Labels:

'விஜய்' படம் எடுப்பது எப்படி?

தேவையான பொருட்கள்:
 industryla topla இருக்கிற heroine , அரை load அருவா,
  60 டாட்டா சுமோ, 6 செல்போன் ,50 அடியாள் ,2 வில்லன், 4 அல்லக்கைக (தாமு,வையாபுரி,விவேக்,சிட்டி பாபு preferrable ) மொக்க மியூசிக் டைரக்டர்,(dsp , மணி ஷர்மா,ஸ்ரீகாந்த் தேவா preferrable .) ,நன்கு copy  அடிக்க தெரிந்த டைரக்டர்(jeyam raja,dharani preferrable), மூன்றரை கிலோ ponds sandal talc (ஹீரோவுக்கு மட்டும்.), 1 விஜய்(double actla சத்தியமா வேண்டாம்டா).

இப்ப கதைக்கு போவோம்,
 இடி, மின்னல்,புயல், tornado , earth quake ,சுனாமி, இது அத்தனையும் வந்து ஸ்க்ரீன்ல அடிக்குது, அப்ப 'இளைய தளபதி விஜய்' நடிக்கும்னு போடறோம்.(புயல் அடிச்சத கூட பொறுத்துக்கலாம், "நடிக்கும்னு" போடுறானே ஆண்டவா!!!!)
ஹீரோ ஏதாவது ஒரு வேல செஞ்சு தொலையனுமே, இவர் ஒரு postmannu வெச்சுக்குவோம்.ஊர் ஊரா சைக்கிள்ல போய் தபால் குடுக்கறவரு. இவருக்கு எல்லா படத்துலயும் ஒரு  sportsla  தான் intro வெக்கணும், (கில்லி- கபடி, அடம் -ரன்னிங் race , குருவி - கார் race , காவலன் -boxing ). இதுல சைக்கிள் race.  சைக்கிள் race ல கலந்துக்க வந்துட்டிருக்கார் விஜய், வருஷ வருஷம் இவரே பந்தயத்துல ஜெயிச்சுட்டிருக்காருன்னு சொல்லி வில்லன் ஆளுங்க இவர வழிலேயே அடிக்கறதுக்கு நிக்கிறாங்க, அதே நேரத்துல எங்கடா இவன காணோமேன்னு இவரோட அல்லக்கைக groundla காத்துட்டு இருக்காங்க... வேற என்ன fightu தான்.fight அப்ப நம்ம gravitational  force ,force = Mass * Accelaration போன்ற physicsla மறந்தரனும். fighthu  முடுச்சுட்டு, பந்தயத்துல கலந்துக்கறார்.

கண்டிப்பா ஜெயிசிருவாருன்னு நெனச்சா, அங்க ஒரு ட்விஸ்ட். வேற ஒருத்தன் ஜெயிக்கிறான்.(வில்லன் அல்ல ). ஜெயிச்சவன், அந்த prize moneya வெச்சுத்தான், அம்மாவுக்கு ஆபரேஷன் பண்ணனும், தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணனும், அது தெரிஞ்சதுனால விஜய் விட்டு கொடுதிடராறு. அடுத்து என்ன intro சான்குதான்

நா அடிச்சா தர்மா அடி :
நா உதச்சா மின்னல் இடி:

 ஊர்ல உள்ள எல்லா பொன்னும் என்ன பாத்து கண்ணடி:
 அட நான்தாண்டா   இந்தியாவின்   "ஜான் எப் கென்னடி":

அரசியலுக்காக ரெண்டு வரி,

 இப்ப   உள்ள அரசியல் நாறுகின்ற சாக்கடை;
 நா வந்தா அரசியலும் ஆகுமடா பூக்கடை:

 இலங்கை  தமிழர்களுக்காக ரெண்டு வரி,

ஊருக்குள்ள பிரச்சனைனா எகுரிக்கிட்டு முந்தி அடி ;
இலங்கையில பிரச்சனைனா பிரதமருக்கு தந்தி அடி;

 தாய்மார்களுக்காக ரெண்டு வரி,

தமிழ்நாட்டு பொண்ணுக எல்லாம் எனக்கு அக்கா டா;
அவங்க வெக்கற மீன் கொழம்பு என்னைக்குமே பக்கா டா;

 அடுத்து அவர் தபால் பக்கத்து ஊருக்கு போறார், அங்க ரௌடிங்க ஒரு வீட்ல கொடுத்த கடன கேட்டு தொந்தரவு பண்ணிட்டு இருக்காங்க.... எல்லார்த்தையும் அடிச்சு துவம்சம் பன்றார். அந்த வீட்ல இருந்த அம்மா விஜய பார்த்து சொல்லுது,
அம்மா: நீங்க செஞ்ச உதவிக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரில தம்பி....
விஜய்: என்னம்மா பெரிய வார்தஎல்லாம் பேசிக்கிட்டு, எதோ என்னால முடுஞ்சத செஞ்சேன்....(75 வருஷம் ஆச்சு தமிழ் சினிமா வர ஆரம்பிச்சு, இன்னும் இந்த டயலாக் மட்டும் மாறுன பாடே இல்ல....)
  இந்த நிகழ்ச்சியெல்லாம் பக்கத்து வீட்ல இருந்து heroine பாத்துட்டே இருக்கு. விஜய் கிராஸ் பண்ணி போகும்போது அந்த பொண்ணோட துப்பட்டா விஜய் மூஞ்சில படுது, விஜயும் பாக்க , அவளும் பாக்க லவ் ஸ்டார்ட் ஆயிருச்சு, சாங் போடறோம்.

புயல் வந்து அடிச்சால் கூட சாயாமல் இருந்தவன்,
பூ வந்து மோதி இப்படி சாஞ்சுட்டேனே,
சிங்கம் வந்தால் கூட சண்டை போட்டவன்,
சிறு பெண்ணால் அமைதி ஆயிட்டனே....(நல்லா கவனிச்சு பாருங்க விஜயோட எல்லா படத்துலயும் இதேமாதிரி லைன் இருக்கும்.)

கொஞ்ச நாள் கழிச்சு, இவர் அடிச்சா வில்லனோட head ,(பிரகாஷ் ராஜ், கோட்டா சீனிவாச ராவ், அல்லது 120 கிலோ  ல யாரோ ஒருத்தன்.) விஜய்க்கு போன் பண்றான்.
"டேய் உன் ஊர்ல வெச்சு என் ஆளுகள அடிச்சுட்ட , என் ஊருக்கு வாடா நீ ஆம்பளையா இருந்தா!!!!"(ஆமா இது இந்தியா england matchu , இவரு homela வெச்சு defeat பண்ணிட்டாரு, இப்ப அவுரு homukku கூபிடராறு....)

இப்ப விஜய் ஆம்பளைன்னு நிரூபிக்க வில்லனோட ஊருக்கு கெளம்பிட்டாரு.... கேமரா மேல நடந்து வரார்....
டன் டன் ட ட டன் டன் டன் டன் ட ட டன் டன் டன் டன் ட ட டன் டன்.

-------------------------INTERMISSION (இனி அதிரடி ஆரம்பம் ) --------------------------------

To be continued....