதும் இல்லாம, கட்சி கூட்டம் ஏதும் நடக்காம, சவ ஊர்வலம் ஏதும் போகாம,CM, Central minister வராம, நடு ரோட்ல எவனும் சண்ட போடாம,bus driverக்கு  பொண்டாட்டி  கிட்ட இருந்து போன் எதும் வராம, ரோடு வேல ஏதும் செய்யாம,ஆடு மாடு நாய் குறுக்க போகாம, மெட்ரோ ரயிலுக்காக diversion இல்லாம ,மழை பேயாம,
இவ்வளவும்  இருந்தா போக வேண்டிய இடத்துக்கு நேரத்துக்கு போயிறலாம். 

ஒரு உலகம் இருந்தது!!அப்பா அம்மாவோட மொதல் மொதலா கால் எடுத்து வெச்ச entrance;
ஆறு மாசத்துல, நமக்குன்னு உருவான  ஒரு gang;
ECE Rockz, Mech Rockzzனு அங்கங்க எழுதியிக்கற hostel veranda;
கிட்டத்தட்ட postmortem செஞ்ச மாதிரி இருக்கற paste;
நம்ம iron பண்ணி வெச்ச சட்டைய சுட்டு போட்டுட்டு போற சில பேர்;
Hostelலையே தங்கியிருக்கற சில dayscholars;
classla 37% பேர் மொதல் மொதலா சரக்கடிக்க காரணமாயிருந்த 1st year IV;

பல காதல் ஜோடிகள் உருவாக காரணமாயிருந்த 2nd year IV;
Internalsla எவ்வளவு கேவலமா எழுதினாலும்,அப்படியே புக் பாத்து காப்பி அடிச்சு எழுதினாலும், பேர பாத்த உடனேயும் ஒரே mark போடுற teachers;

அம்மா அப்பா எடுத்து குடுத்த pink colour polyester சுடிதார்ல அமைதியா வந்துட்டு போற பொண்ணுங்க;
தங்கள அமெரிக்க citizensன்னு நெனச்சுட்டு சுத்தர ஒரு group பொண்ணுங்க;
Copy அடிச்சு program போட்டாலும் 33 error வர்ற lab exam;
கஷ்டப்பட்டு மிச்ச ரெண்டரை மணி நேரம் உக்காந்து மண்டைய பிச்சு 33 errora , 3 errora கொரைக்கற சுகம்;
அவன்லா அவள correct பண்ணிட்டானான்னு வர்ற கிசு கிசு;
சுறா பாத்துட்டு cell phona switch off பண்ண விஜய் fans;
அசல் பாத்துட்டு அப்பிடியே பஸ் ஏறி ஊருக்கு போன அஜித் fans;
எவ்வளவு படிச்சிட்டு போனாலும் 'தப்பா வேற department question papera வாங்கிட்டமோ'ன்னு நெனைக்க வெக்கற செமஸ்டர்  question papers;
Birhtday பொதுமாத்து;
night show மொக்க படம்;
5 பேர் cut off போட்ட  தம்;
புக்க வித்து அடிச்ச பீர்;
கூட்டமா உக்காந்து பாக்கற cricket matches;
Vijay vs Ajith fights, Sachin vs Dhoni fights, Sachin vs Ganguly fights, Terra patrick vs aletta ocean fights, Gold flake kings vs Black fights, Beer vs Hot fights;
இதெல்லாம் இருந்த ஒரு சந்தோசமான உலகம் இருந்துச்சு.....
அங்க   மிகப்பெரிய  கவலையே, நம்ம சைட் அடிக்கற figure ,வேற ஒருத்தன் கூட பேசறாளேன்னு தான்,
அங்க  மிகப்பெரிய கோபமே, நம்ம வாங்கிட்டு வந்த 'தம்'ம , தெரியாம எடுத்து அடிசிட்டானுகளேன்னு தான், 
அங்க  மிகப்பெரிய சண்டையே, ****** நல்ல பிகரா?, இல்ல ********** நல்ல பிகரா?ன்னு தான்,
அங்க மிகப்பெரிய எதிரியே, Retest வெக்க மாட்டேன்னு சொல்ற சில mam தான்,
நாலு வருஷத்துல கொஞ்சம் சோகமா இருந்தது செமஸ்டர் ரிசல்ட் வந்த 8 நாளாதான் இருக்கும்.

இப்போ, AC office, கைல coffee, பாக்கெட்ல ஒரு பக்கெட் தம், oppositela ரெண்டு மூணு பிகர் உக்காந்திருக்கு, ஆனாலும், collegeப்ப இருந்த சந்தோசம் இல்ல....


மாற்றான்


சூர்யாவோட அப்பா ஒரு Genetic Sceintist.ஒரு Super humana create பண்ற முயற்சில எதோ தப்பாகி,conjoined twins பிறந்தர்றாங்க.

அவர்  Energoinன்னு ஒரு health drink தயாரிக்கறார், அத குடிக்கற கொழந்தைகளோட வளர்ச்சி நல்லா இருக்கு,energion 70% market sharea புடிச்சிருக்கு....
ஆனா இத குடிச்சா அஞ்சு ஆறு வருஷத்துல கொழந்தைகளுக்கு நெறைய disease வந்து செத்துருவாங்கன்னு சூர்யாவுக்கு  தெரியுது...
கொழந்தைகளுக்கு நல்லதில்லன்னு தெரிஞ்சே காசுக்காக இந்த health drinka விக்கிற அப்பாவ பழி வாங்குறார், இதுதான் கதை.

இதுல Comedy, Kajal Agarwal ,Russian Journalist, Olympic athletes, US, USSR cold war தூவி விட்டு செமையா ஸ்க்ரீன்ப்ளே பண்ணிட்டார்....75% படம் நல்லா  இருக்கு....கடைசி அரை மணி நேரம் K V Anand டைரக்ட் பண்ண மாதிரியே இல்ல. 'விரலுக்கேத வீக்கம்' V Sekar டைரக்ட் பண்ண மாதிரி இருந்துது... அவ்வளவு slow, Sentiment, mokka....

