Team meeting

நம்ம மதிய சாப்பாடு முடிச்சிட்டு , மெதுவா உள்ள போவோம். போகும்போதே மீட்டிங் ஆரம்பிச்சு 5 நிமிஷம் ஆயிருக்கும்.
மேனேஜர்: என்னப்பா மீட்டிங்க்கு இப்படி லேட்டா வர்ற???
நான்:சாரி, எனக்கு மீட்டிங் இருக்குன்னே தெரியாது....
மேனேஜர்: காலைல மெயில் அனுப்பினேன், பாக்கல???

'ஏன்யா , நீ உக்காந்திட்டிருக்கற chair'a 90 டிகிரி  திருப்புனா உன் தொப்ப என் மேல இடிக்கற அளவுக்கு பக்கத்துல இருந்துக்கிட்டு, மீட்டிங் இருக்கறத வாய்ல சொல்லாம, மெயில்ல தான் அனுப்புவியா?? ' அப்படின்னு கேக்க தோணும்,
 ஆனா நம்ம கண்ணாடி ரூம்ல, குழு குழு ACல , ஜாக்கி ஜட்டி போட்டு, லூயிஸ் பிலிப் சட்டய டக் இன் பண்ணி உக்காந்திட்டிருக்கற ஒரு corporate employee, இப்படியெல்லாம் கேள்வி கேக்க கூடாதுன்னு ஒரு கோட்பாடு/சித்தாந்தம் இருக்குன்னு ஞாபகத்துக்கு வரும்.
'சாரி, அடுத்த தடவ டைம்க்கு வந்துடறேன்'னுட்டு உக்காரவேண்டியதுதான்.

ITல ஒரு டீம்ன்னு எடுத்துகிட்டா, இப்பதான் கம்பனிக்கு வந்த freshers சில பேர், கொடுக்கற வேலைய அமைதியா செய்யற சில பேர், வேலைய செஞ்சுட்டு over build up கொடுக்கற பல பேர் ,onsite இன்னும் கிடைக்கலயேன்னு கவலைல சில பேர், onsite போய்ட்டு வந்துட்டு 'நான்தான் நான்தான் 'ன்னு குதிக்கிற சில பேர்ன்னு ஒரு 10 - 15 பேர் இருப்பாங்க.

இதுவரைக்கும் Team/Project கடந்து வந்த பாதை என்ன?, இனிமே நம்ம போக போறது சிங்க பாதையா பூப்பாதையா சுரங்கப்பாதையான்னு seriousa discuss பண்றதுக்குதான் team meeting.

 Manager ஆரம்பிப்பார, 'Let us start with positive points, போன quartera விட இந்த quarter நல்ல customer satisfaction index வந்திருக்கு, incident count கொறஞ்சிருக்கு...' அப்டீன்னு பொதுவா ப்ராஜெக்ட் பத்தி பேசிட்டு, team membersக்கு வருவார்....

 மொதல்ல freshers கிட்ட கேப்பார் , "Howz environment here? everything ok?" அவங்களும் ஓகேன்னு சொல்லுவாங்க.... "You r lucky to be in this project ,work pressure இருக்காது, நல்ல technology, career growth நல்லா இருக்கும், 2 -3 yearsல onsite oppurtunity எல்லாருக்கும் இருக்கும்". இப்படி 3 வருஷத்துக்கு முன்னால நா சேரும்போது சொன்ன அதே டயலாக்க வரி மாறாம சொல்லுவார்....  'சார் இந்த "நல்ல learning curve "இருக்கும்'ங்கறத சொல்ல மறந்துடீங்கன்னு நமக்கு சொல்ல தோணும்.

Teamல சில பசங்க ego, appraisal, rating, onsite, இத எல்லார்த்தையும் விட்டுட்டு, எல்லாரோடையும் நல்லா பேசிட்டு, குடுத்த வேலைய மட்டும் பண்ணிட்டு போயிட்டு இருப்பானுக , அவங்கள பாத்து "உங்களுக்கு teamல visibilityயே இல்ல. Onsite managerக்கு உங்க பேர் கூட தெரில.... நீங்க teamமோட இன்னும் நல்லா mingle ஆகணும்"ன்னு சொல்லுவார் .

"இன்னும் சில பேருக்கு ஒழுங்கா மெயில் கூட அனுப்ப தெரில,Presentation கெல்லாம் ppt create பண்ணி present பண்ண தெரில...technical work மட்டும் தெரிஞ்சு presentation ,mail etiquette தெரிலன்னா team lead position வர்றதே கஷ்டம் பாத்துக்கோங்க"ன்னு  நம்மள குத்திக்காட்டுற மாதிரியே சொல்லுவார்.

"ஆமா, power point presentation ,mail etiquette மட்டும் தெரிஞ்சு technical workகே தெரிலன்னா easyயா manager positionku வந்துரலாம்" அப்டீன்னு  நமக்கு சொல்ல தோணும்,   'corporate...! corporate...! இப்படியெல்லாம் பேச கூடாது'ன்னு control பண்ணிக்க வேண்டியது தான்.



