Labels:

விஜய் படம்: PART 2

----------------------INTERMISSION(இனி அதிரடி ஆரம்பம் )---------------------------------

ஹீரோ இப்ப வில்லனோட ஊருக்கு வந்துட்டாரு.(அந்த ஊரு தென்காசின்னு வெச்சுக்குவோம்). ஹீரோயினும் மேல்படிப்புக்காக அதே ஊருக்கு  வராங்க.(Its a coincidence Damn it....). அங்க வில்லன் சொல்றதுதான் சட்டம். ஒரு நாள் ஒரு
கர்ப்பிணி பொண்ண கடன திருப்பி தரலைன்னு சொல்லி வில்ல ஆளுக அடிச்சு இழுத்துட்டு போறாங்க, அப்ப காப்பாத்தறார் விஜய்.
அந்த  பொண்ணு "இந்த வில்லன ஒழிக்க ஒருத்தன் வரமாட்டானான்னு காத்துக்கிட்டு இருந்தோம், கடவுள் மாதிரி வந்து காப்பாத்தினீங்க.... உயிரோட என் வைத்துல இப்ப குழந்தை இருக்குன்னா அதுக்கு நீங்க தான் காரணம் "னு சொல்லுது. விஜய பாக்க வந்த heroine அவங்க பேசிட்டு இருந்ததுல கடைசி வரிய(in blue) மட்டும் கேட்டுட்டா.
அதனால விஜய  பாத்து "உன்னையே நம்பி இருந்த என்ன ஏமாத்திட்டியே.... இனி என் மூஞ்சிலையே முளிக்காத"ன்னு சொல்லிடரா.
அங்க ஒரு சோக பாட்டு....

பால்நிலவே தேயாதே;
பனித்துளியே காயாதே ;

ரோஜா செடில இருக்கிற முள்ளே ரோஜாவ குத்துதம்மா; 
 பலாப்பழத்துல  இருக்கிற முள்ளே பழத்த  குத்துதம்மா ;

மீன்ல இருக்கிற  முள்ளு மீனையே குத்தலாமா;
வாட்ச்ல இருக்கிற முள்ளே வாட்ச குத்தலாமா;
 .......
அடுத்து ஹீரோ நேரா வில்லன் வீட்டுக்கு போறார்....

விஜய்: டேய்  எண்ணி ஏழு நாள்ல உன் சாம்ராஜ்யத்தையே அழிச்சு உன்னையும் கொல்ரண்டா.....
வில்லன் : இது தென்காசி டா....என் கோட்டை டா....
 விஜய்: டேய் திருப்பாச்சி சிவகாசி யே  பாத்தவன்டா  தென்காசி எனக்கு தூசி டா.... 
BGM     :(தள தள தள  தள  தளபதி.... எங்கள் இளைய தளபதி.....
             தல தல தல தல தலைவிதி..... முடுஞ்சுது எதிர்த்தவன் தலவிதி.... )

அப்படியே கட் பண்ணி ஓபன் பண்ணா சாங்.
அந்த ஊர்ல கோவில் பண்டிகை,கோவில்ல சாங்.
industrya விட்டு விரட்டப்பட்ட , serialla சான்ஸ் தேடிட்டு இருக்கிற ஒரு heroine (eg மாளவிகா,நமீதா,சோனா.) வெச்சு item சாங்....
நா போடப்போறேன் ஆட்டம்;
கூடுது டா நல்ல கூட்டம்;

ஒடஞ்சுது உன்  சட்டம்;
பலிச்சுது என் திட்டம்;

இந்த பாட்ல விஜயோட ஹிட் படம்லா வரணும்,
காதலுக்கு மரியாதை தந்தவன் டா;
திருப்பாச்சில பொறந்தவன் டா;
சிவகாசில வளந்தவன் டா;
வில்லன கில்லி மாதிரி அடிச்சவன் டா;
காட்டுல குருவி, கடல்ல சுறா, கிரிக்கெட்ல சச்சின் டா....

எல்லார்த்த விட முக்கியம், சிங்கம் பெத்த புள்ள; புலி போட்ட குட்டி, டைனோசர் போட்ட  முட்டை, இந்த மாதிரி SAC ய புகழ்ந்தரனும்....


அடுத்து வில்லனோட அல்லக்கைகள போட்டு தள்றார்....
அல்லக்கை No 1:(In Phone)
விஜய் :       உன் right hand, கடா குமாரு,
                       இப்ப படா பேஜாரு;
வில்லன்  : டே டே டே டே டேய்....

