Labels:

விஜய் படம்: PART 2

----------------------INTERMISSION(இனி அதிரடி ஆரம்பம் )---------------------------------

ஹீரோ இப்ப வில்லனோட ஊருக்கு வந்துட்டாரு.(அந்த ஊரு தென்காசின்னு வெச்சுக்குவோம்). ஹீரோயினும் மேல்படிப்புக்காக அதே ஊருக்கு  வராங்க.(Its a coincidence Damn it....). அங்க வில்லன் சொல்றதுதான் சட்டம். ஒரு நாள் ஒரு
கர்ப்பிணி பொண்ண கடன திருப்பி தரலைன்னு சொல்லி வில்ல ஆளுக அடிச்சு இழுத்துட்டு போறாங்க, அப்ப காப்பாத்தறார் விஜய்.
அந்த  பொண்ணு "இந்த வில்லன ஒழிக்க ஒருத்தன் வரமாட்டானான்னு காத்துக்கிட்டு இருந்தோம், கடவுள் மாதிரி வந்து காப்பாத்தினீங்க.... உயிரோட என் வைத்துல இப்ப குழந்தை இருக்குன்னா அதுக்கு நீங்க தான் காரணம் "னு சொல்லுது. விஜய பாக்க வந்த heroine அவங்க பேசிட்டு இருந்ததுல கடைசி வரிய(in blue) மட்டும் கேட்டுட்டா.
அதனால விஜய  பாத்து "உன்னையே நம்பி இருந்த என்ன ஏமாத்திட்டியே.... இனி என் மூஞ்சிலையே முளிக்காத"ன்னு சொல்லிடரா.
அங்க ஒரு சோக பாட்டு....

பால்நிலவே தேயாதே;
பனித்துளியே காயாதே ;

ரோஜா செடில இருக்கிற முள்ளே ரோஜாவ குத்துதம்மா; 
 பலாப்பழத்துல  இருக்கிற முள்ளே பழத்த  குத்துதம்மா ;

மீன்ல இருக்கிற  முள்ளு மீனையே குத்தலாமா;
வாட்ச்ல இருக்கிற முள்ளே வாட்ச குத்தலாமா;
 .......
அடுத்து ஹீரோ நேரா வில்லன் வீட்டுக்கு போறார்....

விஜய்: டேய்  எண்ணி ஏழு நாள்ல உன் சாம்ராஜ்யத்தையே அழிச்சு உன்னையும் கொல்ரண்டா.....
வில்லன் : இது தென்காசி டா....என் கோட்டை டா....
 விஜய்: டேய் திருப்பாச்சி சிவகாசி யே  பாத்தவன்டா  தென்காசி எனக்கு தூசி டா.... 
BGM     :(தள தள தள  தள  தளபதி.... எங்கள் இளைய தளபதி.....
             தல தல தல தல தலைவிதி..... முடுஞ்சுது எதிர்த்தவன் தலவிதி.... )

அப்படியே கட் பண்ணி ஓபன் பண்ணா சாங்.
அந்த ஊர்ல கோவில் பண்டிகை,கோவில்ல சாங்.
industrya விட்டு விரட்டப்பட்ட , serialla சான்ஸ் தேடிட்டு இருக்கிற ஒரு heroine (eg மாளவிகா,நமீதா,சோனா.) வெச்சு item சாங்....
நா போடப்போறேன் ஆட்டம்;
கூடுது டா நல்ல கூட்டம்;

ஒடஞ்சுது உன்  சட்டம்;
பலிச்சுது என் திட்டம்;

இந்த பாட்ல விஜயோட ஹிட் படம்லா வரணும்,
காதலுக்கு மரியாதை தந்தவன் டா;
திருப்பாச்சில பொறந்தவன் டா;
சிவகாசில வளந்தவன் டா;
வில்லன கில்லி மாதிரி அடிச்சவன் டா;
காட்டுல குருவி, கடல்ல சுறா, கிரிக்கெட்ல சச்சின் டா....

எல்லார்த்த விட முக்கியம், சிங்கம் பெத்த புள்ள; புலி போட்ட குட்டி, டைனோசர் போட்ட  முட்டை, இந்த மாதிரி SAC ய புகழ்ந்தரனும்....


அடுத்து வில்லனோட அல்லக்கைகள போட்டு தள்றார்....
அல்லக்கை No 1:(In Phone)
விஜய் :       உன் right hand, கடா குமாரு,
                       இப்ப படா பேஜாரு;
வில்லன்  : டே டே டே டே டேய்....

அல்லக்கை No 2:(In Phone)

விஜய்:         உன் left hand , கேடி ரவி, இப்ப பாடி ரவி
வில்லன்:   டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

இதுக்கு நடுவுல friend பன்ன advicela heroine மனம் திருந்தி, ஹீரோவ வந்து கட்டி புடுச்சு அழுகறா.... அப்புறம் என்ன, last குத்து பாட்டுதான்....
1 கோடிக்கு செட் போடறோம். அந்த செட்ட டான்ஸ் ஆடியே ஹீரோ ஓடச்சிருவார்.
கொய்யாபழம் கொய்யாபழம்
நா  கடிச்ச நகா பழம்.
பழம் நழுவி பாலில் விழும்;
தாலி கட்டுனா காலில் விழும் ;
 

அடுத்த நாள் heroina வில்லன் கடத்திடுறார். விஜய் தேடிட்டு வில்லன் வீட்டுக்கு போறார். எதிர்த்து வர்ற ஆளுக எல்லார்த்தையும் அடிச்சு நொறுக்கறார். கடைசியா heroinea வில்லன் கூட்டிட்டு ஒரு இருட்டான எடத்துக்கு போறார். விஜயும் அங்க போறார்.
ஹீரோ, வில்லன், heroine.... ஒரே இருட்டு, ஒரு gunshot.....
யார் செத்தா?
யார் செத்தா?
யார் செத்தா?
வேற யாருங்க சாவா?
வழக்கம்போல audience தான்....