சில பேர் வேலையும் செஞ்சுட்டு , பில்ட் அப்பும் கொடுத்துட்டு,Dependancy create  பண்ணி வெச்சுக்கிட்டு இருப்பாங்க, அவங்க தான் heroes. அவங்களுக்குதான் 'Keep up the good work' எல்லாம்.

IT வேலைல முக்கியமான ஒன்னு Dependancy.
Dependancyனா என்ன?
நம்ம பாக்கற ஏதாவது ஒரு வேலய யாருக்கும் சொல்லி தர கூட்டாது.
நம்ம வேலையே காலைல ஒரு தடவ சாய்ந்தரம் ஒரு தடவ username password கொடுத்து ஒரு servera login பண்ணி run_daily.batch அப்டிங்கற ஒரு fileல double click பண்றதா தான் இருக்கும்.
ஆனா அத யாருக்கும் சொல்லி தர கூடாது. நம்ம ரெண்டு நாள் office வரலன்னா projecte ஸ்தம்பிச்சு போயரனும். Onsite manager, நம்ம personal numberக்கு கால் பண்ணனும். அப்பத்தான் visibility கிடைக்கும்.

சில பேர் onsite கிடைக்கலன்னு கடுப்புல இருக்கறது managerக்கு தெரியும். அவங்க கிட்ட "Next month உனக்கு VISA initiate பண்ணிரலாம்" அப்டின்னு வாக்குறுதி கொடுத்துருவார். 
manager சொன்ன ஒரு வார்த்தைய நம்பிட்டு , காலைல எழுந்திருச்ச உடனே மொத ஆளா போய் ஆபீஸ தெறந்து வெச்சு,
night வரைக்கும்  எல்லா வேலையும் இழுத்து போட்டு செஞ்சு
பத்தாயிரத்துக்கு friendsக்கு treat வெக்கறது;
ஐம்பதாயிரத்துக்கு shopping பண்றது,
வீட்ல சொல்லி ஜாதகத்த தரகர் கிட்ட கொடுத்து 'UK/US மாப்பிள்ளை'ங்கற tagஓட பொண்ணு பாக்க சொல்றது,
இப்படி எல்லாம் பண்ணிரவே கூடாது.... 'visa initiate பண்றேன்' அப்டின்னு manager வாக்குறுதி கொடுக்கறது , தர்மசேனா கொடுக்கற LBW decision மாதிரி, சும்மா சும்மா கேட்டுட்டே இருக்கானேன்னு கொடுத்துருவாரு....
அடுத்து decision review மாதிரி,  meeting போட்டு, lotல  select ஆகல , projectல budget இல்ல,onsiteல vacancy இல்ல, அது இதுன்னு சொல்லி சமாளிச்சிருவாங்க ...Onsite போறது, flightல கால் எடுத்து வெக்க வரைக்கும் உறுதி இல்ல.

அடுத்து ப்ராஜெக்டோட future plans, Automation அப்படி  இப்படின்னு ஏதாவது பேச ஆரம்பிப்பார். அப்படியே தூக்கம் சொக்கிடும்.
ஒரு 10 நிமிஷம் கழிச்சு "நவநீதகிருஷ்ணன்,அமைதியாவே உக்காந்திருக்கீங்க, do you have any queries/suggestions or shall we finish it off?ன்னு மேனேஜர் குரல் கேக்கும்.
'Nothing, we can finish'ன்னு சொல்லிட்டு வெளிய போனா, ஒரு fresher வந்து கேப்பான்,

"என்னண்ணா, ரெண்டு வருஷத்துல onsite அனுப்புவாங்களா?"

அவள்

சோழிங்கநல்லூர் சிக்னல், லேசான மின்னல்,AC பஸ் ஜன்னல், செம அழகா ஒரு பொண்ணு. வேகமா போய் அதே பஸ்ல ஏறி அவ உக்காந்திருந்த கடைசி சீட் பக்கத்துல போய் நின்னேன்.
வழக்கமான IT பொண்ணுங்க மாதிரி தூரத்துல பாத்தா செம அழகா தெரிஞ்சிட்டு, கிட்டத்துல படு மொக்கையா இல்லாம, இவ Close upலயும் செம அழகா இருந்தா.
பக்கத்துல உக்காந்திருக்கற ரெண்டு பசங்க friends கிட்ட பேசிட்டு இருந்தா.மூணு வருஷம் ITல இருந்ததுக்கு அப்புறம், ஒரு அழகான பொண்ணு ரெண்டு மூணு பசங்க கிட்ட பேசிட்டு இருந்தா வைத்தெரிச்சல் எல்லாம் வர்றதே இல்ல....உடம்பு அதுவா பல hormones, enzymesஓட சேர்த்து  gelusilலும் secrete பண்ண ஆரம்பிச்சிருச்சு போல....

அவள பாத்துட்டே நின்னுட்டு இருந்தேன்....