படத்துல யாரு மாற்றானோ இல்லையோ, கையும் களவுமா Harris Jayaraj மாட்றான்....Climaxla என்ன music போடறதுன்னு தெரியாம Harris Jeyaraj தவிச்சது,theatrela உக்காந்திருக்கற நமக்கு தெரியுது....

fight sequence கொஞ்சம் lengtha கொறச்சு, 15 நிமிஷம் climaxa கொறச்சா இன்னும் நல்லா இருக்கும்....
Directors ஒன்னே ஒன்னு புரிஞ்சிக்கணும் , ரெண்டரை மணி நேரத்துக்கு மேலல்லாம் டிக்கிய ஒரே இடத்துல park பண்ணி படம் பாக்கறதெல்லாம் ரொம்ப கஷ்டம், தயவு செஞ்சு  படத்த 2 hrs 15 minsல  முடிங்கப்பா....

படத்த கண்டிப்பா எல்லாரும் ஒரு தடவ பாக்கலாம்.... இனிமே மாற்றான் பாக்க போறவங்களுக்கு kuttychuvar.com சார்பா ஒரே ஒரு advice , தயவு செஞ்சு வண்டிய easya வெளிய எடுக்கற மாதிரி முன்னாடியே park பண்ணிட்டு போங்க, 'கால் முளைத்த பூவே ' பாட்டு ஆரம்பிச்ச உடனே கெளம்பி வீட்டுக்கு வந்துருங்க....

Kuttychuvar Verdict: between GOOD and OKAY

தாண்டவம்

சென்னைல பாரிஸ் cornerல இருக்கற எதோ ஒரு  CD கடைக்கு போய்,randoma கைய உட்டு  மூணு CD எடுத்து ,அதுல CDக்கு பத்து சீன சுட்டா ஒரு படம் ஆச்சு....இத தான இதுக்கு முன்னாடி 4 படத்துலயும் பண்ணுனோம்.....அதுக்குள்ள எதுக்கு போய் assistant director கதையெல்லாம் சுட்டுட்டு.....இதெல்லாம் நல்லாவா இருக்கு Mr Vijay?? 


கதை: அதான் trailerல 'An unusual revenge storyனு' போடும்போதே,நமக்கு தெரிஞ்சு போற usualலான பழிவாங்குற கதைதான். அனுஷ்காவ கொன்னுர்றாங்க ,விக்ரம் பழிவாங்குறார்.... 

விக்ரம் indian intelligence agency RAWல work பண்ணிட்டிருக்கார், அனுஷ்கா eye doctora இருக்காங்க,books படிக்கறது, painting, musicன்னு கிட்டத்தட்ட Bradleyயோட ரெண்டாவது சிஷ்யைங்கற(மொத சிஷ்யர் தான் சந்திரமுகி ரஜினியாச்சே) அளவுக்கு காட்டிருக்காங்க(தக்காளி,,ஏதோ அனுஷ்காவா இருந்தங்காட்டி பொறுத்துக்கிட்டோம்).... ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்குது.

கூட வேலை செய்யற ஜகபதி பாபு, நம்ம நாட்டோட ராணுவ ரகசியத்த வித்து, பணம் சம்பாதிக்கறதுக்கு தடையா விக்ரம் இருக்காருங்கரதுக்காக ,விக்கிரம லண்டன் அனுப்பி, ஒரு bomb blastல சிக்க வெக்கறாங்க....அந்த bom blastல அனுஷ்கா செத்தர்றாங்க,விக்ரமுக்கு கண் போயிருது. கண் இல்லாமையே, echolocation மூலமாவாவே, வில்லன்கள பழி வாங்கறார்....

அனுஷ்கா விக்ரம் romance நல்லா இருக்கு, மிச்சபடி,full படமும் flata, averagea போகுது....
படத்துல ஆறு பாட்டு, எல்லாமே slow, ஒரு ஒரு பாட்டும் ஒரு மாசம் ஓடற மாதிரி ஒரு feeling....background score செம மொக்கை...Background music.நல்லா இருந்திருந்தா படம் இன்னும் கொஞ்ச நல்லா இருந்த பீலிங் வந்திருக்கும்....

நீரவ் ஷா வழக்கம்போல நல்லா பண்ணிருக்கார்.... சந்தானம், நாசர், எமி , லக்ஸ்மி ராய் எல்லாரும் OK....


மிச்சபடி Editor, Choreographer பத்தி பெருசா சொல்றதுக்கு ஒன்னும் இல்ல.... எல்லாரும், taluk officeல வேல செய்யற ஆண்ட்டி மாதிரி அவங்கவங்க கடமைய செஞ்சுட்டாங்க....

தலைவி அனுஷ்கா fans, விக்ரம் fans, எமி ,லக்ஷ்மி ராய் fans,வேல வெட்டி இல்லாதவங்க, இந்த வாரம் ஏதாவது படம் பாத்தே தீரணும்னு முடிவு எடுத்தவங்க  தியேட்டர் போய் பாருங்க.... ரொம்ப நல்ல படம் பாக்கணும்னு நெனைக்கறவங்க   போஸ்டர் பாத்தா கூட பத்து அடி தாண்டவும்....

குட்டிச்சுவர் verdict :


வன்மையாக கண்டிக்கிறோம்

12th முடிச்சு ,ஒரு collegela சேர்ந்து,

ரெண்டு மூணு லட்சம் செலவு பண்ணி,

paper திருத்தற அன்னைக்கு காலைல பொண்டாட்டி கூட சண்ட போட்ட காண்டுல arrear வெச்சு உடற வாத்தியார்களுக்கு நடுவுல,arrear வெக்காம பாஸ் பண்ணி degree வாங்கி,

campus interviewல எள்ளுன்னா எண்ணையா  இருப்பேன் , ஸ்னேஹானா பிரசன்னாவா  இருப்பேன் , ரோஜான்னா R.K செல்வமனியா  இருப்பேன்னு ஏதேதோ சொல்லி place ஆகி,

offer letterக்கு மூணு மாசம் wait பண்ணி,call letterக்கு ஆறு மாசம் பண்ணி, ஒரு வருஷம் கழிச்சு வேலைல சேர்ந்து,

சென்னை அல்லது பெங்களூர்ல பத்துக்கு பத்து sizela ரெண்டு ரூம் இருக்கற வீட்டுக்கு பத்தாயிரம் வாடகை குடுத்து, அம்பதாயிரம் advance குடுத்து,