அல்லக்கை No 2:(In Phone)

விஜய்:         உன் left hand , கேடி ரவி, இப்ப பாடி ரவி
வில்லன்:   டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

இதுக்கு நடுவுல friend பன்ன advicela heroine மனம் திருந்தி, ஹீரோவ வந்து கட்டி புடுச்சு அழுகறா.... அப்புறம் என்ன, last குத்து பாட்டுதான்....
1 கோடிக்கு செட் போடறோம். அந்த செட்ட டான்ஸ் ஆடியே ஹீரோ ஓடச்சிருவார்.
கொய்யாபழம் கொய்யாபழம்
நா  கடிச்ச நகா பழம்.
பழம் நழுவி பாலில் விழும்;
தாலி கட்டுனா காலில் விழும் ;
 

அடுத்த நாள் heroina வில்லன் கடத்திடுறார். விஜய் தேடிட்டு வில்லன் வீட்டுக்கு போறார். எதிர்த்து வர்ற ஆளுக எல்லார்த்தையும் அடிச்சு நொறுக்கறார். கடைசியா heroinea வில்லன் கூட்டிட்டு ஒரு இருட்டான எடத்துக்கு போறார். விஜயும் அங்க போறார்.
ஹீரோ, வில்லன், heroine.... ஒரே இருட்டு, ஒரு gunshot.....
யார் செத்தா?
யார் செத்தா?
யார் செத்தா?
வேற யாருங்க சாவா?
வழக்கம்போல audience தான்....

Labels:

'விஜய்' படம் எடுப்பது எப்படி?

தேவையான பொருட்கள்:
 industryla topla இருக்கிற heroine , அரை load அருவா,
  60 டாட்டா சுமோ, 6 செல்போன் ,50 அடியாள் ,2 வில்லன், 4 அல்லக்கைக (தாமு,வையாபுரி,விவேக்,சிட்டி பாபு preferrable ) மொக்க மியூசிக் டைரக்டர்,(dsp , மணி ஷர்மா,ஸ்ரீகாந்த் தேவா preferrable .) ,நன்கு copy  அடிக்க தெரிந்த டைரக்டர்(jeyam raja,dharani preferrable), மூன்றரை கிலோ ponds sandal talc (ஹீரோவுக்கு மட்டும்.), 1 விஜய்(double actla சத்தியமா வேண்டாம்டா).

இப்ப கதைக்கு போவோம்,
 இடி, மின்னல்,புயல், tornado , earth quake ,சுனாமி, இது அத்தனையும் வந்து ஸ்க்ரீன்ல அடிக்குது, அப்ப 'இளைய தளபதி விஜய்' நடிக்கும்னு போடறோம்.(புயல் அடிச்சத கூட பொறுத்துக்கலாம், "நடிக்கும்னு" போடுறானே ஆண்டவா!!!!)
ஹீரோ ஏதாவது ஒரு வேல செஞ்சு தொலையனுமே, இவர் ஒரு postmannu வெச்சுக்குவோம்.ஊர் ஊரா சைக்கிள்ல போய் தபால் குடுக்கறவரு. இவருக்கு எல்லா படத்துலயும் ஒரு  sportsla  தான் intro வெக்கணும், (கில்லி- கபடி, அடம் -ரன்னிங் race , குருவி - கார் race , காவலன் -boxing ). இதுல சைக்கிள் race.  சைக்கிள் race ல கலந்துக்க வந்துட்டிருக்கார் விஜய், வருஷ வருஷம் இவரே பந்தயத்துல ஜெயிச்சுட்டிருக்காருன்னு சொல்லி வில்லன் ஆளுங்க இவர வழிலேயே அடிக்கறதுக்கு நிக்கிறாங்க, அதே நேரத்துல எங்கடா இவன காணோமேன்னு இவரோட அல்லக்கைக groundla காத்துட்டு இருக்காங்க... வேற என்ன fightu தான்.fight அப்ப நம்ம gravitational  force ,force = Mass * Accelaration போன்ற physicsla மறந்தரனும். fighthu  முடுச்சுட்டு, பந்தயத்துல கலந்துக்கறார்.

கண்டிப்பா ஜெயிசிருவாருன்னு நெனச்சா, அங்க ஒரு ட்விஸ்ட். வேற ஒருத்தன் ஜெயிக்கிறான்.(வில்லன் அல்ல ). ஜெயிச்சவன், அந்த prize moneya வெச்சுத்தான், அம்மாவுக்கு ஆபரேஷன் பண்ணனும், தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணனும், அது தெரிஞ்சதுனால விஜய் விட்டு கொடுதிடராறு. அடுத்து என்ன intro சான்குதான்

நா அடிச்சா தர்மா அடி :
நா உதச்சா மின்னல் இடி:

 ஊர்ல உள்ள எல்லா பொன்னும் என்ன பாத்து கண்ணடி:
 அட நான்தாண்டா   இந்தியாவின்   "ஜான் எப் கென்னடி":

அரசியலுக்காக ரெண்டு வரி,

 இப்ப   உள்ள அரசியல் நாறுகின்ற சாக்கடை;
 நா வந்தா அரசியலும் ஆகுமடா பூக்கடை:

 இலங்கை  தமிழர்களுக்காக ரெண்டு வரி,

ஊருக்குள்ள பிரச்சனைனா எகுரிக்கிட்டு முந்தி அடி ;
இலங்கையில பிரச்சனைனா பிரதமருக்கு தந்தி அடி;

 தாய்மார்களுக்காக ரெண்டு வரி,

தமிழ்நாட்டு பொண்ணுக எல்லாம் எனக்கு அக்கா டா;
அவங்க வெக்கற மீன் கொழம்பு என்னைக்குமே பக்கா டா;

 அடுத்து அவர் தபால் பக்கத்து ஊருக்கு போறார், அங்க ரௌடிங்க ஒரு வீட்ல கொடுத்த கடன கேட்டு தொந்தரவு பண்ணிட்டு இருக்காங்க.... எல்லார்த்தையும் அடிச்சு துவம்சம் பன்றார். அந்த வீட்ல இருந்த அம்மா விஜய பார்த்து சொல்லுது,
அம்மா: நீங்க செஞ்ச உதவிக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரில தம்பி....
விஜய்: என்னம்மா பெரிய வார்தஎல்லாம் பேசிக்கிட்டு, எதோ என்னால முடுஞ்சத செஞ்சேன்....(75 வருஷம் ஆச்சு தமிழ் சினிமா வர ஆரம்பிச்சு, இன்னும் இந்த டயலாக் மட்டும் மாறுன பாடே இல்ல....)
  இந்த நிகழ்ச்சியெல்லாம் பக்கத்து வீட்ல இருந்து heroine பாத்துட்டே இருக்கு. விஜய் கிராஸ் பண்ணி போகும்போது அந்த பொண்ணோட துப்பட்டா விஜய் மூஞ்சில படுது, விஜயும் பாக்க , அவளும் பாக்க லவ் ஸ்டார்ட் ஆயிருச்சு, சாங் போடறோம்.

புயல் வந்து அடிச்சால் கூட சாயாமல் இருந்தவன்,
பூ வந்து மோதி இப்படி சாஞ்சுட்டேனே,
சிங்கம் வந்தால் கூட சண்டை போட்டவன்,
சிறு பெண்ணால் அமைதி ஆயிட்டனே....(நல்லா கவனிச்சு பாருங்க விஜயோட எல்லா படத்துலயும் இதேமாதிரி லைன் இருக்கும்.)

கொஞ்ச நாள் கழிச்சு, இவர் அடிச்சா வில்லனோட head ,(பிரகாஷ் ராஜ், கோட்டா சீனிவாச ராவ், அல்லது 120 கிலோ  ல யாரோ ஒருத்தன்.) விஜய்க்கு போன் பண்றான்.
"டேய் உன் ஊர்ல வெச்சு என் ஆளுகள அடிச்சுட்ட , என் ஊருக்கு வாடா நீ ஆம்பளையா இருந்தா!!!!"(ஆமா இது இந்தியா england matchu , இவரு homela வெச்சு defeat பண்ணிட்டாரு, இப்ப அவுரு homukku கூபிடராறு....)

இப்ப விஜய் ஆம்பளைன்னு நிரூபிக்க வில்லனோட ஊருக்கு கெளம்பிட்டாரு.... கேமரா மேல நடந்து வரார்....
டன் டன் ட ட டன் டன் டன் டன் ட ட டன் டன் டன் டன் ட ட டன் டன்.

-------------------------INTERMISSION (இனி அதிரடி ஆரம்பம் ) --------------------------------

To be continued....

Labels:

பொண்ணுங்க ஏன் சீன் போடறாங்க?

*பொண்ணுங்க ஏன் சீன் போடறாங்க?
*கால மிதிச்சா 'அம்மா' ன்னு கத்தாம ஏன் 'ouch ' ன்னு கத்தறாங்க?(ஒரு வேலை அவங்க அம்மா பேர் 'ouch ' ஒ??)
*shah rukh khan படத்தையும்,harry potter படத்தையும் ஏன் FDFS பாக்றாங்க?
*facebookla friend request குடுத்தா ஏன் அக்செப்ட்  பண்ண மாட்டீங்கறாங்க?
*நம்ம சாட் பண்ணாலும் ஏன் offline போறாங்க?(சில பேர் walla block கூட பண்றாங்க{சொந்த விருப்பு வெறுப்பு }.)
*தமிழ் தெரிஞ்சாலும் ஏன்  engishla பேசறாங்க?

இப்படி இனம் புரியாத கேள்வியோட வாழ்ந்து கொண்டிருக்கும் 77 .737 % இளைஞர் சமுதாயத்தில் நானும் ஒருத்தன்.
இன்னைக்கு கூட ஒரு பொண்ண பார்த்தேன் , சும்மா ஜீன்ச போட்டுட்டு அப்படி ஒரு catwalk.(jeanla ஓட்டையா illa  genela ஒட்டையான்னு தெரில.)விடை:

இதுக்காக , massachusetts institute of technology ல இருக்கிற பொண்ணுகள வெச்சு ஆராய்ச்சி பண்ண முடியாட்டி கூட mathammal sheela institute of technology ல இருக்கிற  பொண்ணுகள வெச்சு ஒரு ஏழு  நாள்  டெஸ்ட் எடுக்க சொன்னோம் .   ஒரு பொண்ண நெறைய பேர் சைட் அடிக்கிற இடத்திலையும்,இன்னொரு பொண்ண யாருமே கண்டுக்காத  இடத்திலையும் ஏழு நாள் இருக்க சொன்னோம் .
நெறைய பேர் சைட் அடிச்சா பொண்ணோட சீன் 7 %  அதிகமாயிருக்கு  , யாருமே கண்டுக்காத பொண்ணோட சீன் 8 .3 % குறைஞ்சிருக்கு.
இதனால நம்ம தெரிந்து கொள்ள வேண்டியது , இவளுக போடற seenukku 87 % பசங்க தான் காரணம்.

 மிச்ச 13 % காரணம் தமிழ் சினிமா. இன்னைக்கு வரைக்கும் "kurudanukku  ரோடு கிராஸ் பண்ணி விடறது","கோவில் பிரசாதத்த வாங்கி பிச்சக்காரனுக்கு குடுக்கறது" ன்னு பொண்ணுகளுக்கு மாஸ் சீன் வெய்க்க வேண்டியது.


அதனால ஒரு ஆறு மாசத்துக்கு நம்ம எந்த பொண்ணுக்கும்
பிரெண்ட் request குடுக்காம, 
 chat பண்ணாம,
சைட் அடிக்காம , 
அவங்க போடற மொக்க status கு 'like ' போடாம,
அவங்க அக்கா பொண்ணு போட்டோவ facebookla போட்டா 'so cute -)-)-)-) ' னு கமெண்ட் போடாம,
recharge பண்ணி  விடாம,
இந்த மாதிரி பொண்ணுகள பத்தி blog எழுதாம,
இருந்தாலே,பொண்ணுங்க சீன கொரச்சுக்குவாங்க.....
இந்த தேசம் மாறிடும்.

என்றைகய்யா திருந்தும் இத்தேசம்;
தாங்கள் என்ன செய்வதாய் உத்தேசம்;

Labels:

ஒரு தல ரசிகனின் புலம்பல்

ஒரு தல ரசிகனின் புலம்பல்

                 தல fan என்று  சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!!!


பெயர்:                           அஜித் ரசிகன் 
பிடித்த உணவகம்:       'தல'ப்பாக்கட்டு 
பிடித்த உணவு:             'தல'கறி
பிடிக்காத உணவு:        போட்டி (போட்டியே இருக்கக்கூடாது
பிடித்த இடம் :              திருப்பதி
பிடிக்காத இடம்:           திருப்பாச்சி,சிவகாசி
பிடித்த விளையாட்டு: மங்காத்தா
சமீபத்திய எரிச்சல்:     யோகன்
சமீபத்திய ஆறுதல்:    சுறா, காவலன்,வேலாயுதம்.
   

 இவ்வளவு ஏன், கிரிக்கெட் விளையாடும்போது பூவா தலையா போடும்போது கூட 'தல விழகூடாது'ன்னு நெனைக்கிறவன் நான்!!!!

நான் வெறித்தனமான தல fan ஆனதுக்கு அப்புறம் தலயோட  ப்ளாப் படங்கள பார்த்து நொந்த அனுபவம் இதோ:
தேதி:13 - 01 -2006 
இடம்: அபிராமி தியேட்டர், ஈரோடு


ரிலீஸ் ஆகறதுக்கு முன்னாடி, தல , பி வாசுகிட்ட பரமசிவன் கதைய கேட்ட உடனே கட்டி புடுச்சு பாராட்டுனாருன்னு ஒரு பேச்சு  இருந்துது(தல, நீங்க ஜைஹிந்த் படம் பார்த்ததே இல்லையா????). நானும் ஸ்கூல் முடிஞ்சு 6 மணி ஷோவுக்கு 6 .05 க்கு தான் போனேன். டிக்கெட் இருக்காதுன்னு நெனச்சா, இருந்துது.(அப்பவே மைல்டா ஒரு டவுட் வந்துது!!).உள்ள போனா ஜைஹிந்த் பட ரீமேக். இத விட கேவலமா படம் எடுக்கவே முடியாதுன்னு நெனச்சுட்டு 'ஆதி' படம் பார்த்தா, பரமசிவன விட கேவலமா இருக்கு(அதுல ஒரு சந்தோசம் )....

தேதி:14 -04 -2006 
இடம்:சத்யா தியேட்டர், தாராபுரம்
 
   
அடிச்சு புடிச்சு டிக்கட்ட வாங்கி படமும் பார்த்தாச்சு....படம் முடிஞ்சு வெளிய வந்தா, என் பிரெண்ட் கேக்கறான், படத்துல அஜித் ஹீரோவா இல்ல பேரரசு ஹீரோவான்னு?? DUMBSTRUCK .

தேதி:12 -01 -2007 
இடம்:s v ராம் தியேட்டர்,தாராபுரம்

 தியேட்டர்ல இருந்த கட் அவுட் ல போட்டிருந்த டயலாக் 'போக்கிரிகளை பந்தாட வரும் ஆழ்வாரே வருக வருக....'.
டிக்கட்ட வாங்கிட்டு உள்ள போய் உக்காந்தாச்சு,தியேட்டர்ல 'ஆழ்வாரை' விட 'அழுவோரை' தான் பாக்க முடிஞ்சுது.
பக்கத்துக்கு தியேட்டர்ல 'பல்லு வெளக்காம பத்து டேக் எடுத்து பஞ்ச் டயலாக் பேசறவன்' படம் பட்டய கெளப்பிட்டு இருந்துது.

 தேதி:25- 10 -2008 
இடம்:மகாராஜா மல்டிப்ளெக்ஸ்,கோயம்புத்தூர்

2௦௦ ருபாய் குடுத்து டிக்கெட் வாங்கிருந்தேன்.தல டான்சும் காமெடியும் ஒரே படத்துல ட்ரை பண்ணா எப்படி இருக்கும், 'ஏகன்' மாதிரி தான் இருக்கும்.
 வராத டான்ச வா வான்ன எப்படி வரும்??
 
தேதி: 05 -02 -2010 
இடம்:செந்தில் தியேட்டர், கோயம்புத்தூர்.

காலைல 6 மணிக்கு ஷோ, நைட்டே போய் தியேட்டர்ல உக்காந்துட்டோம். ரசிகர் மன்றத்துலல்லாம் போய் முதல் டிக்கெட்(s001) வாங்கி வெச்சுருந்தேன். 
தல வெறியோட உள்ள போனவங்கள  கொல வெறியோட வெளிய வரவெச்சுட்டியே தல!!!!.


இந்த மாதிரியெல்லாம் இல்லாம மங்காத்தா நல்லா இருக்கணும்னு தவம் கிடக்கும் அஜித் ரசிகன்.