9th standardல ஒரு தடவ எங்க வாத்தியார் கேட்டார், "உலகத்துலேயே அழகானது என்ன?'ன்னு.... நாங்களும் ஐஸ்வர்யா ராய்ல இருந்து அடுத்த வீடு அல்சேசன் நாய் வரைக்கும் ஏதேதோ சொன்னோம்.
அவர் சொன்னார் 'இந்தியா தாண்டா உலகத்துலேயே அழகு, குங்குமப்பூ பூக்கற kashmir valley,அழகா ஓடற rivers அதோட branches, தங்கம் வைரம் விளையற இடங்கள்,
-30 degree C பனிப்பாறைல இருந்து +45 degree C பாலைவனத்து வரைக்கும் உள்ள climates, சாப்பாடுக்கு கொஞ்சம் கஷ்டம்நாலும் அவ்ளோ அழகா இருக்கற North eastern states.....
அதோட , இன்னும் யாருமே எட்டி பாத்தராத மலை சிகரங்கள், யாருமே கால் வெக்காத காடுகள், அந்த காலத்து பழைய பாரம்பரியத்துல இருந்து நேத்து வந்த technology வரைக்கும் உள்ள infrastructure.... இன்னும் எவ்வளவோ இருக்கு
அந்த காலத்துல இருந்து இந்தியாவோட வளம் தெரிஞ்சவங்க எல்லாருமே அத ஆளனும்னு ஆசப்பட்டிருப்பாங்க...."

இப்ப இவள பாத்தா உடனேயும் அவர் சொன்னது தான் ஞாபகம் வந்துச்சு. குங்குமப்பூ பூத்த kashmir valley மாதிரி கன்னம்,வைரம் விளைஞ்ச வாய், நதி மாதிரி அவ கை, branches மாதிரி அவ விரல்,
சாப்பாடுக்கு கொஞ்சம் கஷ்டம் மாதிரி தெரிஞ்சாலும் அவ்ளோ அழகா இருக்கற அவ இடுப்பு, இன்னும் யாருமே எட்டி பாத்தராத மலை சிகரங்கள், காடுகள்,அவ சிரிச்சா -30 degree அவ மொறச்சா +45 degree,
நம்ம ஊரு பாரம்பரியமா,தலைல மல்லிகைப்பூ, கைல latestடா வந்த iPhone5...இன்னும் எவ்வளவோ அழகு....
அந்த பஸ்ல அவள பாத்தவங்க எல்லாருமே அவள ஆளனும்னு நினைச்சிருப்பாங்க....

ரொம்ப நேரம் அவள  நின்னு பாத்துட்டே வந்துட்டு இருந்தேன்....



ஆனா அவ வெளியுறவு கொள்கையும் இந்தியா மாதிரியேதான் இருந்துச்சு....பக்கத்துல உக்காந்திருந்த அவளோட friends ரெண்டு பேரும் அவள கடுப்பேத்திட்டே வந்திட்டு இருந்தாங்க.... அவ அவங்கள திட்டவும் முடியாம உக்காந்திட்டு இருந்தா....
அதுலயும் ஒருத்தன் அப்பப்ப எல்லை மீறி அவ தோல் மேல கை போட்டான்.... அந்த கையக்கூட 5 நிமிஷம் கழிச்சு தான் தட்டி விட்டா....
நானும் அவ பக்கத்துலையே, அவ கண் பார்வை கொஞ்சமாவது என மேல திரும்பாதான்னு இலங்கை தமிழர் மாதிரி நின்னுட்டு இருந்தேன்....
அவ என்ன கடைசி வரைக்கும் என்ன பாக்க கூட இல்ல.....

அன்னைக்கு fulla அவ ஞாபகமாவே இருந்துச்சு....
நைட் வீட்டுக்கு வந்து கதவ திறந்தேன்..... கிழிஞ்ச லுங்கிய கட்டிட்டு, ஒரு முன்டாஸ் பனியனோட, கால் மேல கால் போட்டு அவ ஆட்டிட்டு இருந்தா.....
ஆமா, தமிழ் சினிமால வர்ற மாதிரியே காலைல இருந்து,parking token போடறவன்ல இருந்து என் friends வரைக்கும்,பாக்கற எல்லாமே அவளாவே தெரிஞ்சாங்க....

night மணி மூணு ஆச்சு, ஊரே தூங்கற நேரம், கொலைகாரன், கொள்ளைக்காரன் கூட தூங்கியிருப்பான். ஆ ராசா , கனிமொழி , கல்மாடி, சோனியா கூட நிம்மதியா தூங்கியிருப்பாங்க, எனக்கு தூக்கமே வரல....

ஒரு வழியா விடிஞ்சுது , இருக்கறதுலையே நல்ல சட்டை எடுத்து போட்டுட்டு, இன்னைக்கு எப்டியாவது அவள பாக்க வெச்சரனும்னு கிளம்புனேன்.அவ எப்படியும் அதே நேரத்துல தான் ஆபீஸ் போவா, அதே பஸ்ல வருவான்னு ஒரு நம்பிக்கை....

நேத்து நின்ன அதே இடத்துல போய் நின்னேன்.Time ஆச்சு அதே bus வந்துது.... ஓடி போய் ஏறி ஒவ்வொரு சீட்டா பாத்துட்டே அவ உக்காந்திருந்த அந்த கடைசி சீட்டுக்கு போய் பாத்தேன்....
.
.
.
.
.
.
.
.

பாத்தா ,,, அங்க அவள  விட சூப்பரா வேற ஒரு figure....  நேத்து பாத்த அவளோட ஞாபகம் எல்லாம் மறந்து போச்சு....

அவ்வளவுதான் வாழ்க்கை.....

சிங்கம் 2


சூர்யா , தூத்துக்குடி துறைமுகத்துல நடக்கற சட்ட விரோத செயல்கள புடிக்கறத்துக்காக கொஞ்ச நாள் தூத்துக்குடில NCC masterரா இருந்து உளவு பாக்கறார்(அதான் as per Tamil cinema, binocular வெச்சு பாக்கறார்). அப்புறம் DSPயா charge எடுத்துக்கிட்டு criminalsa arrest பன்றார்.

சூர்யா படம் முழுக்க வெரப்பாவே திரியரார். Police officerரா இருக்கும் போது அப்படி இருந்தா பரவால்ல, NCC masterரா இருக்கும் போது கூட கம்முக்குட்டுக்குள்ள கத்திய சொருகுன மாதிரி வெரப்பாவே இருக்கார்.
திடீர்னு தூத்துக்குடி DSPயா charge எடுக்காறார், திடீர்னு Operation D commanderரா charge எடுக்காறார். ஏதோ laptop bagல இருந்து charger எடுக்கற மாதிரி பொசுக்கு பொசுக்குன்னு பெரிய பெரிய postsக்கு charge எடுத்துக்கறார்.

Heroines எல்லாம் படத்துக்கு படம் அழகாவாங்க.... இந்த படத்துல வர்ற அனுஷ்கா, ஹன்ஸிகா, அஞ்சலி மூணு பேரும் போன படத்த விட இந்த படத்துல இன்னும் அகலமாயிருக்காங்க....மிச்சபடி பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்ல....

படத்துல 'மயில்வாகம் மாதிரி powerfull வில்லன் missing. இந்த படத்துல மூணு வில்லன் இருக்காங்க. ஹன்சிகாக்கு Ipad password தெரிஞ்சு போச்சுங்கர காரணத்துக்காக, Ipad password change பண்ணாம, சொந்த பொண்ணுன்னு கூட பாக்காம ஹன்சிகாவாயே கொலை பண்றது ரொம்ப ஓவர்.

படத்துல நாலாவது வில்லன் DSP. அப்டியே சிங்கம் 1 songs CDய எடுத்து ரெண்டு பாட்ட slow பண்ணி, ரெண்டு பாட்ட fast forward பண்ணி போட்டுட்டார். BGMல அத கூட பண்ணல, அப்படியே சிங்கம் 1 BGMம edit பண்ணாம போட்டுருக்கார்.



கடைசி 20 நிமிஷம் International criminalல புடிக்கறதுக்காக சூர்யா South Africa போறார்.பாவம், அறிவாள் இல்லாம, Tata சுமோ இல்லாம, பனைமரம் இல்லாம, 1100 phone இல்லாம, 'Road roughஆ இருக்குன்னு driver சொன்னான், weather toughஆ இருக்குன்னு பைலட் சொன்னான்'
மாதிரி rhyminga டைலாக் வெக்க முடியாம கடைசி 20 நிமிஷம் ஹரி ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கார்.
எதுக்கு ஸார் நமக்கு வெளிநாடு எல்லாம், இருக்கவே இருக்கு Democratic Republic of காரைக்குடி, Peoples Republic of தூத்துக்குடி, அங்கயே வெச்சு வழக்கம்போல படத்த முடிக்க வேண்டியது தானே.....

அப்புறம்,First partக்கும் இதுக்கும் பெரிய சம்பந்தம் ஏதும் இல்ல. sequelங்கரதுக்காக தியாகு, நிழல்கள் ரவி, விவேக், நாசர் , ராதாரவி(with same old beautiful wig) வந்து போறாங்க.

'Over the குருவி' action sequences, ரொம்ப சுமாரான கடைசி 45 நிமிஷம், சுமாரான பாட்டு இன்னும் பல குறை இருந்தாலும், படத்தோட speed, நாலஞ்சு மாஸ் சீன்ஸ், அனுஷ்காவோட சிங்கம் dance இந்த குறைகளையெல்லாம் manage பண்ணிருது.

kuttychuvar.com Verdict: between OK and GOOD


மும்பை இந்தியன்ஸ் - விமர்சனம்

இதுவரை:

ஆரம்பத்துல Teamக்கு பேர் வைக்கும்போதே , எதோ மிச்சவங்க  எல்லாரும் சவுத் சூடான்ல இருந்து  வந்த மாதிரி, இவங்க மட்டும் மும்பை 'இந்தியன்ஸ்'ன்னு பேர் வெச்சாங்க....
இதுவரைக்கும் 4 கேப்டன், 8 coach, 10 wicket keeper , 22 opening pair மாத்திட்டாங்க ஆனா அஞ்சு IPLல ஒரு வெங்கல கிண்ணம் கூட வாங்கல....

இப்போ:

கேப்டன் :  VRS வாங்கி வீட்ல விட்டத்த பாத்து படுத்து rest எடுத்துட்டு இருந்த Ricky Pontinga கூட்டிட்டு வந்து ஒரு foriegn player slota தியாகம் பண்ணி கேப்டனா போட்ருக்காங்க.... இதுக்கு பின்னாடி என்ன logicன்னு சத்தியமா தெரில....




Batting : Nita Ambani TVல சேனல் மாத்தும்போது, ஏதாவது ஒரு sports channelல்ல ஏதாவது ஒரு நாட்டோட county matchல எவனாவது ஒரு six அடிக்கறத பாத்துட்டா  அடுத்த நாளே flight புடிச்சு போய் ரெண்டு கோடி குடுத்து contract sign பண்ணி அவன கூட்டிட்டு வந்து அடுத்த மேட்ச்சே opening ஆட விட்ருவாங்க.... அவன் நம்ம ஊர் condition செட் ஆகாம மொக்கையா விளையாட , மூணாவது matchல இருந்து தண்ணி bottle தூக்க போட்ருவாங்க....
Davy Jackobs, Richard Levy, Graham Napier, Ryan Mclaren, James Franklin, Ashraful ,Aiden Blizzard இப்படி பல 'Mumbai Bottlewalas'அ  உருவாக்கி விட்டிருக்காங்க....
இப்படி அஞ்சு IPLஆ சுமார் ஒரு 22 opening pair மாத்தி இப்ப கடைசியா Sachin Pontingக்கு வந்து நிக்கறாங்க....
Teamல middle order தான் கொஞ்சம் strong. ஒரே ஒரு classic cover drive தெரிஞ்சு வெச்சுக்கிட்டு அஞ்சு ஆறு வருஷமா இந்திய டீம்ல benchல ஓட்டிட்டு இருக்கிற Rohit Sharma(ஆனா IPLனா ஆக்ரோஷம் பொங்கிரும்),Dinesh Karthik, Ambati Rayudu, Pollardன்னு யாருக்காவது ரெண்டு பேருக்கு கிளிக் ஆனாக்கூட நல்ல ஸ்கோர் அடிச்சிருவாங்க....
Mumbai Indians கூட ஜெயிக்க ஒரு ஈசியான வழி, opening pair wicketa எடுக்கவே கூடாது.... ரெண்டு பேரையும் full innings நிக்க வெச்சா ,20 ஓவருக்கு எப்படியும் 132/0 ரன் எடுப்பாங்க, அத ஈசியா அடிச்சு ஜெயிச்சிரலாம். atleast ரெண்டு பேரையும் ஒரு 12,13 over நிக்க வெச்சா கூட போதும்.
அப்புறம் வழக்கமா Mumbai Indiansல cricketல இருந்து ஒதுக்கப்பட்டவர்கள், வாழ்விழந்தவர்கள், வாழாவெட்டிகளுக்குன்னு  ஒரு slot இருக்கும். இதுவரைக்கும் Jayasurya , Symonds, Franklin இருந்தாங்க, இந்த தடவ அந்த slotக்கு Ponting, Jacob Oramன்னு ரெண்டு பேர் இருக்காங்க....

Bowling:  Munaf Patel, Ojha, Dhawal Kulkarni - நாலு பேரும் அப்படியே typical Indian bowlers, திடீர்னு ஒரு பெரிய batsmana first பாலே bowled பண்ணுவாங்க, திடீர்னு ஒரு ballக்கு ஆறு ரன் அடிக்கனும்கரப்போ 11th basmana six அடிக்க விடுவாங்க....
Bajji - Teamல experience ஆன bowler. எல்லா bowlerசும் நல்லா போடும்போது  இவரும் நல்லா போட்டு ஒப்பேத்திருவாறு, எல்லார் பாலையும் opposite team அடி பின்னும்போது Bajji போட்டா அவர் பால பஜ்ஜி போட்ருவாங்க....
teamla ஒரே நம்பகமான bowler Malinga தான்.... கடந்த நாலு IPLலா Malingava வெச்சுதான் ஓட்நாங்க , இந்த தடவையும் அப்டிதான்.

Fielding: Munaf Patel, Ojhaன்னு காலால fielding பண்ற fielders இருந்தாலும், Rohit Sharma, Rayudu, Pollard மாதிரி நல்ல fielderசும் இருக்காங்க. Straight, Long on, Deep  Midwicketன்னு  சுமார் ஒரு ரெண்டரை acre of the grounda Pollard மட்டுமே cover பண்ணிருவாரு....

கோச்: Anil Kumble, John Wright, Robin Singh, Shuan Pollock.. etc., இப்படி  Batting Coach, Fast Bowling coach,Spin Bowling coach, Fielding coach, Fitness coach அது இதுன்னு sleeper coach, AC II Tier coach தவிர எல்லா coachஉம் வெச்சிருக்காங்க....
அப்படியே ஒரு software company மாதிரி 11 பேர் கொண்ட teama உக்காந்து manage பண்றதுக்கு 15, 20 பேர்.

இந்த தடவ cup ஜெயிக்குமா??
Openingல கொஞ்ச அடிச்சு ஆடுற ஆள எறக்கி விட்டு, எல்லா மேட்ச்சும் Pollarda 18.4 வது overல எறக்காம கொஞ்சம் முன்னாடியே எறக்கி விட்டு, கொஞ்ச matchக்கு teama set ஆக விட்டு, எல்லார்த்துக்கும் மேல,Finalல CSK தோத்தா, Mumbai Indians cup ஜெயிக்கறதுக்கு தம்முத்தூண்டு வாய்ப்பு இருக்கு....

மேனேஜருக்கு ஒரு பகிரங்க கடிதம்

மறுபடியும் March மாசம் வந்தாச்சு, Appraisal, Rating, Band, Bucket, Dependancy, One on one meeting  பொடலங்கா, புண்ணாக்குன்னு மொத்த officeம் ரத்த பூமி ஆயிருக்கும்.

எப்படியும் நம்ம expect பன்ற Ratingக விட  கம்மியா தான் வரும். அந்த வெறுப்புல அப்படியே போய் மேனேஜர் கிட்ட discussion பண்ணிட்டு ரூம விட்டு வெளிய வந்த கையோட ஒரு employee எழுதுற கடிதம்....

'Certification முடிச்சியா?, Competency முடிச்சியா?, Companyக்குasset create பண்ணியா? Cross fuctional training attend பண்ணியா?? Training conduct பண்ணியா?? fun eventsல dance ஆடுனியா? கொஞ்சி விளையாடும் எங்கள் குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்தாயான்னு' கட்டபொம்மன் rangeக்கு கேக்கறீங்களே ஒரு நாளைக்கு 9 hours projectக்கு  வேல பாத்தனே , அது உங்க கண்ணுக்கு தெரியலையா??

எங்கயோ இருந்து codeஅ  cut copy பண்ணி , நடுவுல நடுவுல மானே தேனே பொன்மானே போட்டு paste பண்ணியும் , MS Excel, MS Powerpointல கலர் கலரா படம் போட்டும் தான்  மொத்த projecte ஓடிட்டு இருக்குன்னு தெரிஞ்சும்,'projectக்காக innovativeஆ என்ன பண்ணிருக்கன்னு' வாய் கூசாம கேக்கறீங்களே, MS Excelலயும் Cut,copy pasteலயும் என்னய்யா innovation பண்ண முடியும்??

முக்கியமா வேல இருந்தப்போ, உடம்பு சரி இல்லாம லீவ் போட்டுட்டா attitude சரி இல்லன்னு குதிக்கரீங்களே ,Appraisal முடிஞ்சு எல்லாருக்கும் rating போட்டுட்டு அடுத்த ரெண்டு நாளைக்கு sick லீவ் போட்டுட்டு எஸ் ஆகுரீங்களே , அப்ப உங்க attitude, latitude, longitude பத்தி எல்லாம் ஒரு நிமிஷமாவது நெனச்சு பாத்தீங்களா??



Ratingகும்  போட்டுட்டு , " இது என்னோட சொந்த decision மட்டும் இல்ல, This decision is taken on discussing with 'Higher Management' , Onsite counterpart and all stakeholders involved in the project and incorporated with the process of curve fitting of the company's territorial legislation of the integration of the independant quarterly performance of the company and the customer satisfaction......" அப்படி இப்படின்னு ஏதேதோ புரியாத terms சொல்லி  ஏன்யா மழுப்புறீங்க??

Communication skills இன்னும் improve பண்ணனும், Analytical abilityய sharpen  பண்ணனும், Team work இன்னும் flexiblea இருக்கணும், Interpersonal skills நல்லா காமிக்கணும்,Proactiveness காது வழியா வழியனும்ன்னு சொல்றீங்களே, இந்த வார்த்தைய எல்லாம் முன்ன பின்ன dictionaryல பாத்தது உண்டா??

அப்படியே கம்மியா வேல செஞ்சிருந்தாலும் நல்ல rating போட்டா தான் என்ன?? 1947க்கு முன்னாடி வெள்ளைக்காரன் ஏமாத்தி புடுங்கிட்டு போன காசுல 1 % காச software company திருப்பி அவங்க கிட்ட இருந்து ஏமாத்தி புடுங்கிட்டு இருக்காங்க, அப்படி புடுங்குன காசுல 1 % employeesக்கு சம்பளமா குடுக்கறாங்க , அந்த காசுல 1 % வருஷா வருஷம் incrementa தராங்க, அந்த இத்துனூண்டு காச குடுக்கறதுக்கு , Fixed depositல Lakshmi vilas bankல போட்டு வெச்சிருக்கற சொந்த காச குடுக்கற மாதிரி ஏன்யா feel பண்றீங்க??,

இத எல்லார்த்தையும் கூட பொறுத்துக்கலாம்,ஆனா Discussion முடிஞ்ச அப்புறம், "நா உன் personal frienda சொல்றேன்,
Lifeங்கறது ஒரு Slow cycling race, பாத்து நிதானமா தான் ஓட்டனும்,
Lifeங்கறது ஒரு கபடி போட்டி, அடுத்தவன் கால வார்நாதான் மேல வர முடியும்
Lifeங்கறது ஒரு Lifebuoy சோப்பு, ............................ " இப்படியெல்லாம் தயவு செஞ்சு கருத்து மட்டும் சொல்லாதீங்க ப்ளீஸ்.
 

'B E ' - Episode 3 'முதல் BEER'

First yearல ஒரு நாள் , நானும் இன்னும் ரெண்டு friendsum பேசிட்டு இருந்தோம்....

friend கேட்டான் 'மச்சி இன்னைக்கு நைட் beer குடிப்பமா??'

மொத தடவ இந்த வார்த்தைய கேக்கும்போது உள்ளுக்குள்ள 49 % பயம் வந்தாலும் 51 % சந்தோசமாவும் இருந்திச்சு
பேச்சுவார்த்தை முடிவுல, நா ஒத்துக்கிட்டேன், ஆனா இன்னொரு friend ஒத்துக்கல....
'மூணு பேரும் TASMAC போறோம், நாங்க ரெண்டு பெரும் அடிக்கறோம், நீ company மட்டும் குடு' ன்னு அவனையும் convince பண்ணி ready ஆனோம்...
ஆனா நாங்க மூணு பேருமே சின்ன வயசுல சரக்கு bottlea எடைக்கு  போட்டு குச்சி ஐஸ் வாங்கி தின்னத தவிர, சரக்கு, பார், டாஸ்மாக் பத்தி எதுவுமே தெரியாது....
So,இதப்பத்தி கொஞ்சமாவது தெரிஞ்ச ஒரு experienced professionala hire பண்றதுன்னு முடிவு பண்ணோம்.... Civil Departmentல என் friend Prem இருந்தான், அவன கூப்பிடறதா முடிவு பண்ணோம். அவனோட experience  என்னன்னா ,அவன்  இதுக்கு முன்னாடி மூணு தடவ  அவங்க அண்ணன் சரக்கு அடிக்கும்போது company குடுத்திருக்கான்..

நாலு பேரும் TASMACக்கு கெளம்புனோம்....நமக்கு தான் தெரியுமே, தமிழ்நாட்ல TASMACa தேடி எல்லாம் கண்டுபுடிக்க தேவ இல்ல, ஏதாவது ஒரு town busல ஏறி, எந்த பஸ் ஸ்டாப்ல எறங்கி lighta  ஒரு 6 degree திரும்பி பாத்தா கண்டிப்பா ஒரு TASMAC இருக்கும்....



யாராவது பாத்துருவாங்களோன்னு பயந்து பம்பிகிட்டே 'மங்கையின் மோகம்'  படத்துக்கு morning show  போற மாதிரி உள்ள போனோம்..
அப்படியே ஒரு ஓரமா table புடிச்சு நாலு பேரும் உக்காந்தோம்....

மூணு பேர் தான் அடிக்க போறோம் , 1 பீர் சொல்லுவோம். friend சொன்னான் ,
ரெண்டு நிமிஷத்துல supplier வந்தார்

Supplier: என்ன வேணும்?
நாங்க: ஒரு பீர்...
Supplier: ஒரே பீரா?
(என்னடா ஒரு பீரான்னு கேவலமா கேக்கரறேன்னு யோசிச்சிட்டு, )
நாங்க: இல்லன்னா ரெண்டு பீர் குடுங்க....
Supplier(வேகவேகமா): Kingfisher strong இல்ல lehar தான் இருக்கு, 5000 cooling இல்ல, Bullet தான் கூலிங் இருக்கு , தரட்டுமா??
நாலு பேரும் ஒருத்தர் ஒருத்தர மூஞ்சிய பாத்தோம், அவர் என்ன கேக்கரார்னு நாலு பேருக்குமே புரியல....
நாங்க: 'ஆங்க் ஓகே நா, அதே தாங்க, அப்படியே mixingக்கு எனக்கு ஒரு அரை லிட்டர் coke, மச்சி உனக்கு??', பிரேம் கிட்ட கேட்டேன்,
Prem: எனக்கு தண்ணி போதும் மச்சி....1 water pocketன்னா....
பக்கத்து tableல்ல இருக்கரவன்லா திரும்பி பாத்து சிரிச்சாணுக....
அந்த supplier  நாலு போரையும் ஒரு நாலு நிமிஷம் பாத்தான்,
Supplier:First time சரக்கு அடிக்கறீங்களா??
நாங்க:ஆமான்னா
அவரே போய் பீர், sidedishலா எடுத்துட்டு வந்தார்..
"பீருக்கெல்லாம் mixing பண்ண கூடாது,பீர் கூலிங்கா இருந்தாதான் கசப்பு தெரியாது, bottleஓட அடிக்கறத விட டம்ளர்ல ஊத்தி அடிச்சா கொஞ்சம் கசக்காம இருக்கும்,  பீர் அடிக்கும்போது periodicalஆ தம் அடிச்சா இன்னும் நல்லா மப்பு ஏறும்" இந்த மாதிரி வாழ்க்கைக்கு தேவையான adviceல்லாம் குடுத்தார்.....அப்பவே நாங்க நாலு பேரும் அவரோட நல்ல friends ஆயிட்டோம்..

மூணு பேரும் cheers அடிச்சு,மொதல் sip வெச்சோம்...மூணு பேர்  கிட்டயும் ஒரே reaction,'என்னடா taste இவ்வளவு கேவலமா இருக்கு???' 'அப்ப தெரில,பிற்க்காலதுல இதே கேவலமான tasteக்காக தான் வீட்ல புக் வாங்கனும்னு பொய் சொல்லி காசு வாங்கப்போறோம், பல scholarshipa வீட்டுக்கு தெரியாம ஆட்டைய போட போறோம்,Advanced Java Programming கிளாஸ் எடுக்க வர்ற madam வரைக்கும் கடன் வாங்க போறோம்னு....



மூணு பேரும் ஆளுக்கு ஒரு பீர் அடிச்சோம்....எவ்வளவு சொல்லியும் இன்னொருத்தன் அடிக்கவே இல்ல....sidedish மட்டும் தின்னான்....உலகத்துல எல்லா சரக்கடிக்கற கோஷ்டிலையும் sideல உக்காந்து sidedish மட்டும் திங்கரதுக்குனே atleast ஒருத்தன் இருப்பான்....

மூணு பேருக்கும் நல்லா மப்பு ஏறிடுச்சு....'டேய் நம்மல்லா கெத்து மச்சி , நம்மள அசைக்க முடியாது அது இதுன்னு' overa வாய் பேசிக்கிட்டு மங்காத்தா படம் morning show முடிச்சு வெளிய வர்ற மாதிரி TASMACa விட்டு வெளிய வந்தோம்....

நாலு பேரும் ,chess boardல bishop move ஆகர மாதிரி  crossஆவே நடந்து ஒரு வழியா ரூமுக்கு போனோம்....
நாங்க சரக்கு அடிக்க போன விஷயம் hostella சில பழங்களுக்கு தெரிஞ்சு போச்சு,
எங்கள பாத்த உடனே வந்து  ஆரம்ப கட்டத்துல சரக்கடிக்கறவன் கிட்ட தொன்று தொட்டு கேக்கற மொக்கை கேள்விய கேட்டானுக, ரெண்டு விரல காட்டி 'இது எவ்வளவுன்னு சொல்லு??'
அதுக்கு தொன்று தொட்டு வழக்கமா போடற 'இது விரல் மச்சி' ன்னு repeat மொக்கைய போட்டுட்டு படுத்து தூங்குனோம்....

                                                                                                      - தொடரும் 

அலெக்ஸ் பாண்டியன்

என்னடா பொங்கலுக்கு வந்த படத்துக்கு காலம்போன காலத்துல முப்பது நாள் லேட்டா review எழுதிருக்கானேன்னு பாக்காதீங்க, படமே முப்பது வருஷம் லேட்டா தான் வந்திருக்கு. அதுக்கு இது ஒன்னும் பெருசு இல்ல.

கதை: அதை இன்னும் தேடிட்டு இருக்கோம். அடுத்த பொங்கலுக்குள்ள எப்படியாவது கண்டுபுடிச்சு reviewல update பண்ண try பண்றேன்.

அனுஷ்கா வர்ற சில scenes, இத்துணுண்டு காமெடி, நிகிதா, சனுஷா வர்ற சில scenes, இப்படி பொருக்கி எடுத்து பாத்தா,மொத்த படத்துல ஒரு பதிமூணு நிமிஷம் பாக்கற மாதிரி இருக்கும்.

படத்துல வில்லனோட தம்பிக்கு மொட்டை அடிக்கற scene ஒன்னு இருக்கு,  மலைக்கோட்டை படத்துல வந்த 'நாய்' scene, சுறா படத்துல வந்த laptop கடத்தற scene, பில்லா  2 படத்துல வந்த contonment கடத்தற scene, இந்த மாதிரி தமிழ் சினிமால வரலாற்று முக்கியத்துவம் பெற்ற சீன்கள்ல இந்த scene கண்டிப்பா இருக்கும்....



சும்மா timepassக்கு ஒரு தடவையாவது படம் பாக்கலாமா??:

நீங்க தனியா வீட்ல இருக்கீங்க, current போயிருச்சு, timepassக்கு பக்கத்துல friendsum இல்ல, எங்கயாவது வெளிய போலாம்னா, உங்க ஊர்ல entertainmentக்கும் ஏதும் இல்ல, ஒரே ஒரு theatre மட்டும் தான் இருக்கு, அதுல அலெக்ஸ் பாண்டியன் தான் ஓடுது - இப்படி ஒரு நெலம வந்தாலும் (எனக்கு வந்துச்சு),

உங்க friend, ஒரு தீவிரமான அனுஷ்கா fan, 'படம் பாக்க கம்பெனி மட்டும் குடுடா நா ticket,intervella popcorn,bike parking காசு உட்பட எல்லாத்தையும் sponsor பண்றேன்'னு சொன்னாலும் 

இவ்வளவு ஏன்?, நீங்க அலெக்ஸ் பாண்டியன் படத்துக்கு கூட்டிட்டு போகலைன்னா , நா பக்கத்துக்கு வீட்டு தினேஷ் கூட ஓடிப்போயிருவேன்னு  உங்க  lover சொன்னா கூட,

தயவு செஞ்சு படத்த பாத்தராதீங்க....


தமிழ்நாடு அரசே, muslims பாதிக்க படுவாங்கன்னு  'விஸ்வரூபம்'
படத்த release ஆகறதுக்கு முன்னாடியே பாத்து, தடை பண்றீங்கோ, ஒட்டு மொத்த தமிழ் நாட்டையும் பாதிக்கிற இந்த அலெக்ஸ் பாண்டியன் மாதிரி படத்தையும் முன்னாடியே பாத்து தடை பண்ணிட்டீங்கன்னா, எல்லாரும் நல்லா இருக்கலாம்ல.

kuttychuvar verdict:  THU....