அந்த வீட்லயும் ஆணி அடிக்க கூடாது, தண்ணி அடிக்க கூடாது, அத அடிக்க கூடாது, இத அடிக்க கூடாதுன்னு ஆயித்தெட்டு condition போடப்பட்டு,

இட்லியா 'ஈ'ட்லியான்னு தெரியாத அளவுக்கு ஈ ஒட்டிருக்கற messல breakfast சாப்டு,
எரும மாட்ட விட slowa move ஆகுற trafficla office போய்,

படிக்காத technology, முடிக்காத project, மடிக்காத  laptop, கிட்டத்தட்ட கடிக்காத managerன்னு officela குப்ப கொட்டி,

பண்டிகைக்கு காக்கைக்கு சோறு வெக்கற மாதிரி இத்துணுண்டு வெச்சுட்டு 75 ரூபா பில் போடுற office canteenல lunch சாப்டு,லவ் பண்லாம்னு பண்ணா, பொண்ணுங்களால அவமானப்படுத்தப்பட்டு,

லீவ்ல ஊருக்கு போறதுக்கு ஆனானப்பட்ட IRCTCலையே tatkalல டிக்கெட் புக் பண்ணி,

ஊருக்கு போனா, 'எப்ப onsite போக போற?', 'சம்பளம் எவ்வளவுன்னு' கேக்கற மாமா, சித்தப்பா , பெரிப்பா கிட்ட சமாளிச்சு,

வாழ்ந்துட்டு இருக்கற software engineergala பாத்து சில பெருசுக, 'உங்களுக்கு  என்னப்பா  , முப்பதாயிரம் சம்பளம் வாங்குறீங்க , ஜாலியா இருக்கீங்க'ன்னு assaulta ஒரு sentenceல கேட்டர்றாங்க....

இப்படி கேக்கற ஆட்கள வன்மையா கண்டிக்கரதோட, இனிமே இதே வார்த்தைய வேற ஏதாவது software engineer கிட்ட சொன்னா, உங்க மேல கேஸ் போடறதுக்கும், உண்ணாவிரதம்
இருக்கறதுக்கும் கூட தயங்க மாட்டோம்னு சொல்லிக்கறோம்.....


நீங்க,ஜோதிகா இல்ல....


காலைல எந்திருச்சு,குளிச்சு,dressக்கு matcha கண்ல, காதுல, கழுத்துல, கால்ல, மாட்டிட்டு, எதோ Cannes film festivelக்கு போற ஐஸ்வர்யா ராய் rangeக்கு office போற;

Asian paints exterior emulsion விளம்பரத்துல வர்ற செவுரு மாதிரி மூஞ்சில coating அடிச்சுக்கற;

Cooling glass, Headphone இல்லாம வெளிய வர மறுக்கற(headphone wire பிஞ்சு ஒரு வாரம் ஆயிருந்தாலும் பரவால்ல);

பஸ்லயோ share autoலையோ போகும்போது தெரியாம யாராவது கால மிதிச்சுட்டா 'OUCH' 'OOPS' ன்னு கத்தற;

மூனாங்கிலாசையே முழுசா படிக்காத auto driver கிட்ட 'I dont have change, do u have change for 500??'ன்னு englishல கேக்கற;

வெளிய பெரிய hotelக்கு சாப்பிட போனா, சாப்பிடறதையும், என்ஜாய் பண்றதையும் விட, அங்கங்க fountain இருக்கற இடமா பாத்து நின்னு facebookla போடறதுக்காக போட்டோ எடுத்துக்கற;

ஏதாவது பையன் பாக்கறான்னு  தெரிஞ்சுருச்சுன்னா  உடனே over expression குடுக்கறது , பக்கத்துல இருக்கற frienda கிள்றது, தூரத்துல போற team mateக்கு ஹாய் சொல்றது,cell phonea சுத்தறதுன்னு 'heroinism போடற;

பசங்க  facebookல message பண்ணா மூணு நாள் கழிச்சு reply பண்ற ;

பசங்க  friend request குடுத்தா  மூணு மாசம் கழிச்சு accept பண்ற, சில சமயம் accept பண்ணாம கூட உடற;

மூணு நாளைக்கு ஒரு தடவையாவது facebook profile picture change பண்ற;

அதுல ஒரு போட்டோவாவது ஒரு குழந்தைய கட்டி புடிச்சிட்டு இருக்கற மாதிரி போட்டு, அந்த போட்டோவுக்கு காசு குடுத்தாவது 'Awesome pic.... u look sooperrr ♥♥♥♥' ன்னு கமெண்ட் போட சொல்லுற;நாட்ல நடக்கறத பத்தி ஒண்ணுமே தெரிலன்னா கூட,சாக்ரடீஸ் rangeக்கு 'The man who refuses to judge, who neither agrees nor disagrees, who declares that there are no absolutes and believes that he escapes responsibility, is the man responsible for all the blood that is now spilled in the world. Reality is an absolute, existence is an absolute, a speck of dust is an absolute and so is a human life.இப்படி யாருக்கும் புரியாம facebook status போடுற;

சப்பாத்தி, தோசைய கூட spoonla சாப்பிடுற;
ரோட்ல போனா எல்லாருமே தன்ன பாக்கரதாவே நெனச்சுக்கற;


நவநாகரீக மங்கைகளே ,உங்களுக்கு
ஒன்னே ஒன்னு சொல்லிக்கறோம்,

You are not Jyothika;
நுவ்வு ஜோதிகா லேது;
நிங்கள் ஜோதிகா இல்லா;
துமாரா ஜோதிகா நஹி;

நீங்க ஜோதிகா இல்ல;

                                                                                                   

சாப்ட்வேர் கம்பெனிகளில் முன்னேறுவது எப்படி??

Software Engineers மொத்தம் ரெண்டு வகை, 
காலைல 8 மணிக்கு ஆபீஸ் வந்துட்டு switch போட்ட grinder மாதிரி, night வரைக்கும் உக்காந்து எல்லா வேலையும் இழுத்து போட்டு செஞ்சுட்டு ,work pressureனு வீட்ல போய் அம்மா,அப்பா,பொண்டாட்டி கூட சண்ட போட்டுட்டு படுத்து தூங்கறவங்க மொத கோஷ்டி.இவங்க, அவங்களா உழைச்சு , increment வாங்கி , onsite போய், சம்பாரிச்சு, மண்டைல முடி கொட்டி, கல்யாணம் பண்ணி செட்டில் ஆயிருவாங்க.... இவங்களுக்கு நம்ம அட்வைஸ் ஏதும் தேவை இல்ல....ரெண்டாவது கோஷ்டி:
வேல செய்ய புடிக்காம, கடுப்புல வந்து, ஏனோ தானோன்னு வேல செஞ்சு, increment இல்லாம,onsite இல்லாம, வீட்ல, 'சாப்பாட்ல உப்பு இல்லன்னு' சொன்னா,' PCS/Cunfosys/GTS/JCLல தான வேல செய்யற??' ன்னு  நக்கல் பேச்சுக்கு ஆள் ஆகி,தினமும் Managerகிட்ட 'You have to put some extra efforts man'ன்னு பேச்சு வாங்கிட்டு இருக்கற   73% பேரு....


இவங்கல்லாம் கஷ்டப்பட்டு வேல செய்யாமலே முன்னேறரதுக்கு எளிய வழிகள்:

*.காலைல மேனேஜர் office போறதுக்கு முன்னாடி நம்ம  போயரனும்,Evening அவர்  கெளம்புனதுக்கு அப்புறம் தான் நம்ம கெளம்பனும்(அந்த timeல வேல செய்யனும்கறது முக்கியம் இல்ல....).....

*. 5 mins வேலையா இருந்தாலும், பெருசா build up பண்ணனும்,
For example,
உங்க  lead சின்னதா excel sheetla ஒரு fieldla ஏதாவது change பண்ண சொன்னாங்கன்னா, அந்த வேலைய செஞ்சு முடிச்சிட்டு,

Hi Ramesh,

As discussed with you yesterday evening over phone, I have successfully changed 3rd row, 4th column of the 'employee details' excel sheet. 
Please find the updated excel sheet in the following folder path,

<<folder path/file name>>

Please reply back for any clarifications

Thank you,
XXXXXXXXXXXXXX,
Software Analyst,
YYYY Consultancy Solutions,
Chennai.

அப்படின்னு 5 நிமிஷ வேலைக்கு 15 நிமிஷம் செலவு பண்ணி மெயில் போடணும்....Team members, module lead, group lead, project manager எல்லார்த்தையும் CCல வெக்கணும்....

* .birthday celebrations, Team outingநா, மூஞ்சில cake  பூசறது , photo எடுக்கும்போது கொம்பு வெக்கறது , அப்பப்ப ரெண்டு மூணு மொக்கைய போடறதுன்னு நல்லா  'performance' பண்ணனும்....


*Managera எதிர்த்து பேசவே கூடாது, manager சொன்னா ஒன்னும் ஒன்னும் மூணு....
*  தெரியாம கூட , 'தெரியாது' ங்கற வார்த்தைய சொல்லிரவே கூடாது. சுத்தமா தெரியாத ஒரு tool, software அல்லது technology பத்தி manager/lead கேட்டா கூட 
Its a kind of,Its a  sort of, In the sense, usability, modularity, quality, technically speaking , cost cutting, probably, actually  இந்த மாதிரி வார்த்தைகள போட்டு, ஒரு statement குடுத்தரனும்...

*.Client visit வந்தா, clientsஓட நல்லா interact  பண்ணனும். 
What do you think about Indian culture?, 
Which one u like most, Dosa or Chappathi?
What will be the future of Indian Software Engineers?(அங்க Eurozone crisis  வந்து,  கொஞ்ச நாள்ல அவன் futureருக்கே வழியில்லன்னு தெரிஞ்சிருந்தாலும் பரவால்ல....)
 இந்த மாதிரி மொக்கத்தனமான கேள்வியெல்லாம் கேக்கணும்....

*. அப்பப்ப sweets எடுத்துட்டு வரணும்,

Hi All,
Sweets at my desk, Please help yourselves,

 அப்டின்னு mail போட்டு எல்லார்த்துக்கும் குடுக்கணும்....இப்படி டகில்பாஸ் வேல செஞ்சாதான் நம்மளோட managerஉக்கு நம்மளோட  teamwork தெரியும்.

இது போக அப்பப்ப யாருக்காவது ஏதாவது சொல்லிக்குடுக்கனும்  (எல்லார்த்துக்கும் தெரியுற மாதிரி சத்தமா ), Juniorsக்கு அட்வைஸ்  பண்ணனும்   ,Team movie போனா ticket book பண்ணனும் ,cab book  பண்ணனும், Clean shave, formalsனு  Raymonds model மாதிரி சுத்தனும்.

இப்படி மேல சொன்ன வேலையெல்லாம் செஞ்சா , Software fieldல முன்னேறி, onsite போயி, சம்பாரிச்சு கல்யாணம் பண்ணி, ஊற தாண்டி ஊரப்பாக்கத்துல ஒரு இடம் வாங்கி settle ஆயிறலாம்....


முகமூடி

First half: 
ஜீவா,  'குங் பு' class போயிட்டு,  சும்மா தண்ட சோரா ஊற சுத்திட்டு இருக்கார், 
வில்லன் நரேன் கோஷ்டி  நெறைய பக்கம் கொள்ளை அடிச்சிட்டு  இருக்காங்க ,அவங்கள நம்ம ஊர் போலீஸ் நால புடிக்க  முடில, so நாசர வரவெச்சிருக்காங்க....இதுக்கு நடுவுல ஜீவாக்கு நாசர் பொண்ணு(heroine) மேல லவ்வு.... 


ஒரு தடவ heroinea impress பண்றதுக்காக, சும்மா ஒரு getup போட்டுட்டு வீட்டுக்கு போறார், திரும்பி வர்ற வழியில அந்த naren group  கொள்ளக்காரங்கள்ள  ஒருத்தன  புடுச்சு குடுக்கறார்....உடனே 'முகமூடி,Superhero' ன்னு famous ஆயிர்றார், So,வில்லன் கோஷ்டி, ஜீவாவையும், நாசரையும் போட்டு தள்ள ட்ரை பண்றாங்க....ஜீவா வீட்ல ரெண்டு தாத்தா இருக்காங்க, ஒருத்தர் costume designer, இன்னொருத்தர் scientist, வேற என்ன, scientistனாளே தமிழ் சினிமால ஒரு robot பொம்மை , ரெண்டு wire வெச்சுக்கிட்டு 'soldering' பண்றதுதான வழக்கம், அத தான் இதுலயும் காட்டிருக்காங்க.... இன்னும் எத்தன நாளைக்குயா தமிழ் சினிமால scientist எல்லாம் solderingங்கே வெச்சிட்டு இருப்பாங்க??, ஒரு welding , foundry அளவுக்காவது improve பண்ணுங்கப்பா.... இந்த ரெண்டு தாத்தாவும் சேர்ந்து ஜீவா வில்லன்கள புடிக்கறதுக்கு help பண்றாங்க....

இப்படி  first halfla comedy, super herokku build upன்னு OKவா இருக்கு....

Second half:

second halfல ஒரு gluteus maximusஉம் கெடயாது.... செம மொக்கையான climax வேற .

Overall:

மிஸ்கின் TVla எல்லாம்  முகமூடி costumeக்கு அவ்வளவு பில்ட் up குடுத்துட்டு, எதோ சரவணா storesல 2  மீட்டர் polyster பிட் துணி வாங்கி , 'மணி tailors'ல குடுத்து தெச்ச மாதிரி ஒரு build up இல்லாம சப்பையா  காட்டீர்றாங்க.... அந்த costume போடறதுனால என்ன useனும் சொல்லல....வழக்கம் போல மிஸ்கின் படத்துல இருக்கற bar song, reverseல நடக்கற மாதிரி ஒரு சாங், slow motionல கால காற்றதுன்னு எல்லாமே இருக்கு....

இந்த படத்துல எல்லா charectersமே வீட்ல மூணாவது அல்லது நாலாவது floorல தான் இருப்பாங்க, யாராவது யாரையாவது பாக்க போனா, அவங்க போய் வண்டிய நிறுத்திட்டு மூணு floor நடந்து போறத fulla காட்றாங்கப்பா.... மிச்ச படத்துலயெல்லாம் fight, song na தான்  தம்  அடிக்க போவாங்க, இந்த படத்துல மாடி படிய காமிச்சாலே போயிர்றாங்கப்பா....

திடீர்னு ஏதாவது சீன் நல்லா இருக்கேன்னு நிமிர்ந்து உக்காந்தா, அந்த சீன் ரொம்ப நேரத்துக்கு போயிட்டே இருக்கு....'fightநா fighte போட்டுட்டு இருப்பியா??, song, song'ன்னு audience responseவர்ற அளவுக்கு சில sequences lengthy....

ஆகமொத்தம் படத்துல, நாசர் மூக்க தவிர பெருசா ஒன்னும் இல்ல....

kuttychuvar verdict: between 'OK' and 'THU'கடைசியா 'kuttychuvar.com' சார்பா 'வாய மூடி சும்மா இருடா' பாட்ட  மிஸ்கினுக்கு   dedicate பண்றோம்....

ஒரு உலகம் இருந்தது....

'Home away from home'னு போர்டு போட்ட hostel;
 Mech Rockz, MZ Rockzzனு அங்கங்க எழுதியிக்கற toilet;
 கொக்குக்கு அடுத்து கழுத்த அதிகமா  ஆட்டுற  உயிரினமான வார்டன்;
ஏதாவது பண்ணி மாட்டிக்கிட்டா, ஒன்றரை மணி நேரம் புடிச்சு மொக்கைய போடுற RT;
கிட்டத்தட்ட postmortem செஞ்ச மாதிரி இருக்கற paste;
மொக்க மெஸ், அதுலயும் பத்து பதினஞ்சு சப்பாத்தி தின்கிற குரூப்,queue break பண்ணி நடுவுல நின்னு தோசை வாங்குற குரூப்;
 Birhtday பொதுமாத்து,தாத்தா கடை  treat;
 College Id cardukku பதிலா விசிடிங் கார்டு கழுத்துல தொங்குனா கூட allow பண்ற watchman;
 "All of you just please submit your assignments on friday, but friday doesnot include the friday pa" னு சொல்ற Maddy;
 Copy அடிச்சு program போட்டாலும் 33 error வர்ற lab exam, கஷ்டப்பட்டு மிச்ச ரெண்டரை மணி நேரம் உக்காந்து மண்டைய பிச்சு 33 errora , 3 errora கொரைக்கற சுகம்;
அவன்லா அவள correct பண்ணிட்டானான்னு வர்ற கிசு கிசு..... 


இனி ஒரு நாள் லீவ் எடுதன்னா debar பன்னிருவாங்கன்னு மெரட்டற Tutor;
50 ரூபா குடுத்தா 50 நாளைக்கு வேண்ணாலும் மெடிக்கல் certificate குடுக்கற பீளமேடு doctors(especially sathyanarayanan MBBS);
படிங்கடா, படிங்கடான்னு  கெட்ட  வார்த்தைல  திட்ற placement rep, 
எழுதுன Yashwant kanetkara விட Let us C booka அதிக நாள் கைல வெச்சிருந்த ஒரு கோஷ்டி(especially me),
வில்லு பாத்துட்டு cell phona switch off பண்ண விஜய் fans,
அசல் பாத்துட்டு அப்பிடியே பஸ் ஏறி ஊருக்கு போன அஜித் fans,
5 பேர் cut off போட்ட ஒரு தம்,
புக்க வித்து அடிச்ச பீர்,
G blockla கூட்டமா உக்காந்து பாக்கற cricket matches;
Vijay vs Ajith fights, Sachin vs Dhoni fights, Sachin vs Ganguly fights, Terra patrick vs aletta ocean fights,
அழகழகா அங்கங்க சுத்திட்டிருக்கற BSc IT,FT figures;
பீளமேடு, எஸ்ஸோ, சௌரிபாளையம்   TASMAC,
Intrams, Dramatix, Rhythm, Win hearts, NMB cream bun, RV paneer puff, Shahi grill, Keerthi mess mutta chappathi,மணீஸ் தியேட்டர் night show, Coffee day and Boomerang ஜோடிகள்,  micro xerox, mini cd.... 
இதெல்லாம் இருந்த ஒரு சந்தோசமான உலகம் இருந்துச்சு.....அங்க   மிகப்பெரிய  கவலையே, நம்ம சைட் அடிக்கற figure ,வேற ஒருத்தன் கூட பேசறாளேன்னு தான்,
அங்க  மிகப்பெரிய கோபமே, நம்ம வாங்கிட்டு வந்த 'தம்'ம , தெரியாம எடுத்து அடிசிட்டானுகளேன்னு தான், 
அங்க  மிகப்பெரிய சண்டையே, ****** நல்ல பிகரா?, இல்ல ********** நல்ல பிகரா?ன்னு தான்,
அங்க மிகப்பெரிய எதிரியே, Retest வெக்க மாட்டேன்னு சொல்ற சில mam தான்,

நாலு வருஷத்துல கொஞ்சம் சோகமா இருந்தது செமஸ்டர் ரிசல்ட் வந்த 8 நாளாதான் இருக்கும்.

ஆனா இப்போ, AC office, கைல coffee, பாக்கெட்ல ஒரு பக்கெட் தம், oppositela குட்டி டிரஸ் போட்டுட்டு ரெண்டு மூணு பிகர் உக்காந்திருக்கு, ஆனாலும், collegeப்ப இருந்த சந்தோசம் இல்ல....

                                              MISS U F5ERZ, MISS U PSG TECH

நான் ஈ :

எஸ் எஸ் ராஜமௌலி , இவர் தெலுங்கு  டைரக்ட் பண்ண எல்லா படமும் minimum சூப்பர் ஹிட் தான்.இவர் படத்த ரீமேக் பண்ணியே பல பேர் பெரிய ஆள் ஆயிருக்காங்க.


நான் ஈ :
தன்ன கொலை பண்ண வில்லன,ஹீரோ , திரும்ப  'ஈ'யா பொறந்து  பழி வாங்குற கதை.இப்படி மொட்டையா கதைய கேட்டா,வாழப்பழ காமெடி பாத்த மாதிரி சிரிப்பு வர தான் செய்யும்.ஆனா படம் கண்டிப்பா அப்படி இல்ல....

வழக்கமான , ஹீரோ ஹீரோயின் மாத்தி மாத்தி பாக்கறது,சிரிக்கறது , பஞ்சு மிட்டாய் வாங்கி திங்கரதுன்னு காட்டாம, ஒரு செம fresh ஆனா romance சீன்ஸ்,  
'ஈ'  பொறந்ததுல இருந்து வில்லன பாக்கற வரைக்கும் வர்ற சின்ன சின்ன விஷயம், இன்டர்வெல் முன்னாடி வில்லன் கிட்ட 'I WILL KILL YOU' ன்னு எழுதறதுன்னு first half தாறுமாறு தக்காளி சோறு.

செகண்ட் halfla வில்லன்  ஈய புடிக்க படுற பாடு, samantha ஹெல்ப்  ,சந்தானம் காமெடி, End creditsla ஈ டான்ஸ்,  இப்படி எந்த சீனுமே போர் அடிக்கல.

சுதீப், நானி, சமந்தா , மிச்ச actors எல்லாருமே சூப்பர். சுதீப்போட தமிழ் உச்சரிப்பு தான், தமிழ் படத்துல வர்ற 'சேட்' பேசறமாதிரியே இருக்கு.

படத்துல பாட்டு,background மியூசிக் chancae இல்ல. 
ஒளிப்பதிவு , எடிட்டிங் ,டயலாக்(except 'செயின் கட் ஆனமாதிரி, அவன் ஞாபகத்தையும் கட் பன்னிரு' dialogue)  எல்லாமே பெர்பெக்ட் .
தமிழ் தெலுங்கு bilingualலா இருந்தாலும் ,வண்டி registration கூட TN ன்னு இருக்கறது சூப்பர்.

மொத்த படத்துலையே ஒரே ஒரு சாமியார் சீன் தான் மொக்க.
என்ன பண்றது,
சாமியார் இல்லாத தெலுங்குபடத்த பாக்கறது ,
மாமியார் இல்லாத மெகாசீரியல பாக்கற அளவு கஷ்டமாச்சே....  

first நாள் தியேட்டர்ல கிட்டத்தட்ட நானும் , ஈயும் மட்டும் தான் இருந்தோம், ஆனா அடுத்த நாளே செம பிக் up . ரெண்டாவது தடவ பாக்கும்போது செம audience response.


ஒரு டைரக்டர் நெனச்சா ஒரு ஈய கூட மாஸ் ஹீரோ ஆக்கலாம்னு நிருபிச்சிருக்கார்.
வறுமைக்கோட்டுக்கு கீழ இருக்கற ஹீரோ, எருமைமாடு மேய்க்கிற ஹீரோயின், லவ் பண்றாங்க, கடைசில செத்துப்போராங்கன்னு படம் எடுத்தா, வரிஞ்சு கட்டிட்டு பாராட்டற பத்திரிகைகள், directors ,இந்த மாதிரி படங்களையும் பாராட்டலாம்.

வயசுல இருந்து 60 வயசு வரைக்கும் எல்லாரையும் ரசிக்க வெக்கற படம்.சந்தேஹமே இல்லாம,இதுவரைக்கும் ரிலீஸ் ஆனதுலையே,  இந்த வருஷத்தோட BEST படம் இதுதான்....

Verdict:

இத தட்டிக்கேக்க யாருமே இல்லையா??

பாலினிது தேனினிது என்பதம் மக்கள்
பீர்ஒன்று குடிக்கா தவர் 

                                                                               -தெருக்குறள்

'பீர் அடிக்கலாமா?
அப்படின்னு, 7 பேர் இருக்கற ரூம்ல ஒருத்தன் வாய்ல இருந்து வந்த உடனே, பீர் வாங்கலாம்னு ,ஒரு T Shirta போட்டுட்டு, உள்ள இருந்த 'laptop' அ எடுத்து வெளிய வெச்சுட்டு ,laptop bag மட்டும் எடுத்துட்டு பக்கத்து 'TASMAC' போனா..... , ஒரு நிமிஷம்.... டாஸ்மாக் பத்தி தெரியாதவங்க கீழ இருக்கற டாஸ்மாக் விளக்கத்த மொதல்ல  படிங்க....
டாஸ்மாக்ங்கறது ஒரு பச்சை போர்டு , 10*10 ரூம், ஒரு 50,60 அட்டை பெட்டி, 500,600 bottle, ரெண்டு வொர்க் ஆகாத பிரிட்ஜ் , ஒரு பேன், ரெண்டு tubelight , தெலுங்கு பட வில்லன் மாதிரி எப்பவுமே மொறைக்கற ரெண்டு supplier, இத எல்லார்த்தையும் அடச்சு, முன்னாடி ஒரு கம்பி கிரில், அதுல ஒரு பாட்டில் மட்டும் வர்ற அளவுக்கு ஒரு ஓட்டை.... இது எல்லார்த்துக்கும் வெளிய, ரெண்டு கை, ரெண்டு கால், ஒன்றரை கிட்னி, ஒரு ஹார்ட், கால் லிவர் ஓட எப்பவுமே நின்னுட்டு இருக்கற இருவது, முப்பது பேர்....

bag எடுத்துட்டு போனா , அங்க ஒரு 20, 30 பேர் முட்டி மோதிட்டு இருப்பாங்க.... மன்னன் பட ரஜினி  மாதிரி கஷ்டப்பட்டு உள்ள போய் 500 ரூபா நோட்ட குடுத்து 'அண்ணா  அஞ்சு KF ஸ்ட்ராங் குடுங்க'  ன்னு கேட்டா....
'ஸ்ட்ராங் இல்ல, lehar தான் இருக்கு , வேணுமா??'ன்னு reply வரும்....

அங்கேயே நின்னு friendukku போன் பண்ணி 'மச்சி lehar தான் இருக்கு , வாங்கட்டா??
'இல்ல மச்சி, lehar சுத்தமா  மப்பு ஏறாது  நீ  அடுத்த டாஸ்மாக்  போய் கேட்டுப்பார்' னு சொல்லுவான். ....

ஒரு ரெண்டு கிலோ மீட்டர் போய், அதுத்த டாஸ்மாக் போனா, வெளிய நின்னுட்டு இருக்கற பெருசு 'தம்பி இங்க பீர் இல்ல.... அடுத்ததுல கேட்டுப்பார்....'
 பீர் அடிக்கறவன     பாத்த உடனே கண்டு புடுச்சர்ரான்கப்பா.....

இந்த தடவ நமக்கே வெறி வந்துரும்.... 'நமக்கே பீர் இல்லையா நாட்ல?? பீர் வாங்காம வீட்ல கால் எடுத்து வெய்க்க போறதில்லன்னு'சபதம் எடுத்துட்டு, அடுத்த டாஸ்மாக்குக்கு வண்டிய விட்டா, friend கிட்ட இருந்து போன் வரும்....
'என்னடா பண்ணிட்டு இருக்க?? சீக்கிரம் வாங்கிட்டு வா,10 மணிக்கு கடைய  close பண்ணிருவான்....sidedishla வாங்கியாச்சு ' 
'15 நிமிஷம் வெயிட் பண்ணு மச்சி, 'பீர்'ஓட வர்றேன்'...next TASMAC:

அங்கயும் ஒரு முப்பது நாப்பது பேர் நின்னுட்டு இருப்பான்....
இந்த லட்சனுத்துல சில கட்சிக தமிழ் நாட்ல பூரண மதுவிலக்கு கொண்டு வர போறாங்களாம்.....வந்து டாஸ்மாக் வாசல்ல பாருங்க....உங்களால பூரணம் விஸ்வனாதன கூட கொண்டு வர முடியாது....

திருப்பியும் மன்னன் ரஜினி மாதிரி உள்ள போய் 
'அண்ணா அஞ்சு KF ஸ்ட்ராங் பீர் குடுங்க....'
'KF இல்ல....'
'இருக்கற ஸ்ட்ராங் பீர்ல அஞ்சு குடுங்க...'
'cooling இல்ல பரவால்லையா?'
'பரவால்ல குடுங்க ''

வெளிய வந்து பீர் பேர பாத்தா 'darkknight', '4500','honeybee', 'mohenjadharo' 'Indian Ocean' இப்படி எதவாது ஒரு கேள்விப்படாத  பேர் இருக்கும்.... அநேகமா இதெல்லாம் , டாஸ்மாக் பின்னாடி பொடக்காலில உக்காந்து suppliere செய்யற பீரா இருக்குமோன்னு டவுட் வரும்....
500 ரூபாய்க்கு 5 பீர் போக,82 ரூபா சில்லறை குடுத்திருப்பான்.... ஐன்ஸ்டீனால கூட ஒரு பீரோட விலைய கண்டுபுடிக்க முடியாதுடா சாமி....

வாங்கிட்டு போய் வீட்ல உக்காந்து பீர் sidedish வெக்க பேப்பர் விரிச்சா  
'டாஸ்மாக்கில் போலி மதுபானங்கள் கண்டுபிடிப்பு 'ன்னு நியூஸ் போட்டுருப்பான்....
'டேய் இதெல்லாம் சுதேசமித்ரன்ல வர வேண்டிய நியூஸ் ஆச்சேடா , இப்பதான் உங்களுக்கு தெரியுதா??'ன்னு பொலம்பிட்டே அடிக்க வேண்டியது தான்....
ஒரு பீர் அடிக்க ஒரு தமிழன், இவ்வளவு பாடு பட வேண்டி இருக்கு....
டாஸ்மாக்ல நல்ல பீர் கெடைக்கறது, சோமாலியாவுல நல்ல சோறு கெடைக்கறத விட கஷ்டம் ஆயிருச்சு....

இத தட்டிக்கேக்க யாருமே இல்லையா??சாப்ட்வேர் கம்பனிகளுக்கு ஒரு பகிரங்க கடிதம்:

Microsoft Word வாங்கறதுக்கு ,பொள்ளாச்சி சந்தைல மாடு வாங்குற மாதிரி client கிட்ட பேரம் பேசி வாங்கும் சாப்ட்வேர் கம்பெனிகளே.....

நாலு பேர் வேல செய்யற ப்ரோஜெக்டுக்கு, டீம் lead, Team manager, Module lead, Project lead, Project Manager, Delivery Manager, HR, இப்படி  ஏழு lead கள போட்டுட்டு,  Cost cutting பண்றன்னு toilet tissue paper sizea குறைக்கும் சாப்ட்வேர் கம்பெனிகளே ....

10 மாசத்துல ப்ராஜெக்ட் டெலிவரி பண்றன்னு சொல்லிட்டு, 3,4 வருஷம் ஆனாலும் , ஒரு சிசேரியன் பண்ணாக்கூட டெலிவரி பண்ண முடியாத மாதிரி projecta கற்பழிசிருக்கும் சாப்ட்வேர் கம்பெனிகளே....


B.E முடிச்சு ,காம்பசில் வேலை வாங்கி ,கழுத்தில் ID கார்டு மாட்டிக்கிட்டு , உழைக்கும் ஒரு resource (உங்கள் பாசையில்) எழுதிக்கொள்வது....ஒரு நாளைக்கு 8 மணிநேரம் வேலை செஞ்சோம் .... ஒரு நாள், recession வந்துருச்சு, இனிமே 9 மணி நேரம் வேலை செய்னு சொன்னீங்க, அதையும் செஞ்சோம் .... Recession முடுஞ்சு அடுத்த recession கூட வர போகுது ஆனால் 8 மணி நேரமா குறைக்கல....

9 மணி நேரம் office ல இருக்கற மாதிரி ID  card  swipe பண்ணலன்னா சம்பளத்த    குறச்சிருவோம்னு 'அங்காடி தெரு அண்ணாச்சி' மாதிறி மெரட்டுநீங்க .... 

'அம்மா' கரண்ட் தரமாட்டேங்கறாங்கனு சொல்லி இப்போ AC யையும் 5 மணிக்கு மேல ஆப் பண்ணிடுறீங்க....

அவனவன் parliament லயே porn பாக்குறான், எங்கள ஒரு சினிமா website ஆவது  பாக்க விடுறீங்களா?? அதையும் block பண்ணி வெச்சுடறீங்க....

எங்க ஊர்ல ஒரு மளிகை கடைக்காரர், ஒரு நாள் அதிகமா 2000 ருபாய் லாபம் வந்ததுக்காகக கடைல வேல செய்யற employees க்கு quarter வாங்கி தர்றார்....ஆனா,ஒரு Quarter க்கு 2000 கோடி லாபம் சம்பாதிக்கற நீங்க, employees க்கு வாட்டர் packet ஆவது வாங்கி தந்தீங்களா?

ஏன் உனக்கு AC ரூம்ல உக்காரவெச்சு, 20000 ரூபாய் சம்பளம் குடுக்கரோமே  பத்தாதா????அப்டின்னு நீங்க கேக்கலாம்....

20000 தர்றீங்க , ஆனா PF, Graduity, Company welfare fund, Income tax, Professional Tax, Health Insurance, அப்டின்னு எதேதோ சொல்லி, கொஞ்சத்தை புடுங்கிடுறீங்க,

காலேஜ்ல ஒரே ஜீன்ச ஒரு வாரம் போட்டவன புடிச்சு, Weekdaysல Formal shirt, formal shoe, Fridayனா, Casual shirt, Casual Shoe, Client Meetingனா tie, கோட்சூட் , Office Gym போகனும்னா Sport Shoe, T shirt தான் போடணும்னு " டிரஸ் code"னு ஒன்ன உருவாக்கி காசை கரைக்கறீங்க.....
.
அப்பப்ப ஏதாவது escalation மெயில் போட்டு கடுப்பேத்தி சரக்கடிக்க வெச்சு , கொஞ்சம் காச போக வெச்சர்றீங்க....  

மிச்ச காச இந்தியன் ஆயில், Hindustan Petroleum, இல்லன்னா Metro Transsport Corporation புடுங்கிடுறான்....


இல்ல நீங்க மிச்ச கம்பெனி மாதிரி,தீபாவளி பொங்கலுக்கு போனஸ் தான் குடுக்கறீங்களா???

பத்து வருஷத்துக்கு முன்னாடி சாப்ட்வேர் இஞ்சினீர்''னு சொன்னா,ஒரு  மதிப்பாவது இருந்துது....இப்பல்லாம் 'சாப்ட்வேர் இஞ்சினீர் 'ங்கறது,எதோ  'கம்ப்யூட்டர் சாம்பராணி' மாதிரி casual ஆயிருச்சு ,பொண்ணு  கூட  தரமாட்டேங்குராணுக .....

சரி, hike குடுப்பீங்கன்னு பாத்தா, company shares value குறையுது , dollar value குறையுது ,யூரோ value குறையுது, பீரோ value குறையுது'ன்னு ஏதாவது காரணத்த சொல்லி 'பருப்பு சட்டிய வழிச்சு நக்கு'ங்கறீங்க .... ஆனா TV நியூஸ்ல வந்து ' இந்த வருஷம் நாங்க 50000 freshersa recruit பண்ண  போறோம்னு ' பல்ல இளிச்சுட்டே சொல்றீங்க....

அப்படியே hike னு ஒன்னு கொடுத்தாலும், Appraisal னு ஒரு கான்செப்ட்  வெச்சுருக்கீங்க,

ரொம்ப மோசமா வொர்க் பண்ணுனா 'E'
சுமாரா வொர்க் பண்ணுனா 'D'
எல்லா வேலையையும் கரெக்டா செஞ்சா 'C'
150 பெர்சென்ட் வேல செஞ்சா 'B'
200 பெர்சென்ட் வேல செஞ்சா 'A' (அதெப்படி 200 % வேல செய்யறதுன்னு  தெரிலப்பா....)

இப்படி 'கண்ணாடிய திருப்புனா ஆட்டோ ஓடும்'ங்கற அளவு லாஜிக் கூட  இல்லாத appraisal processa  வெச்சு வர்ற hikeஅயும் கொரச்சறீங்க ....

இவனுங்க படிச்சவனுக, கண்டிப்பா ஒண்ணா சேந்து ஒரு union என்ன, ஒரு  ஆனியன்  கூட உருவாக்க மாட்டானுக.... strike க்கும் பன்னமாட்டாணுக ங்கற   நம்பிக்கைல ஓவரா போய்ட்டு இருக்கீங்க....ஒரு நாள் நாங்க ஒண்ணாசேந்து  strike பண்ணத்தான் போறோம் வெள்ளைக்காரன் கம்பிய காச்சி பின்னாடி  குத்தப்போறான் , அப்ப தான்யா தெரியும் எங்க அருமை.....

ஏதாவது செய்யணும் சார